• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்து நாளில் இந்த விசயங்களை மறக்காமல் செய்யுங்கள்... துஷ்ட சக்திகள் ஓடிப்போய்விடும்

Google Oneindia Tamil News

சென்னை: வாஸ்து பூஜை செய்வதற்கு வியாழக்கிழமை மிகவும் உகந்த நாள். இந்த நாளில் புதிய வீடு கட்ட வாஸ்து செய்ய, புதிய மனை வாங்க மிக விசேஷமானது. வீட்டை திருஷ்டி சுற்றி போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும் செல்வ வளம் பெருகும்.

அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர்.

 Vasthu day: Vasthu Pooja on Aaipasi month importance and benefits

மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும். உறக்கத்தில் இருந்த வாஸ்துபகவான் விழிக்கும் நாளில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்யலாம்.

வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீர்மானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அதிபதியே ஸ்ரீ வாஸ்து புருஷர் ஆவார். இவர் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் ஆகும்.

கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.

சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை. ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது.

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேனும் தனக்கான சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும். சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ கட்ட நினைப்பவர்கள், வாஸ்து நாள் எனும் இந்த அற்புத நாளில் பூமி பூஜை செய்தல் அல்லது அதற்கான வேலைகளைத் துவங்கினால் மிக சிறப்பாக உங்களின் சொந்த வீடு ஆசை நிறைவேறும். சொந்த வீடு கட்டும் போது வாஸ்து முறைப்படி சரியாக கட்டுவது அவசியம்.

சிலர் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், சொந்த வீட்டில் குடியிருந்தாலும், தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கால் காசு தங்கவில்லை. கடன் அதிகரிக்கிறது, உடல்நல பிரச்னை என பலர் புலம்புவதுண்டு. சிலரோ தண்ணீர் பிரச்னை, வாடகை அதிகம் என பிரச்னைகள் இருந்தாலும் வீடு அதிர்ஷ்டமாக இருக்கிறது என சொல்பவர்களும் உண்டு.

உங்கள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்பட, வாஸ்து நாள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் வீட்டை திருஷ்டி சுற்றி போடுவதால் தீமை நீங்கி நன்மை உண்டாகும். வீட்டிற்கு திருஷ்டி சுற்றுவது அவசியம். தேங்காய், எலுமிச்சை அல்லது பூசணிக்காய் வைத்து வீட்டை திருஷ்டி கழியுங்கள். இல்லையென்றால் ஒரு கற்பூரத்தால் வீட்டை திருஷ்டி கழித்து வீட்டின் வாசல் முன் கொளுத்துங்கள்.

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க பாதிப்பு நீங்கி நலம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியம் தெளிக்கலாம். தண்ணீரில் மஞ்சள், கல் உப்பு கலந்து வீட்டை சுற்றி தெளிக்கலாம். வீட்டின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும்.

English summary
Thursday is the best day to perform Vastu Puja. On this day it is very special to buy new land, to build a new house. If the house is surrounded by greed, the negative forces in the house will be removed and the positive forces will increase and the wealth will increase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X