For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

BhavaniSagar Dam Water Level Today | பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று

By Staff
Google Oneindia Tamil News

Newest First Oldest First
9:43 AM, 21 Mar

நேற்றைய நிலவரப்படி (20 மார்ச் 2024 ) பவானிசாகர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 58.56 கன அடியாகவும், கொள்ளளவு 32.8 டி எம் சி யாகவும், நீர் இருப்பு- 06.80 , நீர் வரத்து -31 வினாடிக்கு கன அடியாகவும் இருந்தது.
11:16 AM, 18 Mar

திங்கட்கிழமை (மார்ச் 18) இன்று காலை 10 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் - 59.16 அடி , நீர் இருப்பு- 6.98 டிஎம்சி, நீர் வரத்து வினாடிக்கு- 26 கன அடி, நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1,050 கன அடி. பாசனத்திற்காக அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 150 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 1,050 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
10:47 AM, 12 Mar

பவானிசாகர் அணை நீர்மட்டம் (நேற்றைய நிலவரப்படி): நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32. 8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 62. 41 நீர் இருப்பு- 08. 06 நீர் வரத்து -47வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 3300 வினாடிக்கு கன அடி
11:34 AM, 11 Mar

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 63.33 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
10:20 AM, 16 Jul

பவானிசாகர் அணை நிலவரம் இன்று: முழு கொள்ளளவு: 105 அடி; நீர்மட்டம் : 95.35அடி; நீர் வரத்து :15144கன அடி; நீர் வெளியேற்றம்: 1005கன அடி; நீர் இருப்பு: 25.24டிஎம்சி
10:44 AM, 20 May

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,253 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
12:32 PM, 19 May

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 81.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,253 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுருந்தது.
9:55 AM, 10 Jan

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 101.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 878 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
10:21 AM, 13 Dec

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 618 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 104.74 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
10:42 AM, 2 Dec

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.49 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 622 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,900 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
11:44 AM, 30 Nov

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 511 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருhttps://tamil.oneindia.com/vaigai-dam-water-level-today-374014.htmlந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 1,000 கன அடி என மொத்தம் 2,500 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
10:46 AM, 22 Nov

மழை குறைந்ததால், நீர்வரத்து சரிந்ததாலும், அணையில் இருந்து உபரி நீர் திறப்பு, நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று, 5,522 கன அடியாக நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த நீர் அப்படியே, பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 104 அடியாக, நீர் இருப்பு, 31.9 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.
9:42 AM, 18 Nov

நேற்று முன்தினம் மாலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 538 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 103.92 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது.
11:21 AM, 17 Nov

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 103.62 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரத்து 342 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 300 கனஅடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
9:37 AM, 15 Nov

நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 4,089 கனஅடி நீர் வந்தது. அணை நீர்மட்டம், 103.28 அடி; நீர் இருப்பு, 31.3 டி.எம்.சி.,யாக இருந்தது.
10:10 AM, 11 Nov

பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி. தற்போது நீர்மட்டம், 103 அடியாக உள்ளது. ஒரு வார காலமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.நேற்று முன்தினம் அதிகபட்சமாக பவானி ஆற்றில், 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை அணைக்கு நீர் வரத்து, 2,532 கன அடியாகவும், மதியம், 1,442 கன அடியாகவும் குறைந்தது. இதன் காரணமாக உபரி நீர் திறப்பு, 2,500 கன அடியாக குறைக்கப்பட்டது.
12:49 PM, 10 Nov

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,021 கன அடி தண்ணீர் வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3,917 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டமும் 103 அடியாக குறைந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாகவும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
9:55 AM, 9 Nov

நேற்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,757 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 6,500 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9:59 AM, 8 Nov

நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 5025 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம் 103. 84 அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றில் 3500 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
4:58 PM, 2 Nov

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 827 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
10:09 AM, 29 Oct

நேற்று முன் தினம் நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையின் நீர்வத்து 4435 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 4400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
3:22 PM, 26 Oct

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடித்து வரும் நிலையில், நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 4417 கனஅடி நீர் வரத்து இருந்தது. தடப்பள்ளி - அரக் கன்கோட்டை பாசனப்பகுதிக்கு 200 கனஅடியும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக விநாடிக்கு 1900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
10:10 AM, 25 Oct

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகத் தொடரும் நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 5412 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 200 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் விநாடிக்கு 2900 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது.
3:50 PM, 22 Oct

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 33 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 3 ஆயிரத்து 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
1:45 PM, 20 Oct

நேற்று நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92 .440 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16012 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 650 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. நீர் இருப்பு 55.484 டிஎம்சி யாக உள்ளது.
9:44 AM, 18 Oct

பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 5512 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 2300 கனஅடியும், பவானி ஆற்றில் உபரி நீராக 3200 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக தொடர்கிறது.
12:49 PM, 16 Oct

நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 3327 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 2300 கனஅடியும், பவானி ஆற்றில் 1000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டது. அணைக்கான நீர் வரத்து அதிகரித்தால் கூடுதலாக நீர் திறக்கப்படும் என்பதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10:04 AM, 29 Jul

நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக இருந்த நிலையில் அணைக்கு வினாடிக்கு 1,981 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது.
9:18 AM, 26 Jul

நேற்று மாலை 4.15 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,650 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது.
11:40 AM, 23 Jul

நேற்று மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 19 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.69 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடியும், பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BhavaniSagar Dam Water Level Today

பவானிசாகர் அணையின் வரலாறு;

தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய மண் அணை எனப் பெயரும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணை எனும் சிறப்புப் பெயரும் பெற்றது பவானிசாகர் அணை. தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில், மாயாறும், பவானி ஆறும் ஒன்றுகூடும் இடத்தில் உள்ளது, இந்த பவானிசாகர் அணை. 1948 ஆம் ஆண்டு சுமார் பத்துக் கோடியே ஐம்பது லட்சம் செலவிடப்பட்டு இந்த அணையை கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஏறத்தாழ சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர இந்த அணையின் கட்டுமான பணி துவங்கப்பட்டு, அடுத்த ஏழு ஆண்டுகளில் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி, அப்போதைய தமிழ்நாடடின் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் பவானிசாகர் அணையை திறந்து வைத்தார்.

எங்கு உள்ளது பவானிசாகர் அணை?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை, முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட அணையாகும் . மேலும் இந்த அணை ஆசியாவில் மிகப்பெரிய 'மண் அணை' என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பவானி ஆறு, அங்குள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காவும் பயன்படுத்தப்படுகிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை?

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ், பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானிசாகர் நீத்தேக்கம் என்று பெயர்.

பவானிசாகர் அணை முழு கொள்ளளவு விவரம்:

பவானிசாகர் அணையால் 32.8 டிஎம்சி வரையான நீரை தேக்கிவைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 120 அடி. அதில் உள்ள சேறு, சகதியெல்லாம் கழித்தால், 105 அடியாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. பவானிசாகர் அணையின் மூலம் 16 மெகவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 2.7 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

பவானிசாகர் அணை வானிலை:

ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த பவானிசாகர் அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்.

டணாய்க்கன்_கோட்டை:

பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. அதாவது டணாய்க்கன்_கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை பவானிசாகர் அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

ஹொய்சாளர் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் நிற்கும் இந்தக்கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும்.

பவானிசாகர் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:

ஆனைமலை சரணாலயம், நிலம்பூர், பண்ணாரி அம்மன் கோவில், மருதமலை கோவில், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், கோவை ஆகிய சுற்றுலா தளங்கள் பாபநாசம் அணைக்கு அருகே அமைத்துள்ளது.

பவானிசாகர் அணை - பார்வையிடும் நேரம்:

பவானிசாகர் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

English summary
BhavaniSagar Dam Water Level Today: Check complete details on BhavaniSagar Dam Water Level, History, Weather, Visit Timings, Nearby Places to Visit and more interesting facts on BhavaniSagar Dam. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரம், முழு கொள்ளளவு, வரலாறு, வானிலை, என பவானிசாகர் அணை தொடர்பான தகவல்களை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X