• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்

By புன்னியாமீன்
|
Desert
1994ம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜுன் 17ம் தேதி முதல் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு ஜனவரி A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution) பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ம் தேதி அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாவதற்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் (parties) அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் 11வது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு, பொருளாதார உதவி மற்றும் இந்த நூற்றாண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாலைவனமாதலை உதாரணப்படுத்தக்கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலை நில பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.தற்போது அந்நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது.இது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.

பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான இத்தினத்தின் போது, பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானதுமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும். பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100ம் ஆண்டில் 540- 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50-2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இரண்டாம் பக்கம்...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more