• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வார ராசி பலன் : இந்த வார ராசி பலன் : ஜூன் 11, 2021 முதல் ஜூன் 17,2021 வரை

|

சென்னை: ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரம் ரிஷப ராசியில் சூரியன், ராகு, புதன், மிதுன ராசியில் சுக்கிரன், கடகத்தில் செவ்வாய், விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்ம ராசிகளில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் மிதுன ராசிக்கு மாறுகிறார்.இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணிகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் 11, 2021 முதல் ஜூன் 17,2021 வரை பலன்கள் எப்படி இருக்கும், பரிகாரங்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் -ரிஷபம் 15ஆம் தேதிக்கு மேல் மிதுன ராசிக்கு மாறுகிறார்
சந்திரன் - மிதுனம், கடகம், சிம்மம்
செவ்வாய் - கடகம்
புதன் - ரிஷபம்
குரு - கும்ப ராசி
சுக்கிரன் - மிதுனம்
சனி - மகர ராசி
ராகு - ரிஷப ராசி
கேது - விருச்சிக ராசி

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய திறமை படைத்தவர்கள் நீங்கள். உங்களுக்கு இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சூரியன், ராகு, புதன், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் கேது,பத்தாம் வீட்டில் சனி, லாப வீட்டில் குரு, சில தினங்களில் சூரியன் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உடன் இணைகிறார். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். வேலையில் புதிய மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபம் ஆதாயம் உண்டாகும். உயர் பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். உறவினர்களின் வருகை நன்மையை தரும். புதன் ராகு உடன் இணைந்துள்ளதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிளுக்கு வெற்றி கிடைக்கும் என்றாலும் பொறுமையும் நிதானமும் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களில் கவனம் தேவை. வக்ரமடைந்த சனியின் பார்வை செவ்வாய் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை செய்யும் உழைப்பு அதிகரிக்கும் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சூரியன், ராகு,புதன், இரண்டாம் வீட்டில் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலையில் எதிர்பார்க்காத திடீர் வாய்ப்பு தேடி வரும். உங்களின் தனித்திறமை அதிகரிக்கும். சுக்கிரன் வீட்டில் புதன், புதன் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பலன்கள் யோகமாக மாறும். குடும்ப தேவைகள் நிறைவேறும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் உள்ளதால் சுகங்கள் அதிகம் உண்டாகும். சனிபகவான் பார்வை மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாய் பகவானுக்குக் கிடைக்கிறது. குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைச் சச்சரவுகள் ஏற்படும் என்றாலும் இந்த வாரம் மன வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். முருகன் வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் விட்டுக்கொடுத்து செல்லவும். வக்ரம் அடைந்து பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கும் சனியால் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனம் தேவை. வார மத்தியில் சூரியன் இரண்டாம் வீட்டிற்குச் செல்வதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் சோர்வு அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பம் ஏற்படும். வார இறுதியில் காரிய தடைகளில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசிக்குள் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சனி, ஒன்பதாம் வீட்டில் குரு, விரைய ஸ்தானத்தில் சூரியன், ராகு, புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். செவ்வாய் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும் இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். சுக்கிரனுக்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் மந்தத் தன்மை உருவாகும். சுப காரியங்களில் தடைகள் வரும் சிறு போராட்டத்திற்குப் பிறகு வெற்றி கிடைக்கும். சனி வக்ரமடைந்திருப்பதால் பொறுமை நிதானம் தேவை. குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். உங்கள் ராசியில் உஷ்ண கிரகம் சூரியன் சுக்கிரன் உடன் இணையப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் பயம் ஏற்படும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் ராசியில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சூரியன், ராகு,புதன் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சனி, எட்டாம் வீட்டில் குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார மத்தியில் சூரியன் விரைய ஸ்தானத்திற்கு வந்து சுக்கிரன் உடன் இணைகிறார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். ராசியில் உள்ள செவ்வாயினால் மன தைரியம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஆதாயம் அதிகரிக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சியால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார். வியாபாரம் விருத்தியாகும் லாபம் இருமடங்கு அதிகரிக்கம். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரும் விட்டுக்கொடுத்து செல்லவும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நினைத்த காரியம் நிறைவேறும். சொந்த பந்தங்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சனி, ஏழாம் வீட்டில் குரு, பத்தாம் வீட்டில் சூரியன், ராகு,புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன்,விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராசி அதிபதி சூரியன் பத்தில் ராகு புதனோடு பயணம் செய்வதால் பதவியில் மாற்றமும் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். சிலருக்கு புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும். விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மீது சனிபகவானின் பார்வை கிடைக்கிறது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பொருளாதார ரீதியான ஆதரவு கிடைக்கும். வார மத்தியில் சூரியன் லாப ஸ்தானத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வேலை செய்யும் இடத்தில் இருந்த எதிரிகளின் பிரச்சினை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் சூரியன், ராகு,புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் ராசி நாதன் புதன் சுக்கிரன் வீட்டில் பயணம் செய்வதால் சுக்கிரன் வீடுகள் மாறி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் யோகம் அதிர்ஷ்டம் தேடி வரும். பண வரவு தேடி வரும். தொழில் விசயமாக நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று மறைவதால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கை கூடி வரும். குரு பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் வக்ரமடைந்து சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்து விசயத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் சஞ்சலம் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாருடன் பிரச்சினை உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராசிக்குள் இரண்டாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சனி, ஐந்தாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சூரியன், ராகு, புதன், பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரமும் சாதகமாக உள்ளதால் திடீர் அதிர்ஷ்டம் வரும். எட்டாம் வீட்டில் கிரகங்கள் பயணம் செய்வதால் செயல்களில் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. ஐந்தாம் வீட்டில் பயணிக்கும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. மன மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது நல்லது. நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மந்தத் தன்மை உண்டாகும். சனிபகவானின் சஞ்சாரமும் பார்வையும் சங்கடங்களைத் தரலாம் கவனம தேவை. கல்வி விசயத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் நலனில் அக்கறை தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, மூன்றாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் குரு, ஏழாம் வீட்டில் சூரியன், ராகு, புதன், எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வார மத்தியில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் பண முதலீடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பயணங்களில் அதிக கவனம் தேவையிருக்கும். கூடுமானவரை பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் தள்ளிப்போடலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக பெற்றோர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். திடீர் சுப செலவுகள் வரலாம். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. செய்யும் புதிய முயற்சிகளுக்கு தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உள்ள குழப்பம் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் வாரத்தின் முதல் நாளில் சாதகமாக இல்லை. 11ஆம் தேதி அதிகாலை முதல் 13ஆம் தேதி பிற்பகல் 12.32 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். பயணங்களைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் சூரியன், ராகு,புதன், புதன், ஏழாம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
கிரகங்கள் சாதகமற்ற நிலையில் பயணம் செய்வதால் பயணங்களில் பொறுமையும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போதும் நிதானம் அவசியம். ஏழாரை சனியின் முடிவு காலமாக இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். பெரிய திட்டங்கள் எதுவும் வேண்டாம். திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் முயற்சி செய்ய வேண்டாம். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம். மின்சார சாதனங்களைக் கையாளும் போது கவனம் தேவை. வார இறுதியில் நல்ல செய்தி தேடி வரும் நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்கவும். பயணத்தில் எச்சாிக்கை தேவை. சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப பிரச்சினைகளில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியமும் நிம்மதியும் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். வார மத்தியில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இல்லை. 13ஆம் தேதி பிற்பகல் முதல் 15ஆம் தேதி இரவு 9ஆம் தேதி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு ஐந்தாம் வீட்டில் சூரியன், ராகு,புதன், ஆறாம் வீட்டில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் செவ்வாய்,லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் செய்ய முயற்சி செய்யலாம். வேலையில் இருந்த பிரச்சினைகளும், வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்சினைகளும் நீங்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவும். ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாயின் மீது சனியின் பார்வை விழுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். செவ்வாய் சனி பார்வையால் சில பாதிப்புகள், தாமதங்கள் ஏற்படும். திருமணம் தொடர்பாக இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கலக்கம் அதிகரிக்கும் உடலில் சோர்வு ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்திரர்கள் மூலம் சந்தோஷ செய்திகள் தேடி வரும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். 15ஆம் தேதி இரவு 9.42 மணி முதல் 18ஆம் தேதி அதிகாலை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த நாட்களில் புதிய முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் ராசியில் குரு, ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன், ராகு,புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வேலை செய்யும் இடத்தில் பிரமோசன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகளை நண்பர்கள் உதவியோடு சமாளிப்பீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். சூரியன் வார மத்தியில் ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் உடன் இணைகிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். பெண்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை. பண வரவு அதிகரித்தாலும் சுப விரைய செலவுகளும் வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சில குழப்பங்கள் வரலாம் உயர் கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்யவும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பழுது நீக்கி சரி செய்து கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், ராகு,புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவது அவசியம். வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வார பிற்பகுதியில் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் கூடும். திடீர் வீண் விரைய செலவுகள் வரலாம் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைத்த காரியம் நிறைவேறும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள் உடலில் தெம்பும் தைரியமும் அதிகரிக்கும்

English summary
Intha vara rasi palan in tamil weekly horoescope for 12 zodiac signs mesham to meenam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X