• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இந்த வார ராசி பலன் : செப்டம்பர் 24 , 2021 முதல் செப்டம்பர் 30,2021 வரை

Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது வாரம் இந்த வாரத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன்,சுக்கிரன், விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் மேஷம்,ரிஷபம், மிதுனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 24 , 2021 முதல் செப்டம்பர் 30,2021 வரை பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - கன்னி ராசி
சந்திரன் - மேஷம், ரிஷபம், மிதுனம்
செவ்வாய் - கன்னி ராசி
புதன் - துலாம் ராசி
குரு - மகர ராசி
சுக்கிரன் - துலாம்
சனி - மகர ராசி
ராகு - ரிஷப ராசி
கேது - விருச்சிக ராசி

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திரன் இந்த வாரத்தில் உங்கள் ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஏழாம் வீட்டில் சுக்கிரன்,புதன், எட்டாம் வீட்டில் கேது பத்தாம் வீட்டில் சனியும் குருவும் பயணம் செய்கின்றனர். புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் நிறைய விஷேசங்கள் உள்ளன. கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது. நல்ல செய்திகள் தேடி வரும் நினைத்த காரியம் நிறைவேறும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். புதன்,சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் யோகம் அதிகமாக உள்ளது. புதிய விசயங்களை முயற்சி செய்யுங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. வருமானம் அதிகரிக்கும். திருமண யோகம் கை கூடி வரும்.
ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளதால் எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நோய்கள் நீங்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனக்குழப்பம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தர்மகர்மாதிபதி யோகம் கை கூடி வந்துள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று ஆலய தரிசனம் செய்வீர்கள். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம். சகோதர சகோதரிகளின் வீட்டில் சுப காரியம் நடைபெறும். குடும்ப உறவுகளிடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சங்கடஹர சதுர்த்தி, மகாபரணி நாளில், விநாயகர் ஆலயத்திற்கும் காளி கோவிலுக்கும் சென்று வழிபட பாதிப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன், புதன், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களின் பாக்ய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலிமையடைந்துள்ளது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நிறைய நல்லது நடக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயர்பதவிகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஆறாம் வீட்டில் ராசி நாதன் உடன் புதன் இணைந்துள்ளதால் கடன் பிரச்சினைகள் நீங்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சொத்து பிரச்சினை நீங்கும். நிறைய நன்மைகள் நடைபெறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருமண யோகம் கை கூடி வரும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. ராகு ராசியில் இருந்தாலும் குரு பார்வை கிடைப்பதால் திடீர் யோகங்களும் வருமானமும் தேடி வரும். விபரீத ராஜயோகத்தால் எதிர்பாராத பண வரவு வரும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். உறவுக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கம். மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்வதில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இந்த வாரம் முன்னோர்களை வழிபட்டு அன்னதானம் கொடுங்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு நான்காம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்,புதன், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, குரு வக்ர நிலையிலும் பயணம் செய்கின்றனர். ராசிக்கு அதிபதி நான்காம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திறமைக்கும் முயற்சிக்கும் ஏற்ற வேலை கிடைக்கும். சாதகமான வாரம் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும் வாரமாகும். தொழில் ரீதியான வெற்றி கிடைக்கும். ராசி நாதன் புதன் சுக்கிரன் உடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் புது. வேலைக்கு அப்ளை செய்யலாம், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றம் வெற்றிகரமாக ஏற்படும். திடீர் திருமண யோகம் தேடி வரும். வரன் பேசி முடிக்கலாம்.
திருமணம் நடைபெற்று பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தவர்கள் மீண்டும். ஒன்று சேருவார்கள். மாணவர்களுக்கு மன அறிவும் தெளிவும் ஏற்படும். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அஷ்டமத்து சனி இருந்தாலும் குருபகவான் இணைந்திருப்பதால் பாதிப்புகள் நீங்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

கடகம்

கடகம்

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, நீங்கள் கடைமையை சரியாக செய்து முடிப்பீர்கள். இந்த வாரம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், செவ்வாய், நான்காம் வீட்டில் சுக்கிரன்,புதன், லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருக்கும் போது வாரம் தொடங்குகிறது. சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் சுப செலவுகள் ஏற்படும். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்துவீர்கள். சனி பகவான் பார்வையுடன் குருவின் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சுக்கிரன்,புதன் சஞ்சாரத்தினால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. புதிதாக காதல் உருவாகும். பிரிந்த காதலர்கள் கூட ஒன்று சேர்ந்து திருமணம் முடிய யோகம் கை கூடி வரும். புத்திரபாக்கியம் வரும். கடந்த சில மாதங்களாக வேலையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல வாரம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். உறவுக்குள் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். குல தெய்வ வழிபாடு முன்னோர்கள் வழிபாடு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன்,செவ்வாய், மூன்றாம் வீட்டில் சுக்கிரன்,புதன் நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, குரு, பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வருமானம் அதிகரிக்கும். வீடு நிலம் வாங்க யோகம் கிடைக்கும். பூர்வீக சொத்து லாபத்தைக் கொடுக்கும். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். பொது இடத்தில் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது கோபமான பேச்சுக்களைத் தவிர்த்து விடவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.உடன்பிறந்தவர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சகோதர சகோதரிகளின் வீட்டு திருமணம் போன்ற சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் புகழ் செல்வாக்கு உயரும். ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானால் வீடு, சொத்து வாங்குவதற்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும். சனியுடன் நீச்சம் பெற்ற குரு இணைந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசியில் சூரியன், செவ்வாய் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன், புதன்,மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி,குரு, ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ராசிநாதன் புதன் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். குடும்பம் குதூகலமடையும். உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சூரியன் உங்கள் ராசியில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்வதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். செயல்களில் கவனம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிககும். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும் காதல் இனிக்கும். திருமண யோகம் கை கூடி வந்துள்ளது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் ஏற்பட்ட கலக்கங்கள் நீங்கி கவலைகள் முடிவுக்கு வரும் காலம் வந்து விட்டது. புதிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கும். பணம் அபரிமிதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளது. கல்வியில் திறமை பளிச்சிடும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான குடும்ப சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 06.16 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். பொது இடங்களில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். இந்த வாரம் முன்னோர்களை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்குள் ஆட்சி பெற்ற சுக்கிரன் புதன் இணைந்த அமர்ந்துள்ளார். இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி,குரு, எட்டாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராசி நாதன் சுக்கிரன் உடன் புதன் இணைந்து சுறுசுறுப்பு அதிகரிக்கும். நிறைய நல்லது நடக்கும். மனஅமைதி கிடைக்கும். காரியங்களில் வேகமாக செயல்பட்டாலும் விவேகமாகவும் வேலை செய்வீர்கள். அரசு விசயங்களில் கவனம் தேவை. சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டகரமான வாரம். நீண்ட நாட்கள் நினைத்துக்கொண்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமண தடைகள் நீங்கும். சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வரன் வீடு தேடி வரும். புதன், சுக்கிரன் வலிமையாக சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதைக் கூடும். வேலை செய்யும் இடத்தில் வாய்ப்புகள் தேடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 06.16 மணி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி காலை 07.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பயணங்களைத் தவிர்க்கவும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். குல தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, குரு, ஏழாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், விரைய ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. லாப ஸ்தானம் வலுவாக உள்ளதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையைத் தரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பிரமோசன் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும் வரும். மன நிம்மதியும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் லாபம் வரும் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். இந்த வாரம் பண வருமானம் தாராளமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செவ்வாய்கிழமையன்று முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.செப்டம்பர் 28ஆம் தேதி காலை 07.14 மணி முதல் 30 ஆம் தேதி இரவு 07.05 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமும் பொறுமையும் தேவை. மகாளய பட்ச காலத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ஞாயிறன்று மகாபைரவரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சனி,குரு, ஆறாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், லாப ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன், என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நன்மைகள் நிறைந்த வாரம். ஆன்மீக பயணம் செல்வீர்கள். லாப ஸ்தானத்தில் பயணிக்கும் புதன் லாபத்தையும் பண வருமானத்தையும் தருவார். மங்கல காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சொத்துக்கள் கிடைக்கும். வேலையில் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரன் சுக போகங்களைத் தருவார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் குரு சனி இணைந்திருப்பதல் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மாணவர்களின் எதிர்கால திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். காதல் கைகூடி வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம் காரியங்களில் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சனி,குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் சூரியன்,செவ்வாய், பத்தாம் வீட்டில் சுக்கிரன், புதன், லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குரு உங்கள் ராசியில் சனியோடு இணைந்திருப்பது சிறப்பு. ஜென்ம சனியின் பாதிப்பை குரு குறைத்து விடுவார். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணையோடு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் வாரம். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பாக்ய ஸ்தானத்தில் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். சுக்கிரன் பதவி உயர்வைத் தேடித் தருவார். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இளையவர்களுக்கு காதல் கைகூடி வரும் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். பெண்களுக்கு மனமகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமைந்துள்ளது. நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய், பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன்,புதன், பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சனி,குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுப விரைய செலவுகள் வரும். வீடு சொத்து வாங்கலாம். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானால் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். பதற்றப்படாமல் வேலையை தொடருங்கள். சுக்கிரன்,புதன் சுகத்தையும் சந்தோஷத்தையும் தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பேச்சில் தெளிவு பிறக்கும். காதலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும் நல்ல வரன் அமையும். மாணவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது பெற்றோர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு இது நல்ல வாரம் என்றாலும் குடும்பத்தினருடன் பேசும் போது கவனம் தேவை. மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், எட்டாம் வீட்டில் சுக்கிரன்,புதன், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி,குரு,என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணம் அபரிமிதமாக வரும். சுக்கிரனால் விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது. பணத்தை பத்திரப்படுத்துங்கள். சூரியன், செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் திறமை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். புதன், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களால் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல வாரம் உயர்கல்வி யோகம் கிடைக்கும். குருவின் பார்வை களத்திர ஸ்தானத்திற்கு கிடைப்பதால் சுப காரியங்கள் நடைபெறும். காதல் கை கூடி வரும். திருமணம் புத்திரபாக்கியம் கிடைக்கப்போகிறது. சுப விரைய செலவுகள் வரும். செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.

English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X