• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக தம்பதியர் தினம்: சண்டை போட்டு பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வைக்கும் பரிகார தலம்

Google Oneindia Tamil News

சென்னை: உலக அளவில் கொரோனா வைரஸ் பல குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. நிதிப்பிரச்சினையை வைத்து பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில குடும்பங்களில் ஆணோ பெண்ணோ பிறன்மனை நோக்குவதால் சண்டைகள் அதிகரிக்கின்றன. அனைத்துவித சுக்கிர தோஷங்களையும் தீர்த்துவைக்கும் சக்திவாய்ந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது ஸ்ரீவைகுண்டநாராயணப் பெருமாள் கோயில். கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது இந்த தலம்.

ஒருவர் சுக சௌகர்யங்களுடன் மனநிறைவோடு வாழ சுக்கிரனின் அருள் மிகவும் அவசியம். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமும், சுக ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும், களத்திர ஸ்தானமும், பாக்ய ஸ்தானமும், நன்றாக இருந்தாலே அந்த குடும்பம் சுபிட்சமாக இருக்கும். ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் பலமிழந்தோ ஆதிபத்திய தோஷம் பெற்றோ இருந்தால் கணவன் மனைவிக்கு சதா சண்டைதான். ஒருவருக்கு ஒருவர் கீரியும் பாம்புமாகத்தான் இருப்பார்கள்.

ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் கூட்டணி போட்டு அமைந்து இருந்தால் திருமண வாழ்வு நரக வாழ்கையாகி விடும். ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தாலோ சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும். சிறப்பான மனைவி அமையமட்டார். லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டியிருக்கும்.

ஏழாம் அறிவு, காப்பானை தொடர்ந்து கஜினி,. அசின் வரைக்கும் நாஸ்டர்டாமஸ் கணிப்பு.. நெட்டிசன்கள் அழும்புஏழாம் அறிவு, காப்பானை தொடர்ந்து கஜினி,. அசின் வரைக்கும் நாஸ்டர்டாமஸ் கணிப்பு.. நெட்டிசன்கள் அழும்பு

பிரச்சினை தீர்க்கும் பெருமாள்

பிரச்சினை தீர்க்கும் பெருமாள்

கணவன் மனைவி பிரச்சினைகளை தீர்க்கும் பரிகார தலம்தான் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டநாராயணப் பெருமாள் கோயில். இந்த பெருமாளை குபேரன் பூஜை செய்கிறார் என்பது நம்பிக்கை. மார்கழி மாத வெள்ளிக்கிழமையில் பெருமாளின் பாதங்களை சுக்கிரன் ஒளி வடிவத்தில் வந்து பூஜை செய்கிறார் என்பது ஐதீகம்.

சுக்கிர தோஷம் நீங்கும்

சுக்கிர தோஷம் நீங்கும்

சுக்கிர தோஷம், பாக்ய ஸ்தான தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வணங்கினால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இந்த கோவிலில் யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார் இணைந்து காட்சி தருகின்றனர். சுக்கிர ஹோரை நேரத்தில் இந்த சக்கரத்தாழ்வாருக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து 21 முறை சுற்றி வர தடைபட்ட காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

காதல் கை கூட பெருமாளின் ஆசி

காதல் கை கூட பெருமாளின் ஆசி

தம்பதியர் இடையே பிரச்சினை ஏற்பட்டு விவகாரத்து வரை சென்று கோர்ட் படியேறியவர்கள் பெற்றோர் ஆலோசனையின் பேரில் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு அபிஷேகம் நெய் விளக்கு ஏற்றி வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். காதல் கைகூடி திருமணம் நடைபெற எலுமிச்சை கனியை பெருமாளின் காலடியில் வைத்து வணங்கி அர்ச்சனை செய்து அந்த பழத்தை ஜூஸ் போட்டு இருவரும் குடிக்க வேண்டும். கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியையோ, மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனையோ திருத்த இந்த கோவிலுக்கு சென்று எலுமிச்சை கனி அர்ச்சனை செய்து வாங்கிச் செல்லலாம்.

தம்பதியர் ஒற்றுமைக்கு வழி

தம்பதியர் ஒற்றுமைக்கு வழி

ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இதுவாகும். கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது. என்னதால் கிரகங்கள் ஏடாகூடமாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லும் தம்பதியர்கள் இருக்கும் குடும்பத்தில் குழப்பங்கள் வரவே வராது. ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் எழுந்தருளும் அந்த அற்புத திருக்கோலத்தை தரிசித்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

ராகு காலத்தில் பூஜை

ராகு காலத்தில் பூஜை

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய்தீபம் ஏற்றி வழிபட கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கல்கண்டு போட்டு அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். இரண்டு சர்ப்பங்கள் இணைந்திருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலையில் ராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ மாலை சாற்றி அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். தம்பதியர் ஒற்றுமை ஏற்படும்.

English summary
Marriage is a union between two souls. It is a relationship commitment between husband and wife for life. Here are some remedies or parikaram which are recommended to improve bonding between the partners and lead a happy married life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X