For Daily Alerts
Just In
காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இணையத் தமிழ்ப் பயிலரங்கம்!
காரைக்குடி: தமிழ்வள்ளல் இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்களின் கருணையாலும், மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் நெறிகாட்டலாலும் காரைக்குடியில் இராமசாமி தமிழ்க்கல்லூரி தோற்றம் பெற்றது. பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பு நல்கிய இக்கல்லூரியில் 01.04.2016 காலை 10.15 மணிக்கு இணையத்தமிழ்ப் பயிலரங்கம் தொடங்கி நடைபெற உள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றிப் பயிலரங்கத்தைத் தொடங்கிவைக்க உள்ளார். முனைவர் மு.இளங்கோவன் மாணவர்களுக்கு இணையத்தமிழ் குறித்த அறிமுகத்தைச் செய்துவைத்துப் பயிற்சியளிக்க உள்ளார். தமிழார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
செய்தி - முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.com