• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"அப்பா.. நான் லவ் பண்றேன்".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (9)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

"நீயா.. என்னாச்சு கருணா"

"ஸார்.. தப்பு நடந்து போச்சு"

"என்னாச்சு.. "

" குறி தப்பிருச்சு.. ஸாரி சார்"

"முட்டாள் முட்டாள்.. உன்னைப் போய் நம்பினேன் பாரு.. .போனை வை"

Nilavukku Neruppendru Peyar Tamil series episode 9

சே.. இதுக்குத்தான் இவனுகளை உள்ளே கொண்டு வரக் கூடாது.. டென்ஷனில் தனக்குத்தானை தன்னைத் திட்டிக் கொண்டார் விஸ்வநாதன்..

5 வருஷத்துக்கு முன்பு....

"அப்பா.. நான் லவ் பண்றேன்"

" வாட்.. முட்டாள்தனமா பேசாதே.. என்ன பேச்சு இது.."

"இல்லப்பா சீரியஸா.. பிடிச்சுப் போச்சு.. ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்.. விரும்பஆரம்பிச்சுட்டோம்.. நீங்கதான் கல்யாணம் பண்ணி வைக்கணும்."

"என்ன நம்பிக்கைல இதை வந்து என் கிட்ட சொல்றே"

"சொன்னா பண்ணி வைப்பீங்கங்கற நம்பிக்கையிலதாம்ப்பா.. ப்ளீஸ்"

"முடியாதும்மா.. நம்ம அந்தஸ்து தெரிஞ்சுமா இப்படி பேசறே.. யார் அவன்"

"அவன் மார்க்கெட்டிங் மேனேஜர்ப்பா.. நம்ம ஸ்டேட்டஸ் இல்லைதான்.. ஆனால் நல்லவன்ப்பா..."

"மார்க்கெட்டிங் மேனேஜரா.. மலர்.. நீ 25 கோடி நிறுவனத்துக்கு அதிபதிம்மா.. எந்த சொத்து எங்கே இருக்குன்னு கூட முழுசா தெரியாது உனக்கு.. அப்படி வாங்கிப் போட்டிருக்கேன் உனக்காக.. நீயா இப்படி போய் செலக்ட் பண்ணிருக்கே.. முட்டாளா நீ"

"அப்பா மனசுக்குப் பிடிச்சிருச்சு. விரும்பறோம்.. முடிஞ்சா கல்யாணம் பண்ணி வைங்க"

"முடியாதுன்னு சொன்னா"

"நாங்களே பண்ணிப்போம்... ஸாரி டு சே திஸ் பா"

"ஓஹோ.. முடிவெடுத்துட்டுதான் பேசறியா.. நான் யோசிக்கணும்.. டைம் கொடு"

"தாராளமா எடுத்துக்கங்கப்பா.. எனக்கு நீங்க நல்ல பதில் சொல்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு... ஏன்னா.. நீங்க என்னை எவ்வளவு நேசிக்கறீங்கன்னு எனக்குத் தெரியும்" மலர் முகத்தில் நம்பிக்கை வெளிச்சம் பளீரிட இறுகிப் போயிருந்த உதடுகளில் புன்னகை குடியேறியது.

"ராஜ்.. உடனே கிளம்பி ஆபீஸுக்கு வா.. நானும் வர்றேன். வரும்போது சாவித்ரியைக் கூட்டிட்டு வா"

"ஷ்யூர் சார்"

"மலர்.. நான் ஆபீஸ் வரை போயிட்டு வந்துர்றேன்.. நீ ரிலாக்ஸா இரு" மகளிடம் சொல்லி விட்டு கிளம்பினார் விஸ்வநாதன்.

--

"சாவித்ரி.. என் பொண்ணு ஒரு பையனைக் காதலிக்கிறா. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நீ என்ன செய்வியோ தெரியாது.. அந்தப் பையன் என் மகளை விட்டு விலகணும்.. இல்லாட்டி நீ விலக வைக்கணும்.. 3 நாள் டைம் தர்றேன்"

"கண்டிப்பா சார்.. டீட்டெய்ல் சார்"

கையில் ஒரு பைலைக் கொடுத்தார் விஸ்வநாதன். வாங்கி அதைப் பிரித்துப் பார்த்தாள் சாவித்ரி.. முகம் மலர்ந்தது.. இந்தப் பையனா சார்.. எனக்கு நல்லா தெரியுமே.. சாவித்ரி கூறக் கூற குழப்பமடைந்தார் விஸ்வநாதன்.

"எப்படி தெரியும்"

"எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்த வீடுதான் சார்.. நல்ல பையன்.. கொஞ்சம் வசதி குறைவான இடம்தான்.. ஆனால் நல்லவன்.. பட் உங்க அந்தஸ்துக்கு சரிப்பட மாட்டான்"

"உன் கிட்ட நான் சர்ட்டிபிகேட் கேட்கலை.. அவன் விலகனும்.. கிளம்பு"

"ஷ்யூர் சார்.. நான் வர்றேன்".. திரும்பி நடந்தாள் சாவித்ரி.

ராஜ் பக்கம் திரும்பிய விஸ்வநாதன்.. ராஜ் இவளை நம்ப முடியாது.. காரியத்தைக் கெடுக்க வாய்ப்பிருக்கு. நீ ஒரு கண்ணு வச்சுக்க.. நான் கிளம்பறேன்..

"ஓ.கே சார்"

3 நாட்கள் கழித்து....

"அப்பா..."

"மோசம் போயிட்டேம்ப்பா"

"என்னாச்சும்மா"

வீறிட்டழுத மகளை தேற்ற முடியாமல் தவித்தார் விஸ்வநாதன். என்ன நடந்ததுன்னு அவருக்குத் தெரியவில்லை.. மகளை உட்கார வைத்து அழுகையை அமர்த்திய பின்னர் "சொல்லும்மா என்னாச்சு"

"சுனில் ஏமாத்திட்டாம்ப்பா"

"சுனிலா ய.. யார் அது"

"நான் லவ் பண்ணியவன்"

(தொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X