For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எழுத ஆர்வமா?-தட்ஸ்தமிழ் பத்திரிக்கையாளர் திட்டம்!

By Staff
Google Oneindia Tamil News

Laptop
நீங்கள் ப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரா?
எழுதுவதில் திறமையும், ஆர்வமும் கொண்டவரா?
அல்லது, மனதுக்குள் நிறைய எண்ணங்கள் அலை மோதினாலும் அவற்றை எங்கு போய் கொட்டுவது என்று தெரியாமல் திணறுபவரா?
அப்படியானால் கவலையேபடாதீர்கள், உங்களது ஆதங்கத்தைப் போக்கி வைக்கப் போகிறது தட்ஸ்தமிழ்.

உங்களது அனுபவங்களை, எழுத்துத் திறமையை, ஆர்வத்தை நமது தட்ஸ்தமிழில் எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

திறமையான எழுத்தாளர்கள், பிளாக்கர்கள், மாணவர்கள், தங்களது அனுபவத்தை, கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

உலக விவகாரத்திலிருந்து உள்ளூர் செய்திகள் வரை, அரசியல், விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, கலை, கலாச்சாரம் என ஏகப்பட்ட நிகழ்வுகளை நிமிடத்துக்கு நிமிடம் துல்லியமாக அப்டேட் செய்து வருவது தட்ஸ்தமிழ். தமிழகத்திலும், உலக அளவிலும், நடைபெறும், தமிழர்கள் சம்பந்தப்பட்ட, தமிழ் சம்பந்தப்பட்ட அத்தனையையும் உங்களுக்கு இலவசமாய் அறிவிக்கும் தளம் இது.

உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் பல லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட தட்ஸ்தமிழ் இணையத் தளத்தில் எழுத விரும்பும் உங்களுக்கு அதற்கு முன்பு சில டிப்ஸ்கள்..

ஒரிஜினல்..

நீங்கள் எழுதப் போகும் ஒவ்வொரு கட்டுரையும், செய்தியும் அசலானவையாக இருக்க வேண்டும். வேறு செய்தித் தாள்கள், இணையத்தளங்கள் உள்ளிட்ட எதிலுமே அது வந்திருக்கக் கூடாது. அவற்றை நீங்கள் காப்பி செய்து தரக் கூடாது.

எந்தெந்த சப்ஜெக்ட்டில் எழுதலாம்?

பிரபலங்கள்
பிரச்சினைகள் (போக்குவரத்து, சுகாதாரம், சுற்றுச்சூழல், பொது பிரச்சினைகள், இப்படி..)
பிராந்திய விளையாட்டுகள்
உங்களது நகரில் நடைபெறும் நிகழ்வுகள்
உங்களது நகரின் முக்கிய இடங்கள்.
வரலாற்றுச் சம்பவங்கள், முக்கிய நிகழ்வுகள்
கல்வி நிறுவனங்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள்
இளைஞர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் - சினிமா விமர்சனங்கள்
மற்றும் பிற.

கண்டிப்பாக செய்யக் கூடாதவை..:

அரசியல், குற்றம், புலனாய்வு கட்டுரைகளை தவிருங்கள்.
யாரையும் திட்டியோ, விமர்சித்தோ, அவதூறு செய்தோ எழுதாதீர்கள்

எப்படி அனுப்பலாம்..?:

இமெயில் மூலம் மட்டுமே அனுப்புங்கள்.
தமிழில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.
யுனிகோட் எழுத்துருக்களை நீங்கள் பயன்படுத்தினால் மிகவும் சந்தோஷம். இவை இன்டர்நெட்டில் தாராளமாகவும், இலவசமாகவும் கிடைக்கிறது.
செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் 6 வார்த்தைகளுக்கு மிகாமல் தலைப்பிட்டு அனுப்புங்கள்
600 வார்த்தைகளுக்கு மேல் கட்டுரை போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
முடிந்தால் கூடவே புகைப்படங்களையும் சேர்த்து அனுப்புங்கள்.
புகைப்படங்கள் காப்பிரைட் பிரச்சினையில் சிக்காததாக இருக்க வேண்டியது அவசியம்.
எழுதுபவரே புகைப்படம் எடுத்து அனுப்பினாலும் வரவேற்கப்படும்.
அனைத்து செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்களையும் .txt டாக்குமென்டுகளாக [email protected] என்ற இ மெயிலுக்கு அனுப்பவும். மறக்காமல், சப்ஜெக்ட்டில், Citizen Journalism என்பதையும் சேருங்கள்.

நிபந்தனைகள்-விதிமுறைகள்:

ஒரு கட்டுரை அல்லது செய்தியை ஏற்பதும் நிராகரிப்பதும் போர்ட்டல் அல்லது ஆசிரியரின் முழு உரிமையாகும்.

கட்டுரை அல்லது செய்தியில் தேவைப்படும் மாற்றங்களை செய்யும் உரிமை ஆசிரியருக்கு உண்டு.

எழுதுபவரின் பெயர் கட்டுரையில் இடம் பெறும்.

மேலும் ஏதாவது சந்தேகம், விளக்கம் தேவைப்பட்டால், ஆசிரியரை [email protected] என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு கேட்டு விளக்கம் பெறலாம்.

பிறகென்ன, செய்தி, கட்டுரையை அனுப்ப ஆரம்பிக்க வேண்டியதுதானே...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X