• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 13... "காருக்கும் காருக்கும் கண்ணாளம்"!

|

"போ.....த்.....தி.....கி...னு படுத்துக்கலாம் ...ப....டு....த்...து...கி...னு...ம் போத்திக்கலாம்" ன்ன கதையா ரோடை ஒடச்சிட்டு போடுறாய்ங்களா இல்ல போட்டுட்டு ஓடைக்கிறாய்ங்களான்னே தெரியல ... அவ்ளோ குண்டும் குழியுமா இருக்கு ... மழை பேஞ்சப்பறம் வரிசையா பள்ளத்தாக்குகள் வேற... விவேக் சார் பட ஜோக்ல வர்ற மாதிரி "எம்பொண்ணுக்கு எப்படி சுகப்பிரசவம் ஆகுமோனு யோசனையா இருந்துச்சு ..ஒடனே ஒரு ஆட்டோல ஏறி ... டவுண்,பேட்டை , ரோடு வழியா தென்காசி போற ரூட்ல போனா போதும்!"னு மக்களே மீம்ஸ்ல கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க !

ஆத்தீ பராசக்தி நல்ல வழிய காமிச்சனு வேண்டாத குறைதான் ...அவ்ளோ அகல ரோட்டுல ஒத்தையா போனாலே எதுத்தாப்புல வண்டி வந்தா ஒன்னும் பண்ண முடியாது ..இதுல நடூல டிவைடர் வேற..நாங்களா கேட்டோம்? ..போற வாரவன்லாம் விழுந்து எழுந்திரிச்சி கை கால் மூட்டு அறுவை சிகிச்சை பண்ண வேண்டிருக்கு .... அந்த லட்சணத்துல இருக்கு ஊரும் ரோடும் ..ஒரு மழைக்கே தாங்கல ..தேவைக்கு ரோடைத் தோண்டிதான் ஆகவேண்டும் ...ஆனா தோண்டுன மாதிரி பூப்போல திரும்ப போட்டு விட்டுடீங்கன்னா புண்ணியமா போவும்!

Sillunnu Oru Anubavam road experience written by Vijaya Giftson

வண்டி ஓட்டிட்டு போகும் போது, நேராப் பாத்து ஓட்டவா? ...இல்ல நடூ ரோட்டுல குழி எங்க இருக்குன்னு தேடித் தேடி புதுப்பொண்ணு கணக்கா கீழயே பாத்துட்டு ஒட்டவா? ..மழை பெஞ்சு தண்ணி கட்டுனா அந்நியன் படத்துல வர்ற மாதிரி என்னென்ன-- எங்கெங்க இருக்குன்னே தெரிய மாட்டிக்கு..சும்மா ஒருத்தர் அவரு பாட்டுக்கு சிவனேன்னு ரோட்டு ஓரமா தான் நடந்து போய்ட்டு இருந்தாரு ...அவரப்போயி இடிச்சு......அவரு கீழ விழுந்து ..... (ஏண்டா ரோட்டுல ஓரமா நடந்து போறது ஒரு குத்தமா ?? )

காருக்கு பின்னாடி பைக்ல போனோம்னா ரெண்டு பின் சக்கரத்தையும் கால்குலேட் பண்ணிதான் போகணும் ... கார்காரன் வெவரமா பள்ளத்துக்கு இங்கிட்டு ஒரு டயரு , அங்கிட்டு ஒரு டயரு போட்டு வண்டிக்கு சேதாரம் வராம பாத்து பக்குவமா போயிர்ரானா இல்லையா ...ஆனா பின்னாடி வந்த டூவீலர்தான் ப....க்..க..த்...து..ல வந்து குழியப் பாத்தோன ஒரு நிமிஷம் மனசுல ஜெர்க்கு ஆகி இங்கிட்டும் ஒடிக்க முடியாம அங்கிட்டும் ஒடிக்க முடியாம "ட....ம்.....மா.....ல்" னு அதே குழியில வண்டிய போட்டு எடுத்துட்டு போக வேண்டியிருக்கு ...ஆங் அப்புறம் அந்த அண்டர் கிரவுண்டு ட்ரைனேஜ் ... வட்ட வட்டமா செங்கோட்டை தோசைக்கல்லு மாதிரி ...அங்கங்க ... முடியும் மூடாமலும் ...அதுல ஒரு கம்ப நடூல நட்டு சிவப்பு துணிய வேற கட்டி வச்சிருக்காய்ங்க ..டேஞ்சர் சிக்னலாம் !

இத எல்லாத்தையும் தாண்டித்தான் ஆபீஸ் போறவன் , வாரவன் , நம்ம ஸ்விக்கி , ஜோமட்டோ நண்பர்கள்(ஆர்டர் முடிக்கணும்னு அவங்க வேற எ.....ன்....னா ஸ்பீடு), இப்ப இப்போ பத்தாம் , பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வேற சைக்கிள்ல போறாங்க ...ஒரு அவசரத்துக்குப் பேட்டைக்கு போணும்னா கல்லணை பள்ளிக்கூடத்தைக் கூட தாண்ட முடியாது போல ...அடுத்து மக்களே நீங்க வீட்டுல கார் வாங்குதீங்களோ , ஹெலிகாப்டர் வாங்குதீங்களோ தெரியாது ஆனா கண்டிப்பா ஒரு பரிசல் படகு , அல்லது ஒரு நல்ல மோட்டார்--போட்டு மட்டும் தூத்துகுடியில சொல்லி செஞ்சு வாங்கி வச்சுக்குங்க ..ஏன்னா அங்க இப்ப வரைக்கும் வீட்டை சுத்தி குளம் தான்.. இன்னு தண்ணி வடிஞ்ச பாடில்ல ...எனது தோழி வீட்டில் இருந்து ரோட்டுக்கு போகவே படகுல போறாங்கன்னா பாத்துகோங்களேன்.

...இப்போலாம் எவன் இண்டிகேட்டர் சரியா போடுறான்? ..லைட்டா வலது பக்கமா மண்டைய திருப்பி பாக்குறாய்ங்க ..ஓஹோ தலைவர் ரைட்ல திரும்புறார்னு பின்னாடி வர்ற நம்ம வெத்தலையில மை தடவாமையே ஜோசியம் பாக்க வேண்டிருக்கு... இதுக்கு நடுல போய்கிட்டே இருக்கும் போது ரெண்டடி இடைவெளியில படக்குனு இண்டிகேட்டர் ஆன் பண்ணுவாரு ..நம்ம என்னமோ ஆல் டைம் அலெர்ட் ஆறுமுகமாவே இருக்கணும் போல !... வண்டியில பின்னாடி உக்காந்திருக்கிற ஒரு சிலரை பாத்திருக்கீங்களா? மாஸ்டர் படத்துல வர்ற ஆஸ்ட்ரிச் கதை கணக்கா சுவாரசியமா மண்டைய ஆட்டி ஆட்டி அதுக்குமேல கைய நீட்டி நீட்டி பேசிட்டே போவாங்க ..டேய் நீ உன் சொந்த கத சோக கதைய பேசுறியா இல்ல இண்டிகேஷன்கு வலது கைய நீட்டுதியான்னு எனக்கென்ன கெவுளியா அடிக்கு ...ஸ் ....ஸ் ....ஸ்...சப்ப்பா இப்போவே கண்ண கட்டுதே! ..உனக்குலாம் எவம்லா லைசென்ஸ் குடுத்தான்? னு குடுத்த ஆப்பிசருக்கு வேற ரெண்டு திட்டு ...என்ன செய்ய இப்டி தான் போவுது ஆன்ரோட் பொழப்பு ..

அதேமாதிரி லைசென்ஸ் எடுக்கும் நண்பர்கள் வாழ்க்கையில் உங்க கூடவே பயணிக்க போகும் அந்த வண்டி எதுவானாலும் மிக நன்றாக பல மாதங்கள் ஒட்டி பழகிவிட்டு லைசென்ஸ் எடுங்கப்பா ...ஏதோ நா --சி பி சி , ராயல் என்பீல்டு, யுனிகார்ன் , பல்சர் , டியூக் ஆசப்பட்டு வாங்கி வச்சிருக்கேன் னு டுர் டுர் டுர் னு ஒரு வண்டியில நாலு பேரு பறக்காதிங்க ...பறந்தீங்கன்னா இப்போல்லாம் காவல்துறை கூப்டு ரெக்கைய கட் பண்ணி விட்டுறாங்க ...சாக்ரதை ..அப்புறம் பெற்றோராகிய நமக்கு ---"எம் பையன் பன்னெண்டு வயசுலேயே ஸ்கூட்டி ஓட்டுவான்" னு பெருமைக்காக சிறு வயதிலேயே அவர்களுக்கு வண்டி வாங்கி குடுக்காமல் இருப்போம் ..அதற்கான வயது வரும் வரை அவன் சைக்கிளில் பயணம் செய்து அணைத்து ரோட் சென்ஸையும் பழகிக்கொள்ளட்டும் அதுவே நல்லது என எண்ணுகிறேன் ...இது தேவையற்ற விபரீதங்களை தவிர்க்கும் சரிதானுங்களே ..

எல்லாரும் கண்டிப்பாக சீட் பெல்ட் போட்டுட்டு போங்க . .சமீபமா கூட மிக அழகான விளக்கத்துடன் ஒரு காவல்துறை நண்பர் சீட் பெல்ட் மெக்கானிசம் பற்றி அருமையான காணொளியை வாட்ஸப்பில் பதிவிட்டு இருந்தார் .. அநேகமாக எல்லாருமே அதைப் பாத்திருப்பீர்கள் ! அதே மாதிரி ஹெல்மெட் அணிவதற்கும் விழிப்புணர்வு போஸ்டர்கள் , குறும்படங்கள் னு ஞாபக படுத்திக்கிட்டே தான் இருக்கின்றார்கள் அரசு தரப்பினர் . ...சரி ஒரு எமர்ஜென்சிக்காக ஆஸ்பத்திரி வரைக்கும் போய்ட்டு வர வேண்டி இருந்துது ...நாங்க வந்து இறங்குனதும் ..பின்னாடி வந்தவரின் கார் லேசாகத் திருப்பி வீட்டுக்கு சற்றே முன்னாடி நிறுத்திருவோம்னு பாத்திருக்காரு ...வண்டி சக்கரம் சொளப்புன்னு சகதிக்குள்ள அப்புடியே பதிஞ்சு இறங்கிட்டு ...சொல்லப் போனா அந்த இடத்தில பள்ளம் இருக்கற அறிகுறியே இல்ல ..வண்டி ஒன் சைடா கிடக்கு ...அன்னிக்கு ஞாயித்துக்கிழம வேற ...ஒருத்தர் மம்பட்டி எடுத்துட்டு வந்து டயருக்கு அடியில இருக்கற சேத்தை தோண்டி கிளியர் பண்ராரு..சத்தம் கேட்டதுல அக்கம் பக்கத்து நண்பர்கள் வந்துட்டாங்க ...

ஆளாளுக்கு ஒவ்வொரு ஐடியா தோணுது ...வண்டியில ஏறி ஸ்டியரிங்க ரைட்டுல ஓடிச்சு ஆக்சிலேட்டரை குடுத்தா வண்டி ஏறிரும்னு ஒருத்தர் .... அதுவும் முயற்சி பண்ணியாச்சு ...இடது பக்க சக்கரம் பாதிக்கு மேல பொதிஞ்சுட்டு ..நாலு பேரு இந்த சைடுலேந்து லேசா மேல் பக்கமா தள்ளுனா தூக்கிரலாம்னும் பேசிக்கிடுதாங்க ....அண்ணன் ஒருத்தர் தான் இந்த வண்டிக்கும் இன்னொரு வண்டிக்கும் கயிறு கட்டி "டோ" பண்ணி தூக்கிரலாம்னு யோசனை சொல்லுதாரு ...ரைட்டு ...இப்போ கயிருக்கு வழியப் பாக்கணும் ..ரொம்ப சமயோஜிதமா ஒருத்தர் நீளமான கம்பி ஒன்னு எடுத்துட்டு வந்துட்டாரு ..அதை ரெண்டு வண்டிக்கும் இணைச்சு கட்டியாச்சு ..பெரிய வண்டி இழுக்க அது லேசா மேல வருது , வருது ....ஆ..ஆ ....கயிறு டப்புண்ணு அந்துட்டு.. ஆனா அனைவரின் கூட்டு முயற்சியால ஒரு வழியா தூக்கிவிட்டாச்சு ...வடிவேலு அண்ணன் சொன்னா மாதிரி எதிர்பாக்காம "சேத்துலேயும் அடி வாங்கியாச்சு -சோத்துலேயும் அடி வாங்கியாச்சு "

நல்ல வேளை அது மெயின் ரோடும் இல்ல .. முன்ன பின்ன வண்டிகள் ஏதும் வரவும் இல்ல... இந்த தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில் நாம் அனைவரும் அங்கிட்டு இங்கிட்டு சைடு மிர்ரரையும் கவனித்துக்கொண்டு , செல்போன் பேசாமல், அடுத்தவர்களின் நல் வாழ்வையும் மனதில் கொண்டு போக்குவரத்து சட்டதிட்டங்களின் படி வண்டி ஓட்டுவோம் என்று உறுதி மொழி எடுத்து கொள்வோம் .."சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு" ..நாம் வெளியில் சென்று வீடு திரும்பும் வரைக்கும் நம் மனதிற்கு இனிமையானவர்கள் , நமக்கு அன்பானவர்கள் நமக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள் என்பதை என்றுமே நினைவில் கொள்ளுவோம் ...

#சாலை விதிகளை மதிப்போம்
#DRIVE SAFE LIVE SAFE
#வாழ்க வளமுடன்
#விஜயா கிப்ட்சன்

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13]" title="8, 9, 10, 11, 12, 13]" />8, 9, 10, 11, 12, 13]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Road experience written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X