For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாம்பின் கால் பாம்பறியும்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (45)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வளர்மதி செல்போனில் குரலைத் தாழ்த்தினாள்.

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-45

" காரணம் இருக்கு மேடம் "

" என்ன காரணம்.... ? "

" பாம்பின் கால் பாம்பறியும் "

" நீ சொல்றது எனக்குப் புரியலை வளர் "

" புரியும்படியாகவே சொல்றேன் மேடம்..... " என்று சொன்ன வளர்மதி பேச்சைத் தொடர்ந்தாள்.

" மனோஜை மடக்க நீங்க கமேண்டோ படையை அதிரடியாய் அனுப்பி வெச்சது சரிதான். ஆனா மனோஜின் வீட்டுக்குப் போனதும் ஏசிபி அன்பரசன் எடுத்த நடவடிக்கைகள்தான் சரியில்லை "

" சரியில்லைன்னு எப்படி சொல்றே .... ? "

" மேடம்.... மனோஜை மடக்கணும்ன்னா ஏசிபி அன்பரசன் ஒரு சத்தமில்லாத ஆப்ரேஷனை நடத்தியிருக்கணும். அப்படி நடத்தியிருந்தா அது ஒர்க் அவுட் ஆகியிருக்கும் "

" சத்தமில்லாத ஆப்ரேஷனா.... ? "

" ஆமா மேடம்..... மனோஜ் மாதிரியான படித்த கிரிமினல் ஆட்கள் ரொம்பவும் எச்சரிக்கையோடு இருப்பாங்க.....தன்னைச் சுத்தி நடக்கிற நிகழ்வுகளில் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டாலும் தப்பிச்சுடுவாங்க.... அதுதான் இப்ப நடத்திருக்கு "

" மனோஜ் இப்ப தப்பிச்சுப் போக வாய்ப்பு இருக்குன்னு சொல்ல வர்றியா? "

" ஆமா மேடம் "

" எப்படி? "

" ஏசிபி அன்பரசன் மனோஜோட கஸின் பிரதர் பிரேம்குமாரை தனக்கு ஹைஃபீவர் இருப்பதாக சொல்லி மனோஜை வீட்டுக்கு வரவழைக்க ஏற்பாடு பண்ணியிருக்கிறதாய் சொன்னீங்க இல்லையா மேடம் ? "

" ஆமா...... "

" மனோஜ் இந்த இடத்துல வேறுவிதமா ரியாக்ட் பண்ணியிருக்கலாம் மேடம். அதாவது வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே வரும்போது நார்மலாய் இருந்த பிரேம்குமார்க்கு ஹைஃபீவர் வர என்ன காரணம்ன்னு மனோஜ் யோசனை பண்ண வாய்ப்பு இருக்கு...... "

" திடீர்ன்னு உடம்புக்கு முடியாமே போனவங்க எத்தனை பேர் இல்லை வளர் ? "

" ஒ,கே.மேடம்...... பிரேம்குமார் தனக்கு ஹைஃபீவர் உடனே புறப்பட்டு வான்னு சொன்னதை மனோஜ் ஒருவேளை நம்பியிருந்தா அவர் அடுத்த நிமிஷமே பண்ணக்கூடிய வேலை என்னவாயிருக்கும்ன்னு உங்களாலே கெஸ் பண்ண முடியுதா ? "

" இதுல கெஸ் பண்ண என்ன இருக்கு. மனோஜ் உடனே வீட்டுக்குப் புறப்பட்டு வரத்தான் பார்ப்பார் "

" நான் அப்படி நினைக்கலை மேடம் "

" அப்புறம்..... ? "

" அதே குடியிருப்பில் இருக்கிற தன்னோட ஃப்ரண்ட் ஒருத்தர்க்கு போன் பண்ணி பிரேம்குமாரைப் போய் பார்க்கச் சொல்லி வாய்ப்பு இருக்கா இல்லையா மேடம் ..... ? "

" இ....இ....இருக்கு "

" அந்த ஃப்ரண்ட்டும் போய்ப் பார்த்துட்டு மனோஜீக்குப் போன் பண்ணி உங்க வீட்ல யாரோ சில பேர் இருக்காங்கன்னு சொல்லவும் சான்ஸ் இருக்குங்கிறதை நாம மறுக்க முடியாது மேடம் "

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-45

" சரி.... அப்படி யாராவது மனோஜ் வீட்டுக்கு போயிருந்தா ஏசிபி அன்பரசன் எனக்கு போன் பண்ணி சொல்லியிருப்பாரே ..... ? "

" ஸாரி மேடம்.... நீங்க என்னதான் சொன்னாலும் மனோஜை மடக்கற விஷயத்துல நாம கோட்டை விட்டுட்டோம்ன்னுதான் என்னோட மனசுக்கு படுது.... "

" வளர்.... நீ ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இரு. நான் இப்ப ஏசிபி அன்பரசனுக்கு கான் கால் போட்டு பேசறேன். நீயும் அவர்கிட்ட பேசு "

" ஒ.கே.மேடம்.... நான் லைன்ல இருக்கேன். கான் கால் போட்டு என்னைக் கனெக்ட் பண்ணுங்க...... " சொல்லிவிட்டு வளர்மதி காத்திருந்தாள்.

அடுத்த சில விநாடிகளில் கான்கால் உயிர்ப்புக்கு வந்து ஏசிபி அன்பரசனின் குரல் கேட்டது.

" மேடம்...... "

" என்ன அன்பரசன்..... மனோஜ் வீட்டுக்கு வந்தாச்சா ? " திரிபுரசுந்தரி கேட்க மறுமுனையில் சில விநாடிகளுக்கு நிசப்தம் நிலவியது. திரும்பவும் கேட்டாள் திரிபுரசுந்தரி.

" ஏன்னாச்சு..... பேச்சையே காணோம் ? "

" அது வந்து மேடம்.... இன்னும் மனோஜ் வீடு வந்து சேரலை "

" போன் பண்ணிப் பார்த்தீங்களா......? "

" பார்த்தோம் மேடம்.... அவரோட போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு...... "

" மொதல் தடவை அவர் பேசின போது ரெட்ஃபீல்ட் ஏரியாவில் ட்ராஃபிக்கில் மாட்டிகிட்டதாய் சொன்னார் இல்லையா ......? "

" ஆமா மேடம் "

" ரெட்ஃபீல்ட் ஏரியாவுக்கும் அன்பு நகர்க்கும் இடையில் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது. அந்த ஒரு கிலோமீட்டர் தூரத்தை க்ராஸ் பண்ணி வர அஞ்சு நிமிஷம் கூட ஆகாதே "

" அதான் மேடம் எனக்கும் குழப்பமாயிருக்கு "

" கடைசியா எப்போ போன் பண்ணீங்க ......? "

" ரெண்டு நிமிஷத்துக்கு முந்தி.... அப்ப மனோஜ் போன் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தது "

" சரி.... இப்ப மறுபடியும் ஒரு தடவை பிரேம்குமாரை மனோஜ்க்கு போன் பண்ணச் சொல்லுங்க நான் லைன்ல வெயிட் பண்றேன் "

" ஒ.கே.மேடம்.... "

திரிபுரசுந்தரியும், வளர்மதியும் கான்காலில் மெளனம் காக்க ஒரு நிமிட நேரத்திற்குப் பின் ஏசிபி அன்பரசனின் குரல் கேட்டது. " மேடம்.... மறுபடியும் பிரேம்குமாரை அவரோட செல்போன் மூலமாய் மனோஜை காண்டாக்ட் பண்ணிப் பார்த்தோம் "

" என்ன மறுபடியும் ஸ்விட்ச் ஆஃப்பா ......? "

" இல்ல மேடம் "

" பின்னே ......? "

" மனோஜோட போனிலிருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸீம் இல்லை.... "

" எனி ரெக்கார்டட் வாய்ஸ் ......? "

" எதுவும் வரலை மேடம்..... பட் என்னோட கெஸ்வொர்க்படி போலீஸ் இங்கே வீட்ல இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டு அவர் தலை மறைவாயிட்டார்ன்னு நினைக்கிறேன்.... "

இதுவரைக்கும் பேசாமல் இருந்த வளர்மதி இப்போது குரலை கொடுத்தாள்.

" ஏசிபி ஸார்.... நான் வளர்மதி. நானும் இப்ப உங்க கூட கான்காலில் இருக்கேன். மனோஜை மடக்க நான் ஒரு யோசனை சொல்லலாமா ......? "

" தாராளமாய் மேடம் "

" மனோஜ் கார்லதானே வெளியே போயிருக்கார் ......? "

" ஆமா.... "

" அந்த கார் நெம்பரை நோட் பண்ணி ட்ராஃபிக் டிபார்ட்மெண்ட்டுக்கு அனுப்பி ஜி.பி.எஸ். மூலமா மானிட்டரிங் பண்ணச் சொல்லுங்க.... எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ளே ட்ரேஸ் அவுட் பண்ணிடலாம் "

" இன்னும் ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு அந்த ப்ராஸ்ஸீக்குப் போலாம் மேடம் "

திரிபுரசுந்தரி கான்காலில் குறுக்கிட்டாள்.

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-45

" நோ அன்பரசன்..... மனோஜ் தப்பிச்சுட்டார்ன்னு நல்லாவே தெரியுது. இனியும் லேட் பண்ண வேண்டாம். மனோஜோட கார் நெம்பர் பிரேம்குமார்க்குத் தெரியும். கேட்டு நோட் பண்ணி ட்ராஃபிக் டிபார்ட்மெண்ட்டுக்கு அனுப்பி மானிட்டரிங் பிராசஸை ஸ்டார்ட் பண்ணிடுங்க.... இந்த ராத்திரி விடியறதுக்குள்ளே மனோஜ் அரஸ்ட்டாகி லாக்கப்புக்குள்ளே இருக்கணும் "

" எஸ் மேடம் "

" மறுபடியும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கான்காலில் பேசுவோம் " கமிஷனர் திரிபுரசுந்தரி பேச்சை முடித்துக்கொள்ள வளர்மதியும் தன்னுடைய செல்போனின் இணைப்பைத் துண்டித்துக்கொண்டாள்.

அதே விநாடி பின்பக்கம் குரல் கேட்டது.

" என்ன வளர்.... போன்ல யாரு......? "

வளர்மதி திரும்பினாள்.

கணவன் ஹரி நின்றிருந்தான்.

" அட.... எப்ப வந்தீங்க ......? "

" வந்து அஞ்சு நிமிஷமாச்சு. நீ போன்ல மும்முரமாய் பேசிட்டிருந்தே .."

" அத்தை எங்கே ......? "

" ரூம்ல இருக்காங்க ..... "

" ஸாரிங்க..... நீங்களும் அத்தையும் வந்ததை நான் கவனிக்கவேயில்லை..... "

" அது சரி.... போன்ல யாரு.... கமிஷனர் மேடமா ......? "

" ஆமா....... "

" என்ன ஏதாவது பிரச்சினையா ......? "

" பிரச்சினைதான்...... வீட்டுக்கு கார்ல போகும்போது எல்லாத்தையும் சொல்றேன். மொதல்ல நான் அத்தையைப் பார்க்கணும் " வளர்மதி சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

சிவகாமி வீட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த பையைப் பிரித்து வைத்துக்கொண்டு உள்ளேயிருந்து சில சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். வளர்மதியைப் பார்த்ததும் மெலிதாய் புன்னகைத்தாள்.

" ஸாரிம்மா.... கொஞ்சம் லேட்டாயிருச்சு. பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க உன்னோட மாமா எப்படியிருக்கார்ன்னு விசாரிக்க வந்தாங்க. வந்தவங்க உடனே கிளம்பிப் போகாமே ஏதேதோ பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை.... "

" அதனால் என்ன பரவாயில்லை அத்தே.... மாமா மாத்திரையைப் போட்டுகிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டார். நான் பொழுது போகாமே பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்த்துட்டிருந்தேன் "

" ஹாஸ்பிடல் காண்டீனுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டியா ......? "

" இல்ல அத்தே சாயந்தரம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு காப்பி குடிச்சதுல வயிறு பசிக்கவேயில்லை "

" நல்ல பொண்ணம்மா நீ.... மொதல்ல நீயும் ஹரியும் வீட்டுக்குக் கிளம்பிப் போங்க. சப்பாத்தியும் வெஜிடபிள் சப்ஜியும் ஹாட் பேக்ல சூடாய் இருக்கு. ரெண்டு பேரும் சாப்ட்டுட்டு படுங்க.... நாளைக்குக் காலையில் ஹாஸ்பிடலுக்கு மெதுவா வந்தா போதும். மத்தியானத்துக்கு மேல்தான் டிஸ்சார்ஜ் பண்ண வேண்டியிருக்கும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார் "

" இதோ புறப்பட்டுட்டோம் அத்தே. மணி பத்துக்கு மேலே ஆயிடுச்சு... மாமா நல்லா தூங்கிட்டிருக்கார். நீங்களும் படுத்துடுங்க... இன்னிக்கு உங்களுக்கு ரொம்பவும் அலைச்சல்...... "

" அலைச்சல்தான்.... என்ன பண்றது ......? ஐம்பது ரூபாய் ஸ்நாக்ஸை சாப்பிடப்போய் இருபதாயிரம் ரூபாய் செலவு பண்ண வேண்டியதாயிடுச்சு " சொன்ன சிவகாமி அறையின் மூலையில் இருந்த ஒரு பெரிய லெதர் பேக்கைக் காட்டினாள்.

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-45

" ஹாஸ்பிடல்ல எப்படியும் நாலைஞ்சு நாள் தங்க வேண்டியிருக்கும் என்கிற எண்ணத்துல எக்ஸ்ட்ராவா சில சாமான்களை எடுத்துட்டு வந்தேன். மறுபடியும் அதை வீட்டுக்கே கொண்டு போயிடும்மா "

ஹரி போய் அந்த லெதர் பேக்கை எடுத்துக்கொண்டான்.

" அம்மா..... அப்பாவோட பிரச்சினைக்கு காரணம் ஸ்நாக்ஸ் இல்லை. வயசுதான். அறுபது வயசானாலே பி.பி.சுகர்ன்னு எல்லா பிரச்சினையும் எட்டிப் பார்க்கும் "

" நீ என்னதான் சொல்லு. நான் ஒத்துக்க மாட்டேன். இனிமே வெளியேயிருந்து எந்த ஸ்நாக்ஸீம் உள்ளே வரக்கூடாது "

" சரிம்மா.... இனிமே நான் எந்த ஸ்நாக்ஸையும் வாங்கிட்டு வரலை. போதுமா.... நானும் வளரும் கிளம்பறோம். அப்பா ஏதாவது குரல் கொடுத்தா எந்திரிச்சு என்னான்னு கேளு "

" சரிடா.... "

ஹரியும், வளர்மதியும் சிவகாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தார்கள். லிஃப்டில் இறங்கி கீழே வந்து வரவேற்பறையைக் கடக்கும்போது அந்த ஸ்டாஃப் நர்ஸ் எதிர்பட்டாள்.

ஸார்..... அப்பா நாளைக்குத்தானே டிஸ்சார்ஜ் .... ? "

" ஆமா சிஸ்டர் "

" உங்க ஹாஸ்பிடல் பில் ரெடியாய் இருக்கு. அதை வாங்கிட்டு போயிடறீங்களா.... ? அந்த பில்லில் ஏதாவது டவுட்ஸ் இருந்தா நாளைக்கு நீங்க டாக்டர்கிட்டே கேட்டுக்கலாம் "

ஹரி தன் கையில் வைத்திருந்து லெதர் பேக்கை வளர்மதியிடம் கொடுத்தான்.

" வளர்.... ஹாஸ்பிடலுக்கு வெளியே ரோட்டோரமாய் கொஞ்சம் தள்ளி நம்ம காரை நிறுத்தியிருக்கேன். நீ கார்ல போய் இரு.... நான் பில்லை வாங்கிட்டு வந்துடறேன். இந்தா கார் சாவி "

வளர்மதி ஹரி நீட்டிய கார் சாவியையும் லெதர் பேக்கையும் வாங்கிக்கொண்டு ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள். சாலை மின் விளக்குகளின் அரைகுறை வெளிச்சத்தில் நிசப்தமாய் இருந்தது. ஆள் நடமாட்டம் அறவே இல்லை.

ஹாஸ்பிடலை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த காரை நோக்கிப் போனாள். கையில் இருந்த ரிமோட் கண்ட்ரோல் சாவியின் பட்டனை அழுத்த கார் பின்பக்க விளக்குகளை மஞ்சளாய் ஒரு முறை எரியவிட்டு டிக்கியைத் திறந்து வைத்தது.

வளர்மதி டிக்கியை நெருங்கி அதன் கைப்பிடியையும் பற்றித் தூக்கினாள். அது திமிங்கலம் போல் வாயைப் பிளந்து கொண்டது. உள்ளே லெதர் பேக்கை வைத்தாள்.

டிக்கியின் கதவை வளர்மதி மூட முயன்ற விநாடி அவளுக்குப் பின்னால் யாரோ வந்து நிற்பதை அவளால் உணர முடிந்தது. அவளுடைய புறங்கழுத்தில் சூடாய் மூச்சுக்காற்றுப்பட திடுக்கிட்டுப் போய் திரும்பினாள்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44], 45, 46]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X