• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 17... "தன்னம்பிக்கை"

|

இந்த வாட்ஸாப், முகநூல் பக்கங்கல்லாம் வரும் முன்னாடி "பென் பிரண்ட்ஸ் " ன்னு சிலர் இருப்பாங்க ..யாருக்கும் யாரையும் தெரியாது ....வெவ்வேறு ஊர்களில் இருப்பார்கள் ...ஆனாலும் கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள்..அதன் மூலம் நல்ல நட்புக்கள் நிறைய பூத்திருக்கின்றன! .

கிட்டத்தட்ட காதல் கோட்டை படத்தில் வர்றமாதிரினு வச்சுக்கலாம் ...நம்ம போட்ட கடுதாசி கிடைச்சுதா இல்லையானு நினச்சுட்டே இருக்கற பதட்டம் இருக்கே ...பதட்டம் ..அப்பப்பா..சொல்லி முடியாது ..திடீர்னு ஒரு நாள் நாம எதிர்பாராம இருக்கும்போது நமக்கு பதில் கடுதாசி வரும் பாருங்க ...ஹையோ அப்டி ஒரு சந்தோசம்.

Sillunnu Oru Anubavam self confidence written by Vijaya Giftson

அவர்களில் பலர் பல வருடங்கள் சந்திக்காமலே தான் இருந்திருப்பார்கள் ..அவங்க பேரு தான் "பேனா நண்பர்கள் " ..நா பத்தாவது படிக்கும் போதில் இருந்து ஒரு பொண்ணு லெட்டர் போடும் ...அவள் பெயர் ஜெய்சி , கண்ணூர் , கேரளா மாவட்டம் .. ரெண்டு அல்லது மூணு மாதத்திற்கு ஒரு முறை தான் கடிதம் வரும் ...அவளுக்கும் எனக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் மட்டுமே ..."ஹாய் மை நேம் இஸ் ஜெய்சி ,ஹௌ ஆர் யூ ? னு ஆரம்பிச்சு என்னென்ன எழுதினோம்னு ஞாபகம் இல்லை ..பத்தாவது பொது தேர்வு எழுதும் பொழுது எப்டியோ கடிதத்தொடர்பு நின்னு போச்சு ..வேற வேற இடங்களுக்கு மாற்றலாகி போய் விட்டோம் ..அப்டி அவள் முகவரி தொலைந்தும் போனது ..

ஒரு நாள் கடைத்தெருவில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தேன் ..வழியில் ஒரு முதியவர் ..என்னவோ யோசனை அவருக்குள் ...திடீரென்று என் பக்கமாக திரும்பி .."எம்மா இந்த கடுதாசியை வாசிச்சு காமியேன்!" ங்கிறாரு ..சரி , எழுத படிக்க தெரியாதவர் போல ..அதுனால கேட்ருக்கலாம் . .இல்ல நம்மள பாத்தா நாலு எழுத்து படிச்ச புள்ள மாதிரி தெரியுது போல !" னு நினச்சுகிட்டே அந்த பேப்பரை கையில் வாங்கிக்கொண்டேன் ..என் கையில் குடுத்து விட்டு நிலத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார் ...எட்டாக மடித்து வைக்க பட்டிருந்த காகிதத்தை நான் பிரித்தேன் ..நீல நிற மையால் எழுதி இருந்தது .."அன்புள்ள அப்பாவிற்கு , ரகு எழுதுவது ..அம்மா , சீதா நீங்கள் எல்லாரும் நலமா..நான் அடுத்த லீவுக்கு அங்கு வருவேன் ..இத்தோடு கொஞ்ச நாட்கள் கழித்து மணி ஆர்டரில் உங்களுக்கு பணம் அனுப்புகிறேன் ..உடம்பை பார்த்து கொள்ளுங்கள் ..உங்கள் அன்பு மகன் --ரகு.

"தாத்தா ..." .."ம்ம்ம் .." உங்க மகன் அடுத்த லீவுக்கு வருவாராம் ..சரியா! ..அதை தான் எழுதியிருக்கு இதுல ..இந்தாங்க பத்திரமா வச்சுக்கோங்க ..."னு திரும்ப கொடுத்துட்டேன் ..குடுத்தவுடன் அவர் கதறி கதறி அழுகிறார் .."அப்டியா எழுதிருக்கான் ..பாவிப்பய சொன்னதோட சரி ..எங்க வந்தான் ..?"ங்கிறாரு .."ஏன் என்னாச்சு "னு கேட்டேன் ..தெரியலம்மா ..இன்னிக்கு வரைக்கும் வரலைங்கறாரு .. நல்ல கூர்ந்து கவனிச்சப்புறம் தான் தெரியுது அவருக்கு பார்வை குறைபாடு இருக்குனு ..எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...சரி தாத்தா வருத்தப்படாதீங்க ..னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் .

மறுபடியும் ...."ம்ம்ம்மா " னு கூப்புட்றாரு ..."என்ன தாத்தா காசு ஏதும் வேணுமா? னு கேக்கதுக்குள்ள "நா ஊதுபத்தி ,சாம்பிராணி ,பேஸ்ட் , பலூன் , சின்ன குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் , எல்லாம் அந்த கூடையில வச்சிருக்கேன் ..உங்களுக்கு வேண்டியத எடுத்துட்டு அந்த உண்டியல்ல காசு போட்டுட்டு போங்க ங்கிறாரு .."என்ன இவரு இந்த காலத்துல இப்டி இருக்காரு ..நல்ல படிச்சபுள்ளைங்களையே (உஷாரா கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி பாத்துட்டே இருந்தா கூட) ஏமாத்திருது இந்த கேடு கெட்ட உலகம் ..இவரு எப்படி இப்டி னு மனசுக்குள்ள எனக்கு பல கேள்விகள் ஓடிட்டே இருக்கு?! ..சரினு நாலஞ்சு பலூன் எடுத்துட்டு காசு போட்டுட்டேன் தாத்தா !" னு சொன்னேன் ..அப்பவும் ஏதோ கேக்க தயங்குறாரு ...சொல்லுங்க னு சொன்னேன் ..அதில்லம்மா ...என்னோட பேத்தி இருக்கா ..இந்த வருஷம் பத்தாப்பு படிக்கா! அவளும் இந்த பார்வையற்றோர் பள்ளியில் தான் படிக்கிறா ...அவளுக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும் ! ன்னாரு ..சரி மறுபடியும் படிப்பு செலவுக்கு காசு கேக்க போறாருன்னா அதுதான் இல்ல ...அவர் சொன்னதைக் கேட்டு அசந்து போனேன் ...அவ படிச்சு பெரிய ஆளாகி பாட்டில் ஐ .ஏ .எஸ் மாதிரி ஆவ போறாளாம் ..ன்னாரு ..எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு ..அதுக்கு நா என்ன தாத்தா பண்ணனும் ?! னு கேட்டேன் ..நீங்க ஒரு "பேனா நண்பராய் "அவளுக்காக பரீட்சை எழுதிகொடுக்கணும், னு கேட்டுக்கிட்டாரு ...

இப்படிப்பட்ட உதவியை செய்ய புண்ணியம் பன்னீர்க்கணும் ..கண்டிப்பாக செய்றேன் தாத்தா னு சொல்லிட்டு வந்துட்டேன் ..வந்து சில நாட்கள் கழிந்தன ..சொல்லிட்டேனே தவிர சில அலுவல் காரணமாக மறந்து போனது உண்மை .. திடீரென்று ஒரு குறுந்செய்தி ...இப்டி பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பரீட்சை எழுத ஆட்கள் தேவைனு! ..எனக்கு "ச்ச ...நம்ம இப்படி இருந்துட்டோமே ..அன்னைக்கே தாத்தா சொன்னாரே" னு நினைச்சுகிட்டு ..நானும் எழுத வரேன்னு பதில் போட்டுட்டேன் ..பரீட்ச்சை ஹால் ...அவர்கள் அருகில் நாம் அமர்ந்து கேள்விகளை வாசிக்க வாசிக்க அவர்கள் சொல்லும் பதிலை அவர்களுக்காக நாம் அன்செர் ஷீட்டில் எழுத வேண்டும் ...இது ஒரு புது அனுபவம் ..மனசுக்கு ரொம்ப திருப்தியாய் அமைந்தது ...அதிலேயே நம்பரும் பெயரும் அச்சடிக்கப்பட்டு இருந்தது ..எனக்கு இருந்த டென்ஷன் ல பொண்ணு பேரை கூட முதலில் கவனிக்க வில்லை ..."நீ சொன்னதெல்லாம் எழுதிட்டேன் மா " என்று அவளிடம் சொன்னேன் ..சரிங்க மேடம் ..ரொம்ப நன்றி னு என் கைய
புடிச்சுகிட்டு சொன்னா .."உன் பேரு என்ன --சாரி நா பேப்பர்ல கவனிக்கல னு சொன்னேன் ..அதுக்கு அவ "ஜெயஸ்ரீ " னு சொன்னா ..இந்த இடத்தில் எனக்கு "ஜெய்சி யும் ஜெயஸ்ரீ யும் வேறு வேறாக தெரியவில்லை ..!

அன்னைக்கு சாயந்தரம் அருகில் இருக்கும் கடையில் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க சென்றேன் ..அங்கு தாத்தா பரபரப்பாக என்னவோ செய்து கொண்டு இருந்தார் .."தாத்தா எப்படி இருக்கீங்க னேன் ..""ம்மா நீங்களா /" னு கேட்டுட்டே என் கையில மிட்டாய் ஒன்றை கொடுத்தார் .."எதுக்கு தாத்தா ..?" "ம்ம்மா என் பேத்தி நல்ல படியா பரீச்சை எழுதிட்டா ..யாரோ விஜயா மேடம் னு ஒருத்தங்க வந்தாங்களாம் ..எல்லாத்தையும் நிதானமா கேட்டு எழுதியும் குடுத்தாங்க னு சொன்னா .." "ஒரு நிமிடம் என் கண்களில் கண்ணீர் ..என்றைக்கோ உள்ள விட்ட குறை தோட்ட குறையை இயற்கை எவ்வாறெல்லாம் சமன் செய்து கொள்கிறது !" என்றெண்ணி வியந்து போனேன்

.."சரி தாத்தா அவ நல்லா வருவா" என்று சொல்லிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன் ..அவருக்குள் இருந்த தன்னம்பிக்கை இமயத்தை தொட்டிருந்தது ..வெரி நார்மல் சில்றன்ஸ் , ஒரு குறிக்கோள் கூட இல்லாமல் இன்று பள்ளிகளில் படிப்பதை பார்க்கிறோம் ..ஆனால் பார்வை குறைபாட்டை கூட எண்ணாமல் படித்து பெரிய பதவிக்கு வர வேண்டும் என்ற மிக உயரிய எண்ணம் உடைய இம்மனிதர்கள் என்றென்றும் கடவுளின் குழந்தைகளே !!

#எண்ணிய முடிதல் வேண்டும்
#வாழ்தல் அழகு

விஜயா கிப்ட்சன்
thanga.vijaya@gmail.com

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17]" title="8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17]" />8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Self Confidence written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X