For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய இரும்பி்ல் கதிரியக்கம்!: ரஷ்யா-ஜெர்மனியில் பரபரப்பு!!

By Staff
Google Oneindia Tamil News

Radioactive Steel
-சதுக்க பூதம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்பில் கதிரியக்கப் பொருட்கள் கலப்படமாகியிருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

முதலில் ரஷ்யாவில் இறக்குமதி செய்யபட்ட இந்திய இரும்பு, எஃகுப் பொருட்களில் கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வருடத்துக்கு அனுமதிக்கபடும் கதிரியக்க அளவை ஒரே நாளில் இந்திய இரும்பு வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அது இந்தியாவிற்கு திரும்பி அனுப்பபட்டுள்ளது. அந்த இரும்பு முறையாக அழிக்கபட்டதா? அல்லது அது இந்திய சந்தையில் விற்கபட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

ரஷ்யாவிற்கு அனுப்பபட்ட இரும்பில் மட்டும் இவ்வகை கதிரியக்கம் இல்லை. ஜெர்மனிக்கு அனுப்பபட்ட இரும்பிலும் கதிரியக்கம் இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. கதிரியக்கம் உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பது, கேன்சரை கூட விளைவிக்கலம். இந்த இரும்பை உற்பத்தி செய்தது மும்பையைச் சேர்ந்த நிறுவனமாகும்.

மேலை நாடுகளில் இது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகவும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய இறக்குமதியை எதிர்க்கும் லாபிக்கள் (http://www.economicpopulist.org/?q=content/another-reason-buy-american-radioactive-steel) இதை முக்கிய ஆயுதமாக எடுத்துள்ளன.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது- இத்தகைய அபாயகரமான இரும்பை மீண்டும் இந்திய சந்தையிலேயே லாப நோக்கில் விற்று விடக் கூடாது என்பது தான்.

இது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுவது அவசியம். இது பற்றிய செய்திகளை ஜெர்மனியின் முக்கிய பத்திரிக்கையான spiegel தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரை:
http://www.spiegel.de/international/world/0,1518,607840,00.html

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X