• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வார ராசி பலன் ஏப்ரல் 16, 2021 முதல் ஏப்ரல் 22, 2021 வரை

|

சென்னை: சித்திரை மாதத்தின் முதல் வாரம் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷ ராசியில் சூரியன், சுக்கிரன், ரிஷப ராசியில் ராகு, மிதுன ராசியில் செவ்வாய், விருச்சிக ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புதன் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சந்திரன் இந்த வாரம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்ம ராசிகளில் சஞ்சரிக்கிறார். துலாம், விருச்சிகம், தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணிகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஏப்ரல் 16, 2021 முதல் ஏப்ரல் 22, 2021 வரை பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மேஷ ராசி

சந்திரன் - ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்

செவ்வாய் - மிதுன ராசி

புதன் - மீன ராசி ஏப்ரல் 16ஆம் தேதி இரவு புதன் மேஷ ராசிக்கு நகர்கிறார்

குரு - கும்ப ராசி

சுக்கிரன் - மேஷ ராசி

சனி - மகர ராசி

ராகு - ரிஷப ராசி

கேது - விருச்சிக ராசி

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் ராசிக்குள் சூரியன்,சுக்கிரன்,புதன், இரண்டாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய் எட்டாம் வீட்டில் கேது,பத்தாம் வீட்டில் சனி, லாப வீட்டில் குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் உள்பட இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உங்களுடைய ராசியில் கிரகங்கள் வலுவாக இணைந்துள்ளதால் நீங்கள் தொட்டது துலங்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும் திடீர் பண வரவு வரும். சகோதர சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். முகத்தில் பொலிவு கூடும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். உங்களுடைய சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். இந்த வாரம் செவ்வாய்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் திபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசியில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. வார துவக்கத்தில் ராகு உடன் சந்திரன் சஞ்சரிப்பதால் லேசான மனக்குழப்பம் இருந்தாலும் சந்திரனும் செவ்வாயும் இணைந்து சந்திர மங்கல யோகக்துடன் இரண்டாம் வீட்டில் பயணிக்கும் போது செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடவும் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்றை காட்டுங்கள். வீடு பராமரிப்பு வேலைகளை செய்வீர்கள். பழைய வண்டி வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்கலாம். வேலையில் பளு அதிகம் இருந்தாலும் உற்சாகமாக செய்வீர்கள். உயரதிகாரிகளிடம் பகைத்துக்கொள்ள வேண்டாம். ராசியில் ராகு ஏழில் கேது பயணிப்பதால் தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. கல்வி தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பெற்றோர்களின் ஆலோசனை தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திடீர் சுப விரைய செலவுகள் வரலாம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்குள் செவ்வாய், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் உச்ச சூரியன், சுக்கிரனுடன் இணைந்து பயணம் செய்கிறார். இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான நிலையில் உள்ளது. திடீர் பண வரவு உங்களின் மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடும் நேரம் வந்து விட்டது. மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய வேலைக்கு இந்த வாரம் முயற்சி செய்யலாம். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். இந்த வாரம் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். செய்யும் தொழிலில் லாபம் வரும். அதிசார குருவின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது. குரு பார்வையால் என்றாலும் சனி உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லவும். வண்டி வாகனங்களில் போகும் போது அதிக வேகத்தை தவிர்க்கவும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கவும் பாதிப்புகள் நீங்கும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வீடு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். திடீர் சுப விரைய செலவுகள் வரலாம். மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வரும். உறவினர்கள் மூலம் வரன் தேட ஆரம்பிக்கலாம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நிங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பேசும் வார்த்தைகளில் கவனமும நிதானமும் தேவை. கண்டச்சனி காலம் என்பதால் உண்ணும் உணவில் கவனமாக இல்லாவிட்டால் உடல் நல பாதிப்புகள் வரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். பண முதலீடுகளில் கவனம் தேவை. யாருக்கும் பணம் ஜாமீன் கையெழுத்து போட்டு வாங்கி தர வேண்டாம். இந்த வாரம் கருப்பசாமியை வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், பத்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. உங்கள் ராசி அதிபதி பாக்ய ஸ்மதானத்தில் வலுவான நிலையில் பயணம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். அரசு துறை வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திடீர் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப செய்திகள் தேடி வரும். பிள்ளைகளின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும். எதிரிகள் தொல்லை தீரும். குருவின் பார்வை குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையும் பலமும் அதிகரிக்கும். பெற்றோர்கள் மூலம் கிடைக்கக் கூடிய பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வருமானம் வரும்கிடைக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரப்போகிறது. தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த வாரமாக அமைந்துள்ளது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், ஒன்பதாம் வீட்டில் ராகு பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் சந்திரன் சாதகமான இடத்தில் பயணம் செய்வதால் சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகவே இருக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். விலை உயர்ந்த பொருட்கள், பணம் நகைகளை பத்திரப்படுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில் மாற்றம் ஏற்படும். நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். உடன் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண விசயமாக பேசி நல்ல முடிவு செய்யலாம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன், புதன், எட்டாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குடும்பத்தில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். நல்ல தன வருமானம் வரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லை நீங்கும் நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மன கவலைகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். ஏப்ரல் 17,2021 பிற்பகல் 01.09 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்த்து விடவும். வார முற்பகுதியில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். திங்கட்கிழமை சிவ ஆலயம் சென்று வழிபட பாதிப்புகள் நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன்,புதன், ஏழாம் வீட்டில் ராகு,எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை தொழில் விசயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை இரட்டிப்பாக கொடுக்கும். பணம் கடனாக கொடுக்கும் போது கவனம் தேவை. செவ்வாயின் பயணம் சாதகமாக இல்லை நெருப்பு விசயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது விழிப்புணர்வு அவசியம். ஏப்ரல் 17ஆம் தேதி பிற்பகல் 01.09 மணி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி நள்ளிரவு 12.29 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் விளக்கேற்றி முருகனை வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு நான்காம் வீட்டில் சூரியன்,சுக்கிரன்,புதன் ஐந்தாம் வீட்டில் ராகு,ஆறாம் வீட்டில் செவ்வாய் லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தாயாரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும் தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். எந்த விசயத்திலும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். வீடு சொத்து வாங்கும் போது யோசித்து வாங்கவும். ஏப்ரல் 22ஆம் தேதி காலை 08.15 மணி முதல் 2 நாட்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். செய்யும் செயல்களில் நிதானம் அவசியம் பெரிய அளவில் பண முதலீடுகளைத் தவிர்க்கவும். பேசும் போது யோசித்து பேசவும் நிதானமாக பேசுவது நல்லது. கோபத்தில் வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம். சொந்த வீட்டு ரகசியங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிதாக பேசுபவர்களிடம் குடும்ப விசயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு மூன்றாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன்,புதன் ஐந்தாம் வீட்டில் ராகு,செவ்வாய் லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் வாரம் முழுவதும் சாதகமாக உள்ளது. சூரியன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகின்றனர். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு பயணம் செய்கின்றனர். பேசும் போது யோசித்து பேசவும் நிதானமாக பேசுவது நல்லது. கோபத்தில் வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம். சொந்த வீட்டு ரகசியங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த வாரம் எந்த விசயத்திலும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். வீடு சொத்து வாங்கும் போது யோசித்து வாங்கவும். தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம் தவிர்த்து விடவும். வியாழக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் ராசியில் குரு, ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன்,சுக்கிரன்,புதன், நான்காம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சனி, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் தைரியம் தன்னம்பிக்கை தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியம் தொடர்பாக வெற்றிகரமாக பேசி முடிவு செய்வீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.செய்யும் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும் மதிப்பு மரியாதை உயரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் தங்க நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஆர்வத்தை அதிகரிக்கும். நல்ல தன வருமானம். பெயரும் புகழும் தேடி வரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும். இந்த வாரம் மன மகிழ்ச்சி அதிகரிக்க வெள்ளிகிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் மூன்றாம் வீட்டில் ராகு, செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராசி நாதன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் சுப விரைய செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள் குதூகலம் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். அலுவலகத்தில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் தேடி வரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். புதிய வீடு மனை வாங்கலாம். சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படும். வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் பேச்சில் கோபத்தை தவிர்க்கவும். நிதானமும் பொறுமையும் தேவை. பெண்களுக்கு இது நல்ல வாரம். பரிசுகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களு படிப்பில் அக்கறையும் கவனமும் தேவை. இந்த வாரம் காளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.

 
 
 
English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X