• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலவுக்கு நெருப்பென்று பெயர் (3)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

"ஹலோ என்னங்க வேணும் உங்களுக்கு.. யாரு நீங்க"

"நீங்கதான் வேணும்.."

"என்னாது.. யாரும்மா நீங்க.. என்ன பேச்சு இது"

"இல்லையே.. நல்லாதானே பேசறேன்.. ஏன் பிடிக்கலையா"

"ஹலோ முதல்ல நீங்க யாரு.. என்ன பேச்சு இதெல்லாம்.. போனை வைங்க முதல்ல"

"ஹலோ ஹலோ.. வைக்காதீங்க.. இருங்க சொல்றேன்"

" சொல்லுங்க"

"நீங்க வாங்கிக் கொடுத்தீங்களே தக்காளி.. அதுல பாதி அழுகிப் போனதா இருக்கு.. உடனே வந்து மாத்திக் கொடுங்க"

"WHAT... தக்காளியா....ஓ..ஓஓ.. அந்தப் பொண்ணா நீங்க.. தக்காளி அழுகினா நான் என்னங்க பண்றது... ஆமா.. உங்களுக்கு எப்படி என் நம்பர் கிடச்சது"

"நம்பராப்பா முக்கியம்.. தக்காளி அழுகிப் போச்சு.. வந்து மாத்திக் கொடுங்க வாங்க வேகமா.. இல்லாட்டி அவ்வளவுதான்"

Nilavukku Neruppendru Peyar Tamil series episode 3

"ஹலோ முதல்ல நம்பர் எப்படி கிடச்சது அதைச் சொல்லுங்க"

"அடடா என்னப்பா இது குழந்தைப் புள்ளை மாதிரி பேசிட்டு.. நம்பரை அப்புறமா பாத்துக்கலாம்.. முதல்ல தக்காளிக்கு ரீப்ளேஸ்மென்ட் பண்ணிட்டுப் போகலாம்.. .கிளம்பி வாங்க"

"மேடம் திஸ் இஸ் டூ மச்.. நம்பர் எப்படி கிடச்சது.. ஏன் தொல்லை பண்றீங்க.. போன் பண்ணி"

"போன் "பண்ணி"யா.. இல்லையே அது பேசாத பொருளாச்சே.. "பண்ணி"யெல்லாம் இல்லைங்க"

"அடச்சே.. ரொம்ப பெரிய நியூசென்ஸ்ங்க நீங்க"

"அட சென்ஸே இல்லாத செல்லப் பையா.. தக்காளிக்கு வழி சொல்லுடா முதல்ல"

"என்னாது டாவா.. "

"ஆமா.. திரும்பத் திரும்ப பேசிட்டே இருந்தா.. டா தான் வரும்.. அடுத்து டபுள் டா கூட வரும் தெரியுமா"

"இப்ப என்ன வேணும் உங்களுக்கு.."

"ஒன்னும் வேணாம்.. ஆமா.. உங்க முழுப் பெயரே சுனில்தானா.. இல்லாட்டி பின்னாடி முன்னாடி ஏதாச்சும் இருக்கா.. கம்பெனி பெரிய கம்பெனியா இருக்கே.. மேனேஜர் போல.. நல்ல சம்பளம் வருமோ"

"இதெல்லாம் எப்படிங்க தெரியும்.. யாருங்க நீங்க"

"சரி சரி அழாதப்பா அழாத"

"ரொம்ப டேமேஜ் பண்றீங்க நீங்க என்னை"

"ஹாஹாஹா.. இப்பத்தான் தெரியுதாக்கும் டியூப்லைட்டுக்கு.. நீங்க மின்னல் வேகத்தில் கிளம்பிப் போனீங்க இல்லையா.. அப்பத்தான் உங்க பைல இருந்தோ அல்லது பர்ஸிலிருந்தோ ஒரு விசிட்டிங் கார்டு எகிறி வெளியே விழுந்திருக்கு.. அதை நான் கரெக்டா கேப்சர் பண்ணி இப்ப உங்களை டார்ச்சர் பண்ணிட்டிருக்கேன்.. எப்பூடி!"

"ஓஹோ.. அதான பார்தேதன்.. நான் கூட நீங்க கூட துப்பறியும் சாம்பு மாதிரி ஏதாவது வேலை பார்க்கறீங்களோன்னு தப்பா நினைச்சுட்டேங்க.. ஸாரிங்க.. "

"சரி சரி வழியுது தொடச்சுக்கங்க"

"உங்க பேரு என்ன மேடம்"

"எதுக்கு"

"சும்மா தெரிஞ்சுக்கத்தான்.. ஜெனரல் நாலேட்ஜ் டெவலப் பண்ணிக்க"

"டெவலப் பண்ணி"

"டெவலப் பண்ணிக்கலாம்ல"

"எதை"

"எதை பண்ணனுமோ அதை"

"பண்ணிட்டு"

"Fun பண்ணலாமே"

"பன் வேணும்னா நாலு வாங்கித் தர்றேன்.. சாப்பிடுங்க.. வேற எதுவும் கிடைக்காது.. "

"இப்படிச் சொன்னா எப்படி"

"வேற எப்படிச் சொல்லணும்"

"அதை எப்படிங்க என் வாயால சொல்வேன்"

"அத்தை இருக்காங்களா"

"யா...யா..யாரு.. அத்தையா எந்த அத்தை"

"அதான் உங்கம்மா இருக்காங்களா.."

"ஆமா இருக்காங்க.. அதுக்கு என்ன.."

"யோவ் டியூப்லைட்டு.. நீ எப்பவுமே இப்படித்தானா.. இல்ல எப்பயாச்சுமா"

"ஏங்க என்னைத் திட்டறீங்க.. நான் தப்பாவே பேசலையே"

"அடடா.. நான் இப்ப போனை வைக்கிறேன்.. நான் சொன்னதை யோசிச்சுப் பாருங்க.. உங்களுக்கே புரியும்"

"ஹ.. ஹலோ ஹலோ.. வைக்காதீங்க"

டொக்.. அடடா வச்சுட்டாளே.. என்ன இவ.. இப்படி போட்டுத் தாளிச்சுட்டு போயிட்டா.. ஆமா.. நாம என்ன தப்பா பேசினோம்.. டியூப்லைட்னு வேற சொல்லிட்டாளே.. அது என்ன டியூப்லைட்.. டியூப்.. அடடா.. அத்தைன்னு சொன்னாளே.. நம்ம அம்மா அவளுக்கு அத்தைன்னா.. அப்ப நானு.. ஓ காட்.. நிஜமாவே நான் டியூப்லைட்தான்.. மின்னல் சிரிப்பு கண்ணைப் பறிக்க.. நெஞ்சமெல்லாம் லேசாக மாறி.. தென்றல் வந்து முகத்தில் மோத.. அப்படியே படுக்கையில் விழுந்தான் சுனில்.. அப்படீன்னா.. அவள் என்னை.. வேகமாக புரண்டு செல்லை எடுத்து தனக்கு வந்த எண்ணை வேகமாக ஒற்றி டயல் செய்தான்..

ரிங் போய்.. போன் எடுக்கப்பட்டது...

"ஹ..ஹலோ.. நான்தான் சுனில்.. பேசறேன்... நீங்க சொன்னது நிஜம்மாங்க.. லவ் பண்றீங்களா என்னை.. நிஜம்மாவா.. நிஜமாவாங்க.. ப்ளீஸ் சொல்லுங்க"

"ஹலோ.. இது போலீஸ் ஸ்டேஷன்.. யார் நீங்க"

(தொடரும்)

பகுதி [1, 2, 3]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X