• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வார ராசி பலன் : இந்த வார ராசி பலன் : ஜூன் 18, 2021 முதல் ஜூன் 24,2021 வரை

|

சென்னை: ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரம் ரிஷப ராசியில் ராகு, புதன், மிதுன ராசியில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் செவ்வாய், விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குரு இந்த வாரம் வக்ர பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் 22ஆம் தேதி கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சந்திரன் இந்த வாரம் கன்னி, துலாம், விருச்சிக ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம், மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணிகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் 18, 2021 முதல் ஜூன் 24,2021 வரை பலன்கள் எப்படி இருக்கும், பரிகாரங்களைப் பார்க்கலாம். இந்த வாரம் பாபஹர தசமி, சக்கரத்தாழ்வார் ஜெயந்தி, ருண விமோசன பிரதோசம், ஜேஷ்டாபிஷேகம், பௌர்ணமி விரதம் போன்ற பல முக்கிய பண்டிகைகள் உள்ளன.

கிரகங்களின் சஞ்சாரம்

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மிதுன ராசி
சந்திரன் - கன்னி, துலாம், விருச்சிகம்
செவ்வாய் - கடகம்
புதன் - ரிஷபம்
குரு - கும்ப ராசி
சுக்கிரன் - மிதுனம் 22ஆம் தேதிக்கு மேல் கடக ராசிக்கு மாறுகிறார்
சனி - மகர ராசி
ராகு - ரிஷப ராசி
கேது - விருச்சிக ராசி

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, திறமையும் தன்னம்பிக்கையும் அதிகம் உங்களுக்கு இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் ராகு, புதன், மூன்றாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், நான்காம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் கேது,பத்தாம் வீட்டில் சனி, லாப வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வார மத்தியில் ராசி நாதன் செவ்வாயுடன் இரண்டாம் அதிபதியும் களத்திர ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் இணைகிறார். முயற்சி ஸ்தானத்தில் உள்ள சூரியன் சுக்கிரன் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தரும். வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் தரும். புதன் ராகு சேர்க்கையால் வார்த்தைகளில் கவனம் தேவை. பேச்சினால் சில சிக்கல்கள் வரலாம் வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. அடுத்தவர்கள் விசயங்களில் தலையிட வேண்டாம். பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும். சுக்கிரன் செவ்வாயுடன் இணைவதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். சுப காரிய செலவுகள் வரும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். காதல் கனிந்து திருமணத்தில் முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார தொடக்கத்தில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில் சந்திராஷ்டமம் உள்ளது. ஜூன் 22 ஆம் தேதி காலை 08.59 முதல் 24 ஆம் தேதி காலை 09.10 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்களுடைய தெளிவான பேச்சு உங்களுடைய மதிப்பு மரியாதையை அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் ராசியில் ராகு,புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராசிநாதன் தன குடும்ப ஸ்தானத்தில் பயணிப்பதால் குடும்பம் குதூகலமாக இருக்கும். சுப செலவுகள் இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். வார மத்தியில் ராசிநாதன் சுக்கிரன் வார மத்தியில் மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாயுடன் இணைகிறார். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் அதிர்ஷ்டம் தேடி வரும்.திடீர் வாய்ப்புகள் வரும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் வரும். மனதை சந்தோஷப்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெறும். குருவின் பார்வை சுபமாக இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.
வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் அலட்சியமாக இருக்காதீர்கள். எதிர்பார்க்காத வருமானம், அதே போல சுப செலவுகளும் வரும் மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்குள் சூரியன், சுக்கிரன், இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் ராகு, புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார மத்தியில் உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன் இரண்டாம் வீட்டில் உள்ள செவ்வாயுடன் இணைகிறார். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். அவசரப்பட்டு உங்களின் ஆரோக்கியம் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அஷ்டமத்து சனியால் தடைகள் வரும் தடைகளை தாண்டி முன்னேற குரு உதவி செய்வார். குருவின் பார்வை குதூகலத்தைக் கொடுக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருங்கள். காதல் விசயங்கள் கை கூடி வரும் என்றாலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்கவும் நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசியில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் ராகு,புதன் விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார மத்தியில் விரைய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் ராசியில் உள்ள செவ்வாயுடன்
இணைகிறார். இந்த வாரம் உங்களுக்கு திடீர் வருமானமும் சுப விரைய செலவுகளும் வரும். கும்பத்தில் உள்ள குரு குதூகலத்தைக் கொடுப்பார். வார மத்தியில் குரு சந்திர யோகம் தேடி வரும் என்பதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் வருமானத்தில் லாபம் கிடைக்கும் உங்களுக்கு லாபம் ஆதாயம் அதிகரிக்கும். வேலையில் திடீர் மாற்றங்கள் கிடைக்கும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதன், ராகுவின் பயணம் வருமானத்தை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக இந்த வாரம் முயற்சி செய்யலாம். திடீர் யோகங்கள் வரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் ராகு,புதன், லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன்,விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார மத்தியில் செவ்வாய்,விரைய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் உடன் இணைகிறார். ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் லாபம் வரும். பண வருமானம் வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். விரைய ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சமடைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் நிதானம் தேவை. வங்கி கடன் கிடைக்கும். சுபரான குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும் காலம் வந்து விட்டது.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் ராகு,புதன், பத்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார மத்தியில் சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு வந்து இணைகிறார். இந்த வாரம் உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சனிபகவான் யோகத்தை தருவார். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இரட்டிப்பு லாபம் கை கூடி வரும். இந்த வாரம் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். குரு பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இந்த வாரம் உங்களின் முன்னேற்றத்திற்கு ஆலோசனையும் உதவியும் கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் வக்ரமடைந்து சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்து விசயத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் சஞ்சலம் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாருடன் பிரச்சினை உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராசிக்குள் இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் ராகு, புதன், ஒன்பதாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன், சந்திரன் சஞ்சாரமும் சாதகமாக உள்ளதால் திடீர் அதிர்ஷ்டம் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைகளை தாண்டி சாதிப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை தீரும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த வாரம் பேச நன்மைகள் நடைபெறும். சனிபகவான் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் ராகு, புதன், எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் வார மத்தியில் ஒன்பதாம் வீட்டில் உள்ள செவ்வாயுடன் இணைகிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவைப்படும். பேச்சில் நிதானம் அவசியம். அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். கூடுதல் விழிப்புணர்வு தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும். பயணங்களில் அதிக கவனம் தேவையிருக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். விட்டுக்கொடுத்து செல்லவும். இந்த வாரம் அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேச வேண்டாம். மன குழப்பம் நீங்க குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் கவனம் தேவை. திடீர் செலவுகள் வரும். பணம், விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளவும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் ராகு,புதன், ஏழாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் அவசியம். ஏழாரை சனி காலமாக இருப்பதால் சுப காரியங்கள் புதிய முயற்சிகள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். இந்த வாரம் பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் வேண்டாம். அதே நேரத்தில் நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு நினைத்த காரியம் நடைபெற பொறுமை தேவை வெற்றிகள் கை கூடி வரும். கடன் பிரச்சினை நீங்க ருண விமோசன பிரதோஷ நாளில் கடனை அடைக்கலாம். பிரதோச விரதம் இருந்து சிவனை வணங்க நோய்கள் குணமடையும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு ஐந்தாம் வீட்டில் ராகு,புதன், ஆறாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன் ஏழாம் வீட்டில் செவ்வாய்,லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குரு வக்ரமடைவதால் உங்களுக்கு காரிய வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் வந்தாலும் சுப காரிய செலவுகள் தேடி வரும். பிள்ளைகளால் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். நடக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லதாகவே இருக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேகமான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம் சிக்கலை ஏற்படுத்தும். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த வாரம் பேச வேண்டாம் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பௌர்ணமி நாளில் விரதம் இருந்து சத்ய நாராயண பூஜை செய்ய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் ராசியில் குரு, ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு,புதன், ஐந்தாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், ஆறாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது கவனம் தேவை. காதலிப்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காரணம் ஆறாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நிகழ்வதால் எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாக பேசி பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. மாணவர்களுக்கு சில குழப்பங்கள் வரலாம் புதிய கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்யவும். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் சாதகமாக இல்லை. ஜூன் 18ஆம் தேதி அதிகாலை 04.07 மணி முதல் ஜூன் 20ஆம் தேதி காலை 07.42 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வு அவசியம். பணம் கடனாகக் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். உடல் உபாதைகள் வரும் நோய்களுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஏழரை சனியில் விரைய சனியாக இருப்பதால் சுப விரைய செலவாக மாற்றுங்கள்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு,புதன், நான்காம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக உள்ளது. தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் உங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்க வேண்டாம் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பதும் அவசியம். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கவும் கூடும். உறவினர்களிடத்தில் பேசும் போது கோபத்தை குறைத்து நிதானமாக பேசவும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் நிதானம் தேவை. நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் மத்தியில் சாதகமாக இல்லை. ஜூன் 20ஆம் தேதி காலை 07.42 மணி முதல் 22ஆம் தேதி காலை 08.59 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வு அவசியம்.

English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X