For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு!

Google Oneindia Tamil News

- புன்னியாமீன்

உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இ‌ந்த ஆ‌ண்டு (2013) ஆகஸ்ட் 4ஆ‌ம் திகதி உலக ந‌ட்பு ‌தின‌மாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம்.

World friendship day

இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கிடையே அல்லது பல சமூகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு நாடுகளுக்கிடையே அல்லது பல நாடுகளுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு என்று பல வடிவங்களில் அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், பொதுவாக நட்பு தினம் என்று கூறும்போது இருவருக்கிடையே ஏற்படக்கூடிய நட்பின் பரிமாணமே கருத்திற் கொள்ளப்படுகின்றது. இது ஆண் -ஆணிடையே, பெண் - பெண்ணிடையே, ஆண் - பெண்ணிடையே ஏற்படலாம்.

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌ ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ள், மனை‌வியை‌விட நமது து‌க்க‌த்‌‌திலு‌ம், ச‌ந்தோஷ‌த்‌திலு‌ம் ப‌ங்கு கொ‌ள்வ‌தி‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கின்றன‌ர். தா‌யிடமு‌ம், மனை‌வி‌யிடமு‌ம், த‌ந்தை‌யிட‌ம்கூட ஆலோசனை செ‌ய்ய முடியாத பல விடய‌ங்களை நண்ப‌ர்களுட‌ன் கல‌ந்துரையாடுவத‌ன் மூல‌ம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படுவதுண்டு.

உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது. பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை அல்லது தீர்வு காண வேண்டிய விடயத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக்கொள்வதனால் விமோசனம் கிடைக்கப்போவதில்லை மாறாக மன அழுத்தங்களும், விபரீதங்களுமே ஏற்பட இடமுண்டு.

உண்மையான நட்புடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கையில் சில சந்தர்ப்பங்களில் எமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாமல் இருக்கலாம். த‌ற்போதைய வேகமான ந‌வீன காலத்திலும் நட்பினை கௌரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சில நட்பினை கலங்கப்படுத்தாமலும் இருப்பதில்லை.

சாதி, இ‌ன‌‌ம், மொ‌ழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு‌வரு‌ம் இ‌ந்த நண்பர்கள் ‌தி‌ன‌த்‌‌தி‌ல், தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் ந‌ண்பா உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது அவ‌ர்க‌ள் ஞாப‌க‌ம் வருதே... ந‌ண்பா ஞாபக‌ம் வருதே... ப‌ள்‌ளி‌க் கால‌ங்‌க‌ளி‌ல் நா‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌ந்து சு‌ற்‌றியது. ஆற்றங்கரை‌யி‌ல் ‌சிறு வய‌தி‌ல் க‌ல் எ‌றி‌‌ந்து ‌விளையாடியது. மா‌ந்தோ‌ப்‌பி‌ல் மா‌ங்கா‌ய் ப‌றி‌த்து ‌தி‌ன்ற சுவையான நா‌ட்க‌ள் எ‌ன்று பல பழைய ‌நினைவுகளை நி‌னை‌த்து‌ப் பா‌ர்‌‌த்து பூ‌ரி‌ப்படைவா‌ர்க‌ள்.

ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌த்‌தி‌ல்... நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்க வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்க‌‌ள் ஒருவரை ஒருவ‌ர் க‌ட்‌டி‌த்தழு‌வி த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர். தொலைதூர‌த்‌தில இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு செ‌ல்பே‌சி வ‌ழியாக குறு‌ந்தகவ‌ல் அனு‌ப்‌பியு‌ம் (எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்.), க‌ணி‌னி வ‌ழியாக ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்‌பியு‌ம் த‌ங்க‌ள் ந‌ட்பை பல‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோம். அடுத்ததாக உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது. ஆனால் பலர் நட்பின் மகத்மீகத்தை சரிவர உணர்ந்து கொள்வதில்லை.

இதுநா‌ள் வரை‌யிலு‌ம், ந‌ண்ப‌ர்களே எ‌ன‌க்கு இ‌ல்லை எ‌ன்று யாரு‌ம் கூ‌றி‌‌விட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.

நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

English summary
An article by Punniyameen on friendship day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X