For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 12... "எக்ளேர்ஸ்"!

Google Oneindia Tamil News

கல்லூரி மேற்படிப்பின் முதல் நாள் ... ஒரே கூட்டம் .. இரண்டு பிரிவுகளில் கிட்டத்தட்ட எண்பது பேர் .. யார் யாருன்னே தெரியாத அளவுக்கு ஒரே கச்சா முச்சா பேச்சுக்கள் .. ஒரு சிலர் முன்னாடி படித்த கல்லூரி நண்பர்களாக இருக்கக்கூடும் ..

"வா மச்சி சேந்து படிப்போம்" னு அப்ப்ளிகேஷனை போட்டு வந்து ஜாயின் பண்ணாலும் பண்ணீர்ப்பாங்க போல .. அவுங்க இயல்பா பேசிக்கிறதப் பாத்தா அப்டி தெரியுது ...! ... வந்து உக்காந்து கொஞ்ச நேரத்துல "மாப்ள டீ குடிக்க போவோமா?" னு ஒரு சத்தம் .. "டேய் இன்னும் அட்மிஷனே முடிஞ்சிருக்காது ...அதுக்குள்ளயும் உங்க அலும்ப ஆரம்பிச்சுடீங்களாடா" ..ன்னு பொண்ணுங்க பேசிக்கிறாங்க (பின்னாட்கள்ல "டேய் போயிட்டு வரும் போது எங்களுக்கும் நாலு சம்சா வாங்கிட்டு வந்திருன்னு " சொன்னதெல்லாம் ப்ரென்ஷிப் கதைகள்) ......

Sillunnu Oru Anubavam Eclairs written by Vijaya Giftson

பசங்க எப்படியும் ஒரே ஒரு ஒன் கொயர் நோட்டுதான் வச்சிருப்பாய்ங்க .. அதையும் போலீஸ் ஸ்டோரி படங்கள்ல நடிகர்கள் சட்டையை தூக்கிட்டு பேண்ட்குள்ள துப்பாக்கிய முதுகு பக்கமா சொருகிட்டு நடப்பங்களே அது மாதிரி தான் வைப்பாய்ங்க .. எப்படி தான் முடியுதோ? ... இந்த பையு , கர்சீப்பு , தனியா தண்ணி பாட்டுலு , சாப்பாடுக்கு டிபன் பாக்ஸ் இதெல்லாம் அவனுங்க கொண்டு வந்து நாங்க பாத்ததே இல்ல .. தட் இஸ் பாய்ஸ் போல !

எங்களுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா அறிமுகம் ஆய்ட்டே இருக்கோம்.

யூஜி என்னமோ வேறு வகையான சூழல் .... பட் நல்லதொரு அனுபவம் .... ஆல் வுமன்ஸ் காலேஜ் ... பட் பிஜி சூப்பர் .. நமக்கு வேற பாய்ஸ் ன்னா டக்குன்னு போயி பேசுறதுக்கு கொஞ்சம் தயக்கம்... திபு திபு னு பனைமரம் கணக்கா வளந்திருக்கானுங்க ... இவங்க கூடவா மூணு வருஷம் காலம் தள்ளனு யோசிச்சிட்டே பாதி நாளு ஓடிட்டு .. திடீர்னு ஒருத்தன் வந்து "ஏய் நீ தான விஜயா? "ங்கிறான் ... அடப்பாவி நானே பன்னெண்டாப்புக்குள்ள பத்து ஸ்கூல் மாறிட்டேன் .. இவன் யாரு? .. எங்கன நம்மள பாத்தான்? .. இல்ல சீன்போடறானா னு ஒரே கன்பீசன்! ...

டக்குனு "ஏட்டீ நீ டவுன்ல எல் .கே. ஜி படிச்சல்லா? " ங்கிறான் .. அடேங்கப்பா என்னவொரு ஞாபகம் .. உண்மைதான் .. நா பாட்டி வீட்டில் இருந்து படிச்சேன்னேன் .. எப்புடிடா கண்டுபுடிச்சேன்னு கேட்டேன் .. நாளைக்கு சொல்றேன்னு போய்ட்டான் .. பயபுள்ள பொய் சொல்லுது போலன்னு நினச்சேன் .. பட் சீரியஸ்லி என்னோட எல் கே ஜி போட்டோவோட வர்றான் .. இங்கன பாரு "இது ராஜ் , இது ஆறுமுகம் , இது ரமா டீச்சர் , மேல் வரிசையில கடைசீலேந்து ரெண்டாது யாருன்னு நல்லாப் பாரு ..அது நான்தான்" ங்கிறான் .. எனக்கோ அவ்ளோ பரவசம்.. இருபது வருசத்துக்கு அப்புறமா நம்மள ஒருத்தன் கண்டுபுடிச்சிருக்கானே! னு "ஐ ஆம் சோ ஹாப்பி"...

"நீ கலர் கலரா சிலேட்டு குச்சி கொண்டு வருவ.. அத தினம் நான் தான் பாதி ஒடச்சுருவேன், அப்புறம் நீ அழுதுகிட்டே டீச்சர் கிட்டப் போயி சொல்லி குடுப்பங்கிறான் ... மொத்தம் நாலு பிரிவு ,, அப்போல்லாம் ஒரு பெரிய ஹால் .. அதை செக்ஷன்சா பிரிக்க நடூல மரத்தட்டி தான் வச்சிருப்பாங்க .. பக்கத்துக்கு கிளாஸ்க்கு அடிக்கடி போயி மாத்தி மாத்தி வேற உக்காந்துக்கலாம்.. "ஒன் ஒன் இஸ் ஒன் , ஒன் டூஸ் ஆர் டூ ,ஒன் த்ரீ இஸ் த்ரீ "..ன்னு அம்புட்டு கிளாஸ்சும் சேந்து கத்தி சொல்லுவோம் ... கையில கம்ப வச்சுக்கிட்டு முன்னாடி நின்னு தினமும் ஒருத்தர் சொல்லிக்குடுக்கணும் ... அப்டி முன்னாடி போயி டீச்சர் மாதிரி நிக்கதுக்கு அவ்ளோ ஒரு போட்டி .. ஆமா அப்பத்தான "ஆல் ஸ்டூடெண்ட்ஸ் சட் அப் " னு மிரட்ட முடியும் ... .

.தண்ணி தவிச்சுதுன்னா ஏதோ ஒரு கலர் வாட்டர் பாட்டிலை எடுத்து மூடிய தொறந்து படக்குன்னு குடிச்சிட்டு வச்சிட்டு வந்திருவோம். ..இன்டெர்வல் விட்டோன்னா தான் " ங்கே ...ஏ ..ஏ" னு யாராச்சும் அழுவாங்க ..அப்பத்தான் தெரியும் "ஒஹோ இது அவன் தண்ணி பாட்டிலா?!" ன்னு .என்னவொரு சௌரியம் . ஜாலி இல்லடானு!" நானு ... சொல்லிட்டு ரெண்டு பேரும் சிரிச்சோம் ...

அதன்பிறகு முதன் முதலில் அறிமுகம் ஆனது என்னவோ எஸ்தர் தான்னு நினைக்கேன் .. நாசரேத்தில் இருந்து வருவாள் .. பிறகு பிரீடா .. என்று நட்பு வட்டம் பெருகிக்கொண்டே போச்சு ...அதுல ரொம்ப சுவாரசியம் என்னனா சனிக்கிழமை மதியம் கிளாஸ் முடிஞ்ச பிறகு வெவ்வேறு இடங்களில் இருந்து படிக்க வருகின்ற சில ப்ரெண்ஸ் எல்லாம் சேந்து எங்க வீட்டுக்கு சாப்பிட வந்துருவாங்க .. அம்மா வைக்கிற பருப்பு சாதம், கூட்டான்சோறு , சொதி , இஞ்சி பச்சடி, னு எல்லாம் அவுங்களுக்கு புதுசு ...ஏன் "புளிக்கொழம்பு கூட வித்தியாசமா வைக்கிறீங்கம்மா!" ..னு சொல்வாங்க .. "எங்க ஊருலலாம் தேங்காய் அரைச்சு ஊத்தி தான் புளிக்கொழம்பு வைப்போம் ..நீங்க சாம்பாருக்கு அப்டி செய்யுறீங்களே !" ம்பாங்க . அவங்கவங்க கொண்டு வந்த எல்லா பதார்த்தங்களையும் பகிர்ந்து சாப்பிடுவது ஒருவித அன்பு பரிமாற்றமா அமைஞ்சது ...

அடுத்து ஒரு சில வாரங்கள் அப்றம் எல் கே ஜி கதைகள் தான் ஓடுச்சு ..... "டிங்... டிங்.... டிங்..." னு இரும்பு பெல் அடிச்ச ஒடனே டீச்சர்லாம் "ஏளா ஒருத்தருக்கு ஒருத்தர் இடிக்காமப் பாத்து வரிசையாப் போங்கன்னு சொன்னப்புறமும் தட ...தட ..தட..ன்னு ஓடிப்போயி ரெண்டு மூணு பேரு எங்களுக்குள்ளேயே டம்மால் னு இடிச்சு , முட்டி மூணு வேறும் விழுந்தருக்கோம். அதுல என் தம்பிக்கு கை ஒடஞ்சுட்டு னு நினைக்கேன் .. மதியம் சாப்பாடு டிபன் பாக்ஸ் தொறந்தா , எல்லாரும் இட்லி --தோசை --பொடி தான் வச்சிருப்பாங்க ..எதையும் மிச்சம் வைக்காம சாப்பிடணும் னு ரமா மிஸ்ஸின் அன்பான மற்றும் கண்டிப்பான வேண்டுகோள் ... ஆமா புவனா , கல்யாணி லாம் எங்க இருக்காங்கன்னு தெரியுமா ? ஒருத்தி பெங்களூர்ல செட்டில் ஆயிட்டா டா .. புவனா பத்தி தெரியல... அப்போ வாட்சப் லாம் கிடையாது ஆனா யாஹூ மெஸ்ஸெஞ்சர் ல பேசலாம் .. அப்டி இப்டி தேடி கூட ஒன்னு ரெண்டு பேர தான் கண்டு புடிக்க முடிஞ்சிது.. அவ்ளோ சிரிப்பும் காமடியுமா பேசிட்டு இருந்தவன் .. பேசிட்டு இருக்கும் போதே முகமெல்லாம் டக் னு மாறுது..."என்ன டா" னு எல்லாரும் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க ... எதார்த்தமா எல்லாரும் உங்க அப்பா என்ன வேலை பாக்குறாங்க னு கேட்டுட்டு தான் இருந்தாங்க ..அவன் அப்பா தவறிட்டாங்க னு அப்புறம் தான் தெரிஞ்சது ..

இவன் நல்ல பையன்! ...அப்புறம் எப்டியோ சமாளிச்சுட்டு , "அம்மா தான் எல்லாத்தையும் பாத்துக்குறாங்க" ன்னான் .. டேய் நாங்கல்லாம் இருக்கோம்ல னு அன்னைக்குதான் "முஸ்தபா முஸ்தபா ,காலம் நம் தோழன் முஸ்தபா ,...டே பை டே --டே பை டே ..மூழ்காத ஷிப்பே பிரென்ஷிப்பா " பாட்டு பாடி ஆள கூல் பண்ணோம் .. அப்படியும் விடல ...பழங்கதைய.. "ஏட்டி நம்ம ஸ்கூல் குடியரசு தினம் ஞாவகம் இருக்கா ஒனக்கு ?, எல்லாரும் அன்னைக்குதான் வெள்ளையும் சொள்ளையுமா சாக்ஸ் , ஷூ லாம் போட்டுட்டு வெரப்பா நம்ம தேசிய கொடிக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு, வரிசையில நின்னு அந்த முட்டாயி வாங்கறதுக்காகவே போவோம்ல னானே பாக்கலாம் ..

அந்த பால்ய நினைவுகளின் கடலில் சோக நுரைகள் உள் இழுக்கப்பட்டு சந்தோச அலைகள் அந்த அறை முழுவதும் பரவியது ! சமீபத்தில் நெல்லைக்கு திரும்பியதும் இந்தக் கதையை ஒரு நாள் என் தோழி ப்ரியாவிடம் பகிர்ந்து கொண்டேன் ... கடைசீல பாத்தா.... தட் பாய் is a cousin டு பிரியாவாம் ... அவளும் அந்த போட்டோ ல இருக்கா ... வாழ்க்கை ஒரு வட்டம் . .வாட் டு டூ .... இன்னிக்கு வரைக்கும் முப்பத்தெட்டு வருசமா நாங்க பிரென்ஸ் ...சூப்பர் ல !!

#வாழ்தல் அழகு
விஜயா கிப்ட்சன்

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13]" title="8, 9, 10, 11, 12, 13]" />8, 9, 10, 11, 12, 13]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Eclairs written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X