-
அனைத்து வயதுக் குழந்தைகளும் இப்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனரா?
இல்லை, இந்திய அரசாங்கத்தின் உத்தரவுப்படி, ஜனவரி 3, 2022 முதல் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தடுப்பூசிகள் கிடைக்கும்.
-
15 - 18 வயதிற்குட்பட்டவர்கள் கோவிட் தடுப்பூசி பெற பதிவு செய்ய வேண்டுமா?
ஆம், வேக்சின் எடுக்க தகுதியுடையவர்கள் CoWin அல்லது Arogya-Setu ஆப்ஸ் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
-
இளம் வயதினர் கோவிட் தடுப்பூசி பெற பதிவு செயல்முறை என்ன?
மற்ற வயதினர் ரிஜிஸ்டர் செய்தது போலவேதான் இதுவும். மொபைல் எண் தர வேண்டும். பின்னர் ஓடிபி கொடுக்க வேண்டும். பின்னர் ஐடி கார்ட் கொடுத்து ஸ்லாட் புக் செய்ய வேண்டும்.
-
ஆரோக்யா-சேது செயலி மூலம் ஒருவர் எப்படி வேக்சின் பெற பதிவு செய்ய முடியும்?
ஆரோக்யா-சேதுவில் 'கோவின்' டேப் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
-
என் குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் என்ன செய்வது?
15-18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் அவர்களின் 10 ஆம் வகுப்பு அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
-
15 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேக்சினேஷன் பதிவு எப்போது தொடங்கும்?
15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான CoWin மற்றும் Arogya-Setu இல் ஜன. 1, 2022 முதல் ரிஜிஸ்டர் செய்ய தொடங்கலாம்.
-
15 - 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை நாங்களே தேர்வு செய்யலாமா?
தற்போது பாரத் பயோடெக்கின் COVAXIN மட்டுமே குழந்தைகளுக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பெற்றுள்ளது.
-
கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட் பெற யாரெல்லாம் தகுதியானவர்கள்?
60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்கள் ஜனவரி 10, 2022 முதல் பூஸ்டர் ஷாட் பெறத் தகுதி பெறுவார்கள்.
-
மூத்த குடிமக்கள் உடல் நோய் பாதிப்புகளை நிரூபிக்க ஆவணம் சமர்ப்பிக்க வேண்டுமா?
இல்லை, ஆனால் பூஸ்டர் ஷாட் எடுப்பதற்கு அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவர்களிடம் சோதிக்க வேண்டும்.
-
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் மூன்றாவது டோஸ் எடுக்க முடியுமா?
இல்லை, 39 வாரங்களுக்கு முன்பு கடைசியாக டோஸ் போட்டவர்கள் மட்டுமே எடுக்க முடியும்.
-
முன்கள பணியாளர்களாக யார் கருதப்படுகிறார்கள்?
மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை முக்கியமாக நகராட்சி ஊழியர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியோர் ஆவர்.
-
எந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுக்கலாம்?
இது குறித்து அரசு இதுவரை எந்த வழிகாட்டுதலையும் வெளியிடவில்லை. இருப்பினும், பூஸ்டர் டோஸ்கள் முதல் இரண்டு டோஸ்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது