• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 21... "டயட்"

|

"தேனு" ....நாங்க அப்டித்தான் அவளைக் கூப்பிடுவோம் ...மதுரை ஜில்லாவில் நாங்க ஒண்ணா பள்ளிக்கூடம் படிச்சோம் ..அப்போவே எங்க வகுப்புலேந்து அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ஒரே நபர் தேன்மொழி மட்டும்தான் .. ரொம்ப கரெக்ட்டா சொல்லப்போனா அவ பிறவி ஆட்டக்காரி !

சரஸ்வதி அம்மன விழுந்து கும்புட்டுட்டு , ஆத்தா முன்னாடி தகிச்சு எரியுற சூடனைக் கண்ணாறத் தொட்டு வணங்கிட்டு -இங்கிட்டு சலங்கைய காலுல கட்டுறதுக்குள்ள அங்கிட்டு கூட்டத்துல விசில் பறக்கும் . "ஏன் தேனு எப்டி உந்தலையுல வச்ச கரகம் மட்டும் இம்புட்டு நேரம் கீழ விழாம இருக்கு ?!" னு அப்டியே ஆச்சர்யமா கேப்போம் . அதுக்கு அவ அந்த அம்மனை ஒரு பார்வை எங்களை ஒரு பார்வை பாத்துட்டு சிரிச்சிட்டு மட்டும் போயிருவா !

Sillunnu Oru Anubavam Diet written by Vijaya Giftson

எத்தனை முறை கேட்டாலும் இதேதான் பதில் . "ஏய் ஐ வாண்ட் சிக்கன் பார்பிக்யூ வித் சீஸ் - ஐ வாண்ட் சீஸ் கார்ன் ஆலிவ்ஸ் -- னு ஒரே சத்தம் ! கூட வேலை பார்க்கும் நண்பர்கள் சேர்ந்து அனைவரும் கம்மனஹல்லியில் உள்ள பிட்சா ஹட்டிற்கு போயிருக்கோம் ..நம்ம பிறந்து வளந்த இடம் என்பது வேறு அங்கே பாத்தா வேற ஒரு உலகம் ! யாரும் கையிலேயே சாப்பிடவில்லை ! எனக்கு அப்படியொரு ஆச்சர்யம் ..அம்புட்டு திக்க்கா இருக்குற பிட்சாவை ரொம்ப இயல்பா "ஒரு கையில போர்க் மற்றும் மறு கையில நைப் " னு ஸ்டைலா ஒரு துண்டு கூட கீழ விழாம சாப்புடுறாய்ங்க ..நானும் எப்டி இப்டினு பாத்துட்டே இருக்கேன் ..நாங்க எல்லாரும் ஆர்டர் போட்டாச்சு ..திடீர்னு ஒரு பாட்டு ஓடுது ..அதுக்கு ஏத்தமாறி அந்த கடையில வேலை பாக்குற ஆல் பாய்ஸ் டபக்குனு அசெம்பிள் ஆகி ஒரு சூப்பர் டான்ஸ் ஆடுறாங்க ..அடடா ..வியாபாரம் என்பது எந்த நிலைமைக்கு போய்விட்டது ! இவ்வளவு தூரம் நுகர்வோரை திருப்திபடுத்தி அனுப்புற அளவுக்கா போய்ட்டுதுன்னு மனசுல நினச்சுக்கிட்டே பிட்ஸாக்கு வெயிட்டிங் !

வங்கியில டோக்கன் நம்பர் டிஸ்பிளேல வருமே அது மாதிரி நம்ம டேபிள் நம்பர் வருது ...உடனே யாரவது ஒருவர் போயி நம்ம குடுத்த ஆர்டரை சரிதானா என செக் பண்ணி வாங்கிட்டு வரணும் ..அம்புட்டு கூட்டம்! "இதுக்கு நம்மூரு ரேஷன் கடையே பரவால்ல போங்கடா" னு மனசுல நினைச்சுக்கிட்டேன் !வட்ட வட்டமா மேல பலப் பல வண்ண இங்கிரேடியன்ஸ்யோட ஆர்டர் பண்ண அனைத்து பிட்ஸா ரகங்களும் அரைமணி நேரம் கழித்து வந்துவிட்டன ..சரி நாம தான் பெங்களூருக்கு வந்துட்டமே , சும்மா ஸ்டைலா போர்க் அண்ட் நைப் வச்சு சாப்பிடுவோம் னு உள்ளுக்குள்ள ஆசை ! வலது கையில போர்க் , இடது கையில நைப் வச்சு ஸ்டார்ட் பண்றதுக்குள்ள , மேம் அப்டி இல்ல மா..த்..திங்கிறாரு இன்னொரு வாத்தி !

நானும் ஈ.....ன் ... னு இளிச்சுகிட்டு ரெண்டையும் கை மாத்தியாச்சு ..அந்த கணமே ஆரம்பித்து விட்டது பாரதப்போரு ..நான் அழுத்தி கட் பண்றேன் ..ம்ம் ஹூம் ...ஆகலேயே ...இன்னும் கொஞ்சம் அழுத்தி ... அதுக்குள்ள கூட இருந்த பயபுள்ளைக பாதி தின்னு முடிச்சிருச்சு .."டேய் நா இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே" னு மனசுக்குள்ள வருத்தம் ..ரைட் திஸ் டைம் ஐ ஆம் ஸ்ட்ராங்லி கட்டிங் --யு வெட்டிங் னு பிட்ஸா கூட கதை பேசிகிட்டு நைப் வச்சு ஒரே அழுத்து ! வெட்டுப்பட்ட ஒரு துண்டு மட்டும் சொ....ய்....ங் னு பக்கத்துக்கு டேபிள்க்கு பறந்து போயி விழுந்துட்டு ..வாட் டு டூ ...ஆல் விதி ..ஒன்னியு பண்ண மிடியாது .. சாரி கேட்டுரலாம்னு டேபிள்அ பாத்துகிட்டே மேல முகத்தை பாக்குறேன் ..ஹை ஜாலி நம்ம தமிழு ஆளுங்க .. அவுங்களுக்கும் ஒரே சிரிப்பு ...கெக்க பிக்கணு ...சாரிங்க ...தெரியாம ...னு நா இழுக்க அவுங்க சிரிக்க ஒரே காமெடி ஸீன் போங்க ...சரி அதுதான் நமக்கு வரலையே ஒழுங்கு மரியாதையா கையில எடுத்து சாப்பிடுவோம்னு சாப்டாச்சு .. எனக்கு பக்கத்துக்கு டேபிளில் இருந்த இங்கிலாந்துகாரர் அவ்ளோ நேரம் தஸ் புஸ்ஸுன்னு இங்லிபீஸ்ல பேசிட்டு இருந்தவரு .."உங்க் ஊர் பிட்ஸா நல்லா இர்க்கூ" னு எங்கிட்ட சொல்லிட்டே நம்ம ரசம் சாதம் சாப்புட்ற மாதிரி கையாலயே வளைச்சு வளைச்சு சாப்புடுறார் ... எனக்கு அப்பவே கண்ண கட்டீருச்சு !

நம்ம என்னடான்னா அவுங்கள பாலோ பண்ண நினைக்குறோம் ..அவுங்களுக்கு நம்ம கலாச்சார முறைகள் ரொம்ப புடிச்சிருக்கு! டு பி பிராங்க் ..தே ஆர் பாலோயின் அஸ் ! அதுதாங்க உண்மை ..நம்ம மரபில் இருக்க கூடிய பல பழக்க வழக்கங்களை அவர்கள் போற்றி புகழ்கிறார்கள் ! அதுக்குள்ள எல்லை தாண்டிய பயங்கர வாதத்தினால் என்னுடைய பிட்ஸா இந்தப் பக்கத்து டேபிளுக்கு போயி விழுந்துச்சுல்ல ..அங்க இருந்து ஒரு குட்டி "ஏய் தேனு இங்க பாரேன் ...உன் தட்டுல அந்த ஆண்டியோட பிட்சா" னு சொல்லி சொல்லி சிரிக்குது !" ஒரு பக்கம் இந்த சில்வண்டுலாம் நம்மள கிண்டல் பண்ணுதேனு இருந்தாலும் இன்னொரு பக்கம் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி ...எ...ன்...னா...து...... தேனா ? ஒரு வேளை நம்ம தேன்மொழியா இருக்குமோ ? திரும்புனா அவளே தான் ...அதே முகம் ..வயதிற்கு ஏற்றாற்போல் உடல் வாகு ! ரெண்டு அழகான பெண் குழந்தைகள் ...ஆனா பாருங்க அவளுக்கு என்னையத் தெரியவே இல்ல ..வாய்ப்பில்லை தான் ..நா தான் ஜீன்ஸ் டாப்ஸ் சகிதமா கெட்டப்பே வித்யாசமா இருக்கேன்ல.. இருந்தாலும் ...நா பக்கத்துல போயி "தேனு " னு கூப்பிட்டேன் ..டக் னு திரும்பி "தங்கம் ....என்னப்பே ஆளே மாறிப் போயிட்ட ! னு கட்டிப் புடிச்சிக்கிச்சு ..அதல்லவோ அன்பு ..

பலப்பல வருடங்கள் ஓடி விட்டது ...பள்ளிக்கூட கதையெல்லாம் ஓடுது ..ஆமா நீ தான் பத்தாப்புக்கப்றம் ஊர் மாத்தி போயிட்டபுள்ள?! ஊருல எல்லாரும் நல்லாருக்காய்ங்களா ? னு என்னவோ பேசிக்கிட்டே இருக்கு ...எனக்குதான் பேச்சே வரவில்லை .. ஒன்னு மட்டும் கேட்டேன் ..."தேனு இன்னும் கரகம் எடுக்கிறியா ? இல்லப்பே ...இங்கிட்டு வந்து என்னத்த ....அதுவும் கல்யாணம், கொழந்த குட்டிக்கு அப்றம் ?! நம்மூர் கோயில் திருவிழா அப்ப மட்டும் விரதம் இருந்து எடுப்பேன் !" னு சொல்லிச்சு . ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒடம்பு வேற போட்ருச்சு ..ரெண்டு பொம்பள புள்ளைகளும் சிசேரியன்தே . கடைசி நேரத்துல தண்ணி வத்தி போச்சுன்னு கத்தி வச்சுட்டாய்ங்க .. ஆத்தா செத்துருச்சு ..அது வயக்காட்டுக்கு போவும் போது பாம்பு கடிச்சிருச்சு ..அப்பன், சித்தப்பன் கூட கல்லுப்பட்டியிலதான் இன்னும் இருக்கு ..நா மாமனைத் தான் கட்டிகிட்டேன் ..இங்க சி.டி.எஸ் ல வேலை .னு சொல்லிச்சு . "ஏன் தேனு ஏதாச்சும் டயட் இருந்து ஒடம்ப கொறைக்கலாம்ல ?!"

இனிமேட்டா ...அடபோப்புள்ள ..நம்ம வகையறா எல்லாம் பாலோ பண்ணுதுங்க ..சிலது பேலியோ , சிலது பாஸ்டிங் , இன்னும் சிலது தண்ணிய வெண்ணிய குடிச்சுக்கிட்டு மயக்கம் போட்டுட்டு கிடக்குவோ ...இன்னும் சிலது கர்லாக்கட்டைய தூக்கிட்டு திரியுதுவோ ... எங்க ஆத்தா சொல்லும் என்னத்த தின்னாலும் செரிக்கணும்னு ..கல்லத் தின்னாலுந்தே! நமக்கெல்லாம் அப்டி கிடையா கிடக்க முடியாதுப்பே .. வழக்கம் போல காலைல சமைக்கணும், சாப்புடனும் , புள்ளைகளுக்கும் மாமா அவுங்களுக்கும் சோறு கட்டணும் ..இதுக்கு நடுவுல அம்புட்டு வேலையையும் நாமதே பாக்கணும் !

நா கெதியா இருந்தாத்தே எம்புள்ளைகள பாக்க முடியும் ..இன்னு இருக்கே ! னு படபட னு பேசுறா ... நீ சொல்றது சரிதான் தேனு ...நம்ம உடம்புக்கு எது ஒதுக்கிடுமோ அது எல்லாத்தையும் நல்லாவே சாப்பிடலாம் ..அதுக்கேத்த வேலை இருந்தால் போதும் னு நா சொல்லி முடிகிறதுக்குள்ள ..."மாமா சாப்ட்டு முடிச்சிட்டுடாக" னு பர பர னு சேர்லேந்து எழுந்திரிச்சிட்டா !... அவள் அன்றைக்கு பார்த்த அதே தேனு ..பெருநகர வாழ்வியல் அவளைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை ... அவள் மாறவுமில்லை. "பாக்கலாம் தங்கம்" னு அவ கண்ணு நிறைய கண்ணீரோட டாட்டா காட்டிட்டு போனாலும் இன்னும் அவளது சலங்கை சத்தம் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது !

#வாழ்தல் அழகு

#விஜயா கிப்ட்சன்

( thanga.vijaya@gmail.com )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21" title="8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21" />8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21

 
 
 
English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Diet written by Vijaya Giftson.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X