National Help Line Number
+91-11-23978046
Toll Free No: 1075

Coronavirus FAQs After Lockdown

Oneindia
பொதுவான கேள்விகள்
    • மியூகர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கோவிட் பாதிப்புக்குப் பிறகு வருகிறதா
      இல்லை இது நீண்ட காலமாகவே உள்ள நோய்தான். கோவிட் பாதிப்புக்குப் பிறகு இது அதிகம் பரவுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • கோவிடுடன் இணைந்த மியூகர்மைகோசிஸ் என்றால் என்ன
      கோவிட் பாதித்தவர்களுக்கு தரப்படும் அதிக அளவிலான ஸ்டிராய்ட், ஆன்டிபயாடிக்குகள், ஆக்சிஜன் குழாயில் மாசுஏற்பட்டிருந்தால் நீண்ட காலம் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டால் அது கோவிடுடன் இணைந்த கருப்புப் பூஞ்சை என்று அழைக்கப்படும்.
    • கருப்பு பூஞ்சை பாதிப்பின் அறிகுறிகள் என்ன
      ஒரு பக்கம் மூக்கு அடைப்பு, முகத்தில் வலி, முக வீக்கம், நடுக்கம், பார்வை கோளாறு, இரட்டைப் பார்வை ஆகியவை பொதுவான அறிகுறிகள். இருப்பினும் ஆளுக்கு ஆள் இது வேறுபடலாம்.
    • கருப்பு பூஞ்சை பாதிப்பால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது
      கண்கள் மற்றும் மூளையை பாதிக்கும். சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பார்வை பறி போகும் அல்லது மரணம் சம்பவிக்கும்.
    • கருப்பு பூஞ்சை பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுமா
      இதுவரை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதை நிரூபிக்கவில்லை.
    • கோவிட் 19 பாதிப்பு வராதவர்களுக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு வருமா
      வரலாம். இயற்கையாகவே மியூகர் பூஞ்சை உள்ளது. மண், அழுகிய காய்கறிகளில் இவை உள்ளன.
    • ஒரு நோயாளியை கருப்புப் பூஞ்சை பாதித்துள்ளதை எப்படி அறிய முடியும்
      மூக்கில் என்டோஸ்கோப்பி மூலம் ஆய்வு செய்து அறிய முடியும். பயாப்சி மூலம் அறிய முடியும். எம்ஆர்ஐ மூலமும் அறிய முடியும்.
    • தலைவலி, கண் பார்வை மங்கல், முகவலி ஆகியவை இருந்தாலே அது கருப்புப் பூஞ்சை பாதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியுமா
      இல்லை, டாக்டர்களால் சொல்லப்படாத வரை நாம் அப்படி எடுத்துக் கொள்ள முடியாது
    • 18 முதல் 44 வயதுள்ளோருக்கு ஆன்சைட் வாக்சின் வசதி உண்டா?
      ஆம், ஆனால் அரசு மையங்களில் மட்டுமே போடப்படும். தனியார் இருப்பிடங்களில் இல்லை.
    • 18 முதல் 44 வயதுள்ளோருக்கு ஆன்சைட் பதிவு கட்டாயமா
      இது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முடிவைப் பொறுத்தது.
    • மியூக்கர் மைக்கோசிஸ் அல்லது பிளாக் பங்கஸ் என்றால் என்ன?
      பொதுவாக கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் என்பது சமீபத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஏற்படும் ஒரு நோயாகும்
    • தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் மியூகோமைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பட்டியலிடப்பட்டுள்ளதா?
      ஆம், தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் 'கருப்பு பூஞ்சை' குறித்து அறிவிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது .
    • தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் பிளேக் பூஞ்சை அறிவிக்கப்படுவதன் தாக்கம் என்ன?
      மியூகோமைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொடர்பான ஒவ்வொரு கேஸ்களும் இந்திய சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும், மேலும் அதன் சோதனை மற்றும் சிகிச்சைக்காக ஐ.சி.எம்.ஆர் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை வழங்கி உள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.
    • கொரோனா வைரஸ் காற்று துகள்கள் வழியாக எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?
      காற்று துகளில் கொரோனா 10 மீட்டர் வரை பயணிக்க முடியும் என்று புதிய ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
    • புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் என்ன?
      முகமூடி, உடல் ரீதியான தூரம் மற்றும் கை சுத்திகரிப்பு தவிர்த்து, நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் காற்றோட்டம் இருக்க வேண்டியது அவசியம் .
    • கொரோனாவின் புதிய வகைகள் பரவுவதால் இனி எந்த வகை முகமூடி சிறந்தது?
      N95 முகமூடிகள் சிறப்பானது. அறுவைசிகிச்சை முகமூடியும் நல்லது ஆனால் இது ஒரு பயன்பாட்டிற்கு மட்டுமே உதவும். நீங்கள் துணி முகமூடிகளை அணிந்தால், இரண்டு அணிய வேண்டும்.
    • 2 டிஜி மருந்து என்றால் என்ன?
      2DG அல்லது டி-ஆக்ஸி டி-குளுக்கோஸ் என்பது தீவிரமானது முதல் மிதமானது வரையிலான COVID-19 கேஸ்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து ஆகும்.
    • 2 டிஜி மருந்தை உருவாக்கியது யார்?
      2 டிஜி மருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்டு டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்தால் தயாரிக்கப்படுகிறது.
    • 2 டிஜி எவ்வாறு செயல்படுகிறது?
      இதை வாய்வழியாக எடுத்துக்கொள்வதன் மூலம் COVID பாதிக்கப்பட்ட செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. கொரோனா செல்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸைத் தடுத்து நோயாளி விரைவாக குணமடைய உதவுகிறது.
    • COVID-19 க்கு எதிரான புதிய 2DG மருந்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
      2 டிஜி கொண்ட 3 நாட்களில் 42% நோயாளிகள் ஆக்ஸிஜன் சப்போர்ட் உதவி இன்றி சுவாசித்தது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
    • டிஆர்டிஓ உருவாக்கிய 2 டிஜி மருந்து COVID-19க்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதா?
      ஆம், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் (டி.சி.ஜி.ஐ) அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்தை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தியாவில் 2 டி.ஜியின் ஒரு மருந்தின் விலை என்ன?
      மருந்து இன்னும் கடைகளில் கிடைக்கவில்லை. மருத்துவ கடைகளுக்குச் சென்றதும் விலை அறிவிக்கப்படும்.
    • மருத்துவ கடைகளில் புதிய COVID மருந்தான் 2DG எப்போது கிடைக்கும்?
      ஜூன் 2021 இன் பிற்பகுதியில் கிடைக்க வாய்ப்புள்ளது .
    • தற்போதைய மருந்து 2DG இன் கடைகளில் கிடைக்கிறதா?
      2 டிஜி மருந்து முதலில் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அதை ஒரு நோயாளிக்கு கொடுப்பது குறித்து முடிவுகளை எடுக்கலாம்.
    • மருந்து சீட்டு இல்லாமல் மருத்துவ கடைகளில் 2DG மருந்தை வாங்கலாமா?
      இல்லை, 2 டிஜி மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே விற்கப்படும்.
    • COVID-19 சோதனைக்கான சுய பரிசோதனை கருவிக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்ததா?
      ஆம். COVID 19 அறிகுறிகள் உடையவர்கள் அல்லது கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் சுய சோதனை கிட்டான 'கோவிசெல்ப் மூலம் தங்களை சோதிக்க முடியும்.
    • இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் என்ன விலையில் கிடைக்கிறது ?
      இதன் விலை ஜிஎஸ்டி சேர்த்து 995.40 ரூபாய். ஒரு டோஸ் ரூபாய் 948 விலை மற்றும் 5% ஜிஎஸ்டி
    • ரயில் பயணத்தில் மாஸ்க் அணிய வேண்டுமா?
      ஆம், கண்டிப்பாக அணிய வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்
    • வெயிட் லிஸ்டில் இருப்பவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்?
      இல்லை, அறிகுறி இல்லாமல், கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்
    • ரயில் பயணத்தில் பெட் சீட், தலையணை கிடைக்குமா?
      இல்லை, கொரோனா காலம் என்பதால் இந்த சேவை அளிக்கப்படுவது இல்லை
    • கொரோனா வேக்சிங் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கலாமா?
      மருத்துவர்களிடம் ஆலோசிக்கவும்
    • எனக்கு 18 வயதுக்கு மேலாகிறது, 45 வயதுக்குட்பட்டவர். நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்ய முடியுமா?
      ஏப்ரல் 28ம் தேதி முதல் நீங்கள் https://www.cowin.gov.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி முதல் பதிவு செய்யலாம்.
    • ஒரு லாகின் முகவரியில் எத்தனை பேருக்கு பதிவு செய்ய முடியும்?
      முந்தைய கட்டங்களைப் போலல்லாது, இந்த முறை, ஒருவரே நான்கு பேர் வரை அப்பாயின்ட்மென்ட் பெற முடியும்.
    • 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுமா?
      இது உங்களது மாநில அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது
    • தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள நான் எவ்வளவு செலவிட வேண்டும்?
      கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு முறையே ரூ. 600 மற்றும் 1200 செலவிட வேண்டி வரும். இதுதொடர்பான கட்டணத்தை மருத்துவமனகளே நிர்ணயிக்கும்.
    • எந்த ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை நான் தேர்வு செய்ய முடியுமா?
      ஆம், அது ஸ்டாக் இருப்பதைப் பொறுத்தது.
    • நான் ஏதாவது மருந்து சாப்பிட்டாலும் கூட தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முடியுமா?
      அது நீங்கள் சாப்பிடும் மருந்தைப் பொறுத்தது. டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.
    • மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
      ஆம்
    • பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா?
      பாலூட்டும் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை.
    • 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடுவார்களா?
      இல்லை
    • ஒரே தடுப்பூசி மையத்தில்தான் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டுமா?
      இல்லை
    • மே 1ம் தேதியே நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா?
      வாய்ப்பில்லை. பல மாநிலங்களில் மே 20ம் தேதிதான் ஸ்டாக்கே வருகிறது.
    • மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ள முடியுமா?
      இல்லை, மத்திய அரசு வழங்கும் தடுப்பூசியானது 45 மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கானது மட்டுமே.
    • நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ள அறிவுரை என்ன?
      நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று குறித்த லேசான அறிகுறிகள் இருந்தாலும் கூட, தங்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் தொடருமாறு ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.
    • எந்த சந்தர்ப்பங்களில் இணை நோய் உள்ளவர்கள் தங்கள் வழக்கமான மருந்துகளை நிறுத்த வேண்டும்?
      சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இணை நோய் உள்ளவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வழக்கமான மருந்துகளை நிறுத்தக்கூடாது
    • நீரிழிவு நோயாளிகளை கொரோனா தாக்க அதிகம் வாய்ப்பு உள்ளதா?
      கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு அனைத்து நோய்த்தொற்றுகளும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் கொரோனா வைரசால் அதிக ஆபத்து இல்லை. இருப்பினும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சில தனிநபர்கள் மிகவும் கடுமையான வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்கள் ஒரு முறை கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இரத்த அழுத்த மருந்துகள்( BP medications) கொரோனாவின் தீவிரத்தை அதிகரிக்குமா?
      இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தகவலின்டி, இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் இதுவரைக்கும் இல்லை.
    • கொரோனாவுக்கு வலி நிவாரணி (painkillers) பயன்படுத்துவது குறித்து ஐ.சி.எம்.எஸ் என்ன கூறியுள்ளது?
      மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே வலி நிவாரணி மருந்துகளை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும்
    • எந்த வலி நிவாரணி பாதுகாப்பானது என்று ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது?
      பராசிட்டமால் பாதுகாப்பான வலி நிவாரணி மருந்து என ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ளது
    • பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தனியார் மருத்துவமனைகலுக்கு என்ன விலைக்கு விற்கப்படும்
      ஒரு டோஸ் ரூ. 1200
    • பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மாநில அரசுக்கு எந்த விலைக்கு விற்கப்படும்.
      ஒரு டோஸ் ரூ. 600
    • மத்திய அரசு கோவாக்ஸின் மருந்து என்ன விலைக்கு விற்கப்படும்.
      ஒரு டோஸ் ரூ. 150. மத்திய அரசு, இந்த டோஸை தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவசமாக அளிக்கிறது.
    • பிற நாடுகளுக்கு கோவாக்ஸின் என்ன விலைக்கு விற்கப்படும்.
      ஒரு டோஸ் 15 முதல் 20 டாலர் வரை.
    • ரெம்டெசிவிர் மருந்து எந்த நிலையில் பயன்படுத்தப்படுகிறது?
      கொரோனா பாதிப்பு சாதாரண நிலையில் இருந்து அதிகமாகும் போது 10 நாட்களுக்குள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கலாம்.
    • கொரோனா பாதிப்பு உள்ள எந்த நோயாளிக்கும் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கலாமா?
      இல்லை. கொரோனா பாதிப்பு மிதமான நிலையில் இருந்து அதிகமாகும் போது, ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகிற நோயாளிகளுக்கு மட்டும் கொடுக்கலாம். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை.\
    • ரெம்டெசிவிர் மருந்து யாருக்கு தரக் கூடாது?
      சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கக் கூடாது.
    • பிளாஸ்மா தெரபி என்பது யாருக்கு எப்போது கொடுக்கப்படும்?
      கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு முதல் 7 நாட்களில் அதாவது மிதமான பாதிப்பு இருக்கும் போது கொடுக்கலாம்.
    • டோசிலிசுமாப் மருந்து யாருக்கு கொடுக்க வேண்டும்?
      கொரோனா பாதித்து ஐசியுவில் உள்ளவர்களுக்கு, உடலில் ஏற்கனவே அதிகமான நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்ட உடன் 48 மணிநேரத்தில் கொடுக்க வேண்டும்.
    • கொரோனா லேசான அறிகுறிகள் என்பது எந்த நிலையை சொல்லுகிறது?
      மூச்சு திணறல் இல்லாத சளி, காய்ச்சல் உள்ளவர்களை இந்த வகையில் பட்டியல்படுத்தலாம்.
    • வீடுகளில் கொரோனா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் என்ன?
      மிக லேசான அல்லது மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை எடுக்கலாம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; முக கவசம் அணிய வேண்டும்; சுகாதாரமாக இருக்க வேண்டும்; ஆக்சிஜன் அளவு, வெப்ப நிலை அளவை கண்காணிக்க வேண்டும்; அறிகுறிகளின் அடிப்படையில் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • எப்போது மருத்துவமனைக்கு அல்லது மருத்துவ உதவிகளை பெற வேண்டும்?
      5 நாட்களாக மூச்சு திணறல், அதிக காய்ச்சல், அதிக சளி, இருமல் இருந்தால் மருத்துவ உதவியை பெற வேண்டும் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.
    • மருத்துவமனைகளில் அனுமதிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?
      வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், உடலில் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான சிகிச்சை கவனமாக கொடுக்கப்பட வேண்டும்.
    • கோவிஷீல்டு தடுப்பூசிக்கு புதிய விலையை சீரம் இன்ஸ்டிடியூட் ஏன் அறிவித்தது?
      மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சந்தைகளில் 50% கொரோனா தடுப்பூசிகள் விற்பனையாகும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • புதிய அறிவிப்பு மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியின் தற்போதைய விலை என்ன?
      கோவிஷீல்டு தடுப்பூசியை மாநில அரசுகள் ரூ300க்கும் தனியார் மருத்துவமனைகள் ரூ600க்கும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஒரு நபருக்கான கொரோனா தடுப்பூசியை மாநில அரசு ரூ600க்கும் தனியார் மருத்துவமனைகள் ரூ1,200க்கும் கொள்முதல் செய்யலாம்.
    • மே 1 முதல் யார் யார் கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்?
      18 வயது முதல் 45 வயதுடையவர்கள் தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குகிறது.
    • மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யும் விலையைத்தான் கட்டணமாக செலுத்த வேண்டுமா?
      கொரோனா தடுப்பூசிக்கான கட்டணத்த்தை மாநில அரசுகள் முடிவு செய்யும். தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கலாம்.
    • மருந்து கடைகளில் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்குமா?
      கிடைக்காது.
    • மே முதல் வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள இயலுமா?
      தனியார் மருத்துவமனைகளில் மே 3-வது வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படும்.
    • கொரோனா வேக்சின் போட்டுக்கொள்ள நான் தகுதியானவனா?
      உங்களுக்கு 18 வயது நிறைவு பெற்று இருந்தால் நீங்கள் வேக்சினை பெற முடியும். மே 1ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் வேக்சின் பெற முடியும்
    • இப்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள வேக்சின் எது?
      கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட்
    • ஸ்புட்னிக் வி வேக்சின் பயன்பாட்டில் உள்ளதா?
      அவசர பயன்பாட்டிற்காக இது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் எப்போதில் இருந்து இந்த வேக்சின் மக்கள் என்பது இனிதான் அறிவிக்கப்படும்
    • கொரோனாவிற்கு எதிரான வேக்சின் கிடைக்கும் மருத்துவமனைகள் லிஸ்ட் வெளியிடப்பட்டுவிட்டதா?
      வரும் நாட்களில் இது குறித்து மத்திய அரசு அறிவிக்கும்
    • இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக எத்தனை வேக்சின்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது?
      3, ஆக்ஸ்போர்ட் - அஸ்டர் செனகா மூலம் உருவாக்கப்பட்டு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கோவிட்ஷீல்ட், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிகே வி வேக்சின்.
    • ஸ்புட்னிக் வி வேக்சின் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
      ஆமாம்
    • ஸ்புட்னிக் வி எங்கு உருவாக்கப்பட்டது?
      மருந்து கட்டுப்பட்டு இயக்குனரகம் இந்தியா (டிஜிசிஐ)
    • இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக எத்தனை வேக்சின்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது?
      ரஷ்யாவின் மாஸ்கோவில் கமலேயா தேசிய ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
    • ஸ்புட்னிக் வி எங்கு தயாரிக்கப்படுகிறது?
      ரஷ்ய நிறுவனம் ஸ்பூட்னிக் வி மருந்தை இந்திய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்துடன் இணைந்து உற்பத்தி செய்து வருகிறது.
    • ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சினை எவ்வளவு வெப்பநிலையில் வைக்க வேண்டும்?
      2-8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும்
    • ஸ்புட்னிக் வி வேக்சினை கொண்டு செல்ல குளிர் சாதன வசதிகளை அதிகரிக்க வேண்டுமா?
      இல்லை, சாதாரண குளிர்சாதன வசதிகளே போதும்
    • ஒரு நபருக்கு ஸ்புட்னிக் வி வேக்சினின் எவ்வளவு டோஸ்களை போட வேண்டும்?
      21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் போட வேண்டும்
    • ஸ்புட்னிக் வி எவ்வளவு திறன் கொண்டது?
      91.5 சதவிகித ஆற்றல் கொண்டது
    • ஸ்புட்னிக் வி வேக்சினுக்கு பக்க விளைவுகள் உள்ளதா?
      0.1 நபர்களுக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ரஷ்ய மீடியாக்கள் தெரிவித்துள்ளன
    • இந்தியாவில் ஒரு டோஸ் ஸ்புட்னிக் வி வேக்சினின் விலை என்ன?
      இந்தியாவில் இதன் விலை இன்னும் கூறப்படவில்லை, மற்ற நாடுகளில் இதன் விலை 10 டாலர் வரை விற்கப்படுகிறது
    • கர்நாடகாவில் ஜிம்கள் செயல்படுகிறதா?
      ஆம், 50% பேர் மட்டுமே பயன்படுத்த அனுமதி
    • கர்நாடகாவில் பொதுபோக்குவரத்து செயல்படுகிறதா?
      ஆமாம். ஆனால் இருக்கைகள் வசதிகளை அதிகப்படுத்த முடியாது
    • கர்நாடகா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளனவா?
      6 முதல் 9 வரையிலான வகுப்புக்கள் கிடையாது. 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புக்கள் தொடர்ந்து செயல்படும். அதே சமயம் வருகை பதிவு கட்டாயம் இல்லை.
    • கர்நாடகாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளனவா?
      ஆமாம். 50 சதவீதம் இருக்கை வசதிகளுகடன்
    • வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட அனுமதி உண்டா?
      கிடையாது. ஆனால் நீங்கள் கோயிலுக்கு செல்ல முடியும்.
    • பொது மக்கள் கூட அனுமதி உண்டா?
      இல்லை
    • பப்கள், பார்கள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளதா?
      ஆமாம். 50 சதவீதம் இருக்கைகளுடன்
    • கோவிட் டெஸ்ட் கட்டாயமாக உள்ள மாநிலங்கள் யாவை?
      மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், கேரளா, அசாம், மேகாலயா, மிசோரம், ஒடிசா, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர், லடாக், உத்தரகண்ட், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
    • மத்தியபிரதேசம் செல்பவர்களள் 7 நாள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமா?
      ஆம், மகாராஷ்டிராவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் ஏழு நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போபால் மற்றும் இந்தூரில் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயமா?
      வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் தமிழகத்திற்குள் நுழைய இ-பாஸ் அவசியம். ஆனால் இது கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து வருபவர்களுக்கு பொருந்தாது.
    • கோவிட் டெஸ்ட் குஜராத்திற்கு கட்டாயமா?
      பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக COVID-19 RT-PCR நெகட்டிவ் ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே இந்த கட்டுபாடு குஜராத்தில் இருந்தது.
    • ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே பெங்களூருக்குள் நுழைய முடியுமா?
      ஆம், ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு நீங்கள் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்குப் பயணம் செய்ய திட்டமிட்டால், ஆர்டி-பி.சி.ஆர் கோவிட் -19 சோதனை நெகடிவ் ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்குள் நுழையும் மக்கள் தங்கள் நெகட்டிவ் ரிப்போர்ட்டை கொடுக்க வேண்டும்.
    • உள்நாட்டு பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத மாநிலங்கள் எவை?
      கோவா, பீகார், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட்.
    • லடாக் செல்ல கோவிட் டெஸ்ட் தேவையா?
      லடாக்கிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் நெகட்டிவ் ரிப்போர்ட் தேவை.
    • டெல்லிக்குள் நுழைய கோவிட் டெஸ்ட கட்டாயமா?
      கோவிட் -19 சோதனை தேவையில்லை. இருப்பினும், வந்தவுடன் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
    • குஜராத்துக்குள் செல்ல ஆர்டி / பிசிஆர் டெஸ்ட் அவசியமா
      ஆம், ஏப்ரல் 1ல் இருந்து குஜராத்துக்குள் செல்ல டெஸ்ட் ரிப்போர்ட் அவசியம்
    • மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளதா?
      ஆம், மார்ச் 28ம் தேதி 2021 முதல் இரவு நேர ஊரடங்கு மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிர இரவு நேர ஊரடங்கின் நேரம் என்ன?
      இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை.
    • மகாராஷ்டிர இரவு நேர ஊரடங்கில் ஷாப்பிங் மால்கள் திறந்திருக்குமா?
      இல்லை, இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டிருக்கும்.
    • மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கின்போது வாகனங்கள் செல்ல அனுமதி உண்டா?
      ஆம், வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. ஆனால் 5 பேருக்கு மேல் சென்றால் வாகனம் தடை செய்யப்படும்.
    • மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு லாக்டவுன் வர வாய்ப்புண்டா?
      அதுமாதிரியான முறைப்படியான அறிவிப்பு இதுவரை வரவில்லை.
    • புதிய லாக்டவுன்களை விதிக்க மாநிலங்களுக்கு அனுமதி உள்ளதா?
      சூழ்நிலையை பொறுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதியில் மாவட்ட / துணை மாவட்டம் மற்றும் நகரம் / வார்டு மட்டத்தில் உள்ளூர் அளவில் மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
    • மாநிலங்களுக்கு உள்ளே மாநிலங்களுக்கு வெளியே பயணம் தடை செய்யப்பட்டுள்ளதா?
      மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்காது. அதேபோல் அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழ் எல்லை தாண்டிய வர்த்தக சாலை போக்குவரத்துக்கும் தடை இல்லை
    • மாநிலங்களுக்கு உள்ளே மாநிலங்களுக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்கு இ-பாஸ் அனுமதி தேவையா?
      தனி அனுமதி / ஒப்புதல் / இ பாஸ் தேவையில்லை.
    • மாநிலங்களுக்கு இடையேயான பயணம் கர்நாடகாவில் அனுமதிக்கப்படுகிறதா?
      ஆம், ஆனால் ஏப்ரல் 1 முதல், பெங்களூருக்குள் நுழைய ஆர்டி பி.சி.ஆர் எதிர்மறை அறிக்கையை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
    • சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதா?
      சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து தடை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச வழித்தட விமான போக்குவரத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
    • பெங்களூரில் முகமூடி / முக அட்டை அணிவது கட்டாயமா?
      முகமூடிகள் இல்லாமல் அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றால் ரூ .250 அபராதம் செலுத்த வேண்டும்
    • COVID-19 க்கு எதிரான தடுப்பூசிக்கு நான் தகுதியானவரா?
      நீங்கள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டும்.
    • COVID-19 இன் இரண்டாவது அலையை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படுமா?
      மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. சில மாநிலங்களில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.
    • லாக்டவுன் எதுவும் விதிக்கப்பட்டுள்ளதா?
      மார்ச் 15 முதல் 21 வரை நாக்பூரில் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது.
    • நாக்பூரில் அரசு அலுவலகங்கள் மூடப்படுமா?
      அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்படும்
    • மகாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதா?
      புனேவில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நாசிக்கில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
    • புனே மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் ஹோட்டல் பார்கள் மற்றும் மால்கள் மூடப்பட்டுள்ளதா?
      ஆம், புனேவில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை உள்ளது. நாசிக் நகரில் 0 சதவீதம் திறனுடன் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
    • புனே மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதா?
      பள்ளி மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்படும்.
    • உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளதா?
      முசோரியின் கால்வே குடிசை பகுதி மற்றும் செயின்ட் ஜார்ஜ் பள்ளி, பார்லோ கஞ்ச் பகுதியில் முழுமையான லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. மேலதிக அறிவிப்புகள் வரும் வரை அனைத்து கடைகளும் அலுவலகங்களும் மூடப்படும், மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.
    • பஞ்சாபில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதா?
      பாட்டியாலா, லூதியானா, மொஹாலி, மற்றும் ஃபதேஹ்கர் சாஹிப் ஆகிய இடங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய பிரதேசத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதா?
      இந்தூர் மற்றும் போபாலில் மார்ச் 17ல் இருந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய பிரதேசத்தில் வணிக நிறுவனங்கள் திறக்கப்படுமா?
      ஜபல்பூர் மற்றும் குவாலியரில், வணிக நிறுவனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படாது. போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர், கார்கோன், உஜ்ஜைன், ரத்லம், சிந்த்வாரா, புர்ஹான்பூர் மற்றும் ஹோலி மற்றும் ரங் பஞ்ச்மி ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது.
    • குஜராத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதா?
      ஆம், அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட்டில் மார்ச் 17ல் இருந்து காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உள்ளது.
    • கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் எப்போது தொடங்குகிறது?
      மார்ச் 1, 2021
    • இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்கள் யார்?
      60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 45 வயதுடையவர்கள்
    • 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள குறிப்பிடப்பட்ட இணை நோய்கள் எவை?
      இதய பாதிப்பின் காரணமாக கடந்த ஓராண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், லேசான அல்லது தீவிர இதய வால்வு நோய் உடையவர்கள், இதய குழாய் இயக்க நோயுடையவர்கள், சிடி அல்லது எம்ஆர்ஐ.,யில் பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், சிறுநீரக பாதிப்பின் இறுதி கட்டமான ஹீரோடயாலிசிஸ் செய்வோர், 2000 ம் ஆண்டிற்கு பிறகு அல்லது தற்போது ஏதாவதொரு வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வோர்.
    • தடுப்பூசிக்கு நான் எவ்வாறு பதிவு செய்வது?
      "நீங்கள் Co -WIN 2.0 என்ற போர்டலை டவுன்லேட் செய்தோ அல்லது ஆரோக்கிய சேது ஆப்பின் மூலம் பிப்ரவரி 28 ம் தேதிக்கு பிறகு பதிவு செய்யலாம். - COWIN 1.0 முதல் Co -WIN 2.0 வரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விபரங்களை மத்திய அரசு கணக்கிட்டு வருகிறது.
    • அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கான கட்டணம் என்ன?
      கோவிட் 19 தடுப்பூசி அரசு மரத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. தனியார் மூலம் இந்த வசதியை பெற விரும்புவோர் பணம் செலுத்த வேண்டும்.
    • தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்கான கட்டணம் என்ன?
      கோவிட் 19 தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக் கொள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்த வேண்டும்.
    • தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை எங்கே காணலாம்?
      கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் உரிமம் பெற்ற தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மக்களுக்கு தடுப்பூசியை தேர்வு செய்ய அனுமதியுள்ளதா?
      அரசிடம் இருந்து இதுவரை இது தொடர்பான எந்த தெளிவான அறிவிப்பும் தரப்படவில்லை.
    • புதிய சர்வதேச பயண விதிகள் யாருக்கு பொருந்தும்?
      இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் விதிகள் பொருந்தும்
    • சர்வதேச பயணத்தை தொடங்குவதற்கு முன் சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டுமா?
      ஆம், சுய அறிவிப்பு படிவத்தை ஆன்லைன் போர்ட்டல்- www.newdelhiairport.in இல் விமான பயணத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
    • பயணத்திற்கு முன் சான்றிதழ் ஏதேனையும் வழங்க வேண்டுமா?
      ஆம், எதிர்மறை COVID-19 RT-PCR அறிக்கையை ஆன்லைன் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்
    • இந்தியாவுக்குச் செல்வதற்கு முன் நான் எப்போது என்னைச் சோதித்துக்கொள்ள வேண்டும்?
      பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் சோதனை நடத்தப்பட வேண்டும்
    • நான் அவசர பயணம் செய்ய வேண்டுமானால் என்ன செய்வது?
      உறவினர்கள் மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிப்பவர்களுக்கு மட்டுமே எதிர்மறையான அறிக்கை இல்லாமல் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படும். இதற்கு, விமானம் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு, ஏர்சுவிதா போர்ட்டலில் விலக்கு பெற விண்ணப்பிக்க வேண்டும்.
    • நான் துறைமுகம் அல்லது கடல்வழி பயணத்தை மேற்கொண்டால் என்ன செய்வது?
      விமான பயணத்திற்கான அதே விதிகள் பொருந்தும்
    • நான் COVID-19 RT - PCR நெகட்டிவ் அறிக்கையை சமர்ப்பித்திருந்தாலும், விமானத்தில் ஏறும் போது எனக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் என்ன செய்வது?
      இல்லை, அறிகுறியற்ற பயணங்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படும்
    • COVID-19 எதிர்மறை அறிக்கை இல்லாமல் அவசரகாலத்தில் பயணம் செய்யும் ஒருவர் இந்தியாவில் தரையிறங்கினால் என்ன செய்வது?
      அவசர மற்றும் COVID-19 எதிர்மறை அறிக்கை இல்லாமல் பயணிப்பவர்கள் விமான நிலையத்தில் கட்டாயமாக சோதிக்கப்படுவார்கள்
    • இந்தியாவுக்கு வந்தவுடன் எனக்கு அறிகுறி இருந்தால் என்ன செய்வது?
      அனைத்து அறிகுறி உள்ள பயணிகளும் மருத்துவ சோதனை மையங்களுக்குகொண்டு செல்லப்படுவார்கள்.
    • மற்ற இந்திய நகரங்களுக்கு செல்லும் விமானத்தில் நான் செல்ல வேண்டுமானால் என்ன செய்வது?
      COVID-19 எதிர்மறை அறிக்கை உள்ளவர்கள் 'T' சான்றிதழுடன் பயணம் மேற்கொள்ள முடியும். அவசரகாலத்தில் COVID-19 எதிர்மறை அறிக்கை இல்லாமல் பயணிப்பவர்களுக்கு கொரோனா சோதனை செய்யபப்ட்ட வேண்டும்.
    • விமான நிலையத்தில் செய்யப்படும் COVID-19 சோதனைக்கு யார் பணம் செலுத்துவார்கள்?
      விமான நிலையத்தில் COVID சோதனைக்கான செலவை பயணிகள் ஏற்க வேண்டும்.
    • இந்தியாவிவள் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள தடை உள்ளதா?
      இல்லை, ஆனால் கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு பயணிப்பவர்கள் கோவிட் -19 அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
    • மகாராஷ்டிராவில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதா?
      ஆம், மகாராஷ்டிராவில் பிப்ரவரி 28ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது
    • மகாராஷ்டிராவில் லாக்டவுன் சமயத்தில் அனுமதிக்கப்பட்ட பணிகள் என்னென்ன?
      அனைத்துப் பணிகளையும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மேற்கொள்ளலாம்.
    • மாநிலங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு உள்ளே மக்கள் பயணிக்கவும், சரக்கு வாகனங்கள் பயணிக்கவும் தடை உள்ளதா?
      இல்லை, சில கட்டுப்பாட்டு மண்டலத்தைத் தவிர வேறு எங்கும் கட்டுப்பாடுகள் இல்லை.
    • கட்டுப்பாட்டு பகுதிகளின் விதிகள் யார் மூலம் வரையறுக்கப்படும்?
      மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மூலம் .
    • மாநிலங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு உள்ளே மக்கள் பயணிக்க இ பாஸ் அவசியமா?
      மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளின் விதிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படலாம்
    • சமூக, மத, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மதக் கூட்டங்கள் அனுமதிக்கப்படுமா?
      ஏற்கனவே 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனுமதிக்கப்படும் . இதற்காக தகவல் அமைச்சகம் தனி வழிகாட்டுதல்களை வழங்கும்.
    • சினிமா அரங்குகளில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
      ஏற்கனவே 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனுமதிக்கப்படும் . இதற்காக தகவல் அமைச்சகம் தனி வழிகாட்டுதல்களை வழங்கும்.
    • நீச்சல் குளங்கள் அனுமதிக்கப்படுமா?
      முன்னதாக, இது நீச்சல் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இப்போது இது திருத்தப்பட்ட விதிகளுடன்அனைவருக்கும் அனுமதிக்கப்படும்.
    • கண்காட்சி அரங்குகள் அனுமதிக்கப்படுமா?
      முன்னதாக பிஆர்பி கண்காட்சி அரங்குகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அனைத்து கண்காட்சி அரங்குகளையும் அனுமதிக்க புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்
    • COVID-19 கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா?
      ஆம், மாநில / யூனியன் அரசாங்கங்கள் முகமூடிகளை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது , கைகளை கழுவுதல் மற்றும் பிற சுகாதார நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டும்
    • மாஸ்க் அணிவது கட்டாயமா?
      ஆம் மாஸ்க் அணிவது கட்டாயம்
    • பொது இடத்தில் துப்புவது தண்டனைக்குரியதா?
      ஆம் , விதிகளை மீறும் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்
    • ஆரோக்யா சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயமா?
      ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.
    • சர்வதேச விமான பயணம்தொடங்கப்பட்டுவிட்டதா?
      உள்நாட்டு விவகார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து சர்வதேச விமான பயணத்தைத் தொடங்குவது குறித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரைவில் முடிவை எடுக்கும்
    • கொரோனா தடுப்பு மருந்தின் டோஸ் அளவு என்ன?
      28 நாட்களுக்குள் 2 டோஸ் எடுக்கப்பட வேண்டும். 2வது டோஸ் கொடுத்த 2 வாரம் கழித்தே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
    • கோவிட் 19 தடுப்பு மருந்துகள் நீண்ட கால பலன் தருமா?
      நீண்ட காலத்துக்கு இந்த தடுப்பு மருந்துகள் பலன் தருமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. இருப்பினும், கிடைத்துள்ள தகவல்களின்படி கோவிட் 19 பாதிப்பிலிருந்து மீண்ட பலருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உருவாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு அது நீடிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
    • கோவிட் 19 தடுப்பு மருந்து போட்ட பின்னரும் ஒருவரிடமிருந்து கொரோனா பரவுமா?
      தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தி உருவாக சில காலம் பிடிக்கும். கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவருக்கு அந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படுவது தடுக்கப்படும். இருப்பினும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுமா என்பது சந்தேகம்தான். எனவே தடுப்பு மருந்து போடப்படுவதற்கு முன்போ அல்லது போட்ட உடனேயே கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு அது பரவ வாய்ப்புள்ளது.
    • கொரோனா தடுப்பூசிகளை மிக்ஸ் செய்ய முடியுமா?
      இல்லை, மக்கள் தங்கள் முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ்களை வெவ்வேறு நிறுவனத்திடமிருந்து பெற முடியாது. ஏனென்றால், தடுப்பூசிகள் ஒரே வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கின்றன, ஆனால் தடுப்பூசிகள் ஒரே மாதிரியாக இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 'ஒன்றோடொன்று மாறக்கூடியவை அல்ல' என்றும், 'கலப்பு-தயாரிப்பு டோஸ்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படவில்லை' என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளன. எனவே இரண்டு டோஸ்களையும் ஒரே நிறுவன தயாரிப்பிடமிருந்து போட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
    • கொரோனா தடுப்பூசிகளை நாம் கலக்க அல்லது மாற்ற முடியுமா?
      இல்லை, வழிகாட்டுதல்களின்படி ஒரே கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு முழு அளவை வயது வந்தவருக்கு வழங்க வேண்டும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் இதுபற்றி முடிவெடுப்பார்கள்.
    • எந்த வயதினருக்கு கோவிட் தடுப்பு மருந்துகள் பொருத்தமானதாக இருக்கும்?
      அரசு தற்போது அறிவித்துள்ளபடி 14 வயதுக்குட்பட்ட அனைவருக்குமே தடுப்பு மருந்து கொடுக்கலாம்.
    • கொரோனா தடுப்பூசிகளுக்கு எங்கே, எப்படி பதிவு செய்வது?
      உங்கள் ஸ்மார்ட்போனில் COWIN செயலியை பதிவிறக்கவும். பான் கார்டு, பென்ஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற, அரசாங்க புகைப்பட அடையாள அட்டையை பதிவேற்றவும் அல்லது AADHAARஅங்கீகாரத்தை செய்யவும். பயோமெட்ரிக்ஸ், ஓடிபி வழியாக அங்கீகாரம் செய்யப்படும். பதிவுசெய்ததும், தடுப்பூசிக்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்படும். நேரடியாக சென்று யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது. முன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள்.
    • கோவின் ஆப்பை அனைவரும் டவுன்லோட் செய்து கொள்ளலாமா?
      தற்போதைக்கு அதிகாரப்பூர்வமான எந்த ஆப்பும் வெளியிடப்படவில்லை. எனவே பிளேஸ்டோரிலிருந்து எந்த ஆப்பையும் இப்போதைக்கு டவுன்லோட் செய்ய வேண்டாம். கோவின் என்ற பெயரில் பல ஆப்புகள் போலியாகவும் உலா வருகின்றன. தற்போது அந்த ஆப் தயார் நிலைக்கு வரவில்லை.. கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் என எதிலும் அது இன்னும் இடம் பெறவும் இல்லை. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 75 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • கொரோனா தடுப்பூசிக்கு பின்பான முன்னேற்றங்கள் எப்படி இருக்கும்?
      கொரோனாவைரஸ்க்கு எதிராக முதன்முறையாக லட்சக்கணக்கான முதியவர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடுவது ஒரு கடினமான மற்றும் இதுவரை சந்திக்காத சவாலாக இருக்கும். தடுப்பூசி போட்டாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிறகும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், ஏனெனில் இது வைரஸ் பரவும் அபாயத்தை எவ்வாறு குறைக்கிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் கொரோனாவுக்குப் பிந்தைய உலகம், சிக்கலான நவீன பன்னாட்டு விநியோகச் சங்கிலிகளின் உலகளாவிய நரம்பு மையமாக இந்தியா உருவாகும் என்று நம்புகிறோம்.
    • கொரோனா தடுப்பூசி பெற பயனாளி பதிவு செய்ய என்ன ஆவணங்கள் தேவை?
      புகைப்படத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐடி எதையாவது பதிவு செய்ய பயன்படுத்தலாம்: • ஆதார் அட்டை • ஓட்டுநர் உரிமம், தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) வேலை அட்டை • எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் • பான்கார்டு, வங்கி / தபால் அலுவலகம் வழங்கிய பாஸ்புக்குகள் • பாஸ்போர்ட் • ஓய்வூதிய ஆவணம், மத்திய / மாநில அரசு / பொது லிமிடெட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய சேவை அடையாள அட்டை • வாக்காளர் ஐடி
    • கோவிட் தடுப்பூசிகளில் பன்றி இறைச்சி / பன்றி ஜெலட்டின் உள்ளதா?
      தயாரிப்பாளர்களால் குறிப்பிடப்பட்டபடி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிட் தடுப்பூசிகளில் பன்றி இறைச்சி அல்லது பன்றி ஜெலட்டின் பயன்படுத்தப்படவில்லை.
    • தனியார் மருந்து கடையில் இருந்து கொரோனா தடுப்பூசியை என்னால் பெற முடியுமா?
      பல காரணங்களுக்காக, தனியார் சந்தை வழியாக மக்களை தடுப்பூசி பெற அனுமதிப்பது ஒரு மோசமான யோசனையாகும். இந்தியாவில் தற்போது தடுப்பூசி கிடைப்பது மட்டுப்படுத்தப்பட உள்ளது. சந்தை சக்திகளுக்கு விட்டுவிட்டால், செலவு மிக அதிகமாகவும், கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கும். ஆனால் வாங்குவதில் அரசாங்கம் ஈடுபடும்போது, தடுப்பூசிக்கான விலை குறைவாக இருக்கும்.
    • அரசு தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டால் நான் பணம் செலுத்த வேண்டுமா?
      ஜனவரி 16 முதல் தொடங்கும் முதல் கட்ட தடுப்பூசி இயக்கத்தில் கோவிட் -19 தடுப்பூசிகளைக் கொண்ட 3 கோடி மக்களுக்கு நோய்த்தடுப்புக்கான மொத்த செலவை மத்திய அரசு ஏற்கும்.
    • COVID தடுப்பூசியின் ஒரு ஷாட்டின் விலை என்னவாக இருக்கும்?
      சீரம் 'கோவிஷீல்ட்' தடுப்பூசி ஒரு டோஸுக்கு ₹ 200 என்ற விலையில் கிடைக்கும். தடுப்பூசியின் ஒவ்வொரு டோஸுக்கும் ₹ 200 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி ₹ 10 உடன் ₹ 210 செலவாகும். சீரம் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா நவம்பர் மாதம் ஒரு நேர்காணலில், இந்த தடுப்பூசி இந்தியாவின் தனியார் சந்தைக்கு ஒரு டோஸுக்கு சுமார் 1,000 ரூபாய் (13.55 டாலர்) விலை நிர்ணயிக்கப்படும் என்றும், ஒரு டோஸுக்கு 250 இந்திய ரூபாய் (40 3.40) செலவாகும் என்றும் கூறினார்.
    • கடந்த காலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே ஆன்டிபாடிகளை உருவாக்கியவர்கள் தடுப்பூசி போட வேண்டுமா?
      ஆம், கொரோனா நோய்த்தொற்றின் கடந்த கால சம்பவங்களை பொருட்படுத்தாமல், கொரோனா தடுப்பூசியின் முழுமையான ஷெட்யூலை பெறுவது நல்லது. இது நோய்க்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும்.
    • இந்தியாவில் COVID தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்ககூடிய வெப்பநிலை என்ன?
      அனைத்து இந்திய தடுப்பூசிகளையும் 2-8 டிகிரி செல்சியஸில் சேமிக்க முடியும், ஏனெனில் வெப்பநிலையை ஒரு காரணியாக கருதி மருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • COVID தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?
      COVID-19 தடுப்பூசி எதிர்கால கருவுறுதலை பாதிக்கும் என்பது நம்புப்படியாக இல்லை.
    • கர்ப்பிணி பெண் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
      கிடைக்கக்கூடிய தகவல்கள் கர்ப்பத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு அக்கறையையோ அல்லது தீங்கையோ உருவாக்கும் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும் கர்ப்ப காலத்தில் COVID-19 தடுப்பூசிகளை வழக்கமாகப் பயன்படுத்த பரிந்துரைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை.
    • தடுப்பூசி போடப்பட்ட பெற்றோரின் சந்ததியினருக்கு COVID-19 க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா?
      ஒரு நபர் ஒரு நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும்போது, ​​அவர்களின் தொற்று அபாயமும் குறைகிறது - எனவே அவர்கள் வைரஸ் அல்லது பாக்டீரியாவை மற்றவர்களுக்கு பரப்புவதற்கான வாய்ப்பும் குறைவு.
    • COVID தடுப்பூசிகளின் பொதுவான / அறியப்பட்ட பக்க விளைவுகள் என்ன?
      COVID 19 தடுப்பூசி பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும், ஆனால் ஊசி போடும் இடத்தில் காய்ச்சல், வலி ​​போன்ற சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எந்தவொரு தடுப்பூசியிலும் இந்த விளைவுகள் ஏற்படலாம்.
    • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அரசு அல்லது மருந்து நிறுவனம் காப்பீடு அளிக்கிறதா?
      குறிப்பிட்ட சில சுகாதார காப்பீட்டுகள் மட்டுமே கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான செலவை ஏற்கும். வழக்கமான சுகாதார காப்பீட்டுகள் மருத்துவமனையில் அட்மிஷன் செய்தால் ஏற்படும் செலவுகள் மற்றும் அதற்கு முந்தைய அட்மிஷன் மற்றும் டிஸ்சார்ஜ்ஜுக்கு பிந்தைய பில்கள் ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது. ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தடுப்பூசி வழங்கினால், தடுப்பூசி செலவுகள் அனைத்து சுகாதார காப்பீட்டால் ஈடுசெய்யப்படும். இருப்பினும், கொரோனா தடுப்பூசி டோஸ் பெற விரும்புவோர் அனைவருக்கும், மருத்துவமனையில் தங்கத் தேவையில்லை. எனவே டிஸ்சார்ஜ் செய்த பிறகு ஊசி போட்டுக் கொள்வோருக்கு அவுட்-பேஷன்ட் செலவுகளையும் ஏற்கும் காப்பீடு திட்டமாக இருந்தால், தடுப்பூசி செலவை ஏற்றுக் கொள்ளும்.
    • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எனது உடல்நிலை மோசமடைந்துவிட்டால் யார் பொறுப்பு?
      தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை ஒழுங்குமுறை அமைப்புகள் ஆய்வு செய்த பின்னரே நாட்டில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) தான், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) தலைமையில், ஒப்புதல் முடிவுகளை எடுக்கிறது. தடுப்பூசி பெறுபவர்கள் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
    • இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளுக்கான, பிரத்யேக அர்ப்பணிக்கப்பட்ட குளிர் பதனக் கிட்டங்கிகள் தேவைப்படுகிறதா?
      அமைச்சக அதிகாரிகளின் தகவல்படி, இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 28,932 குளிர் சாதனக் கிட்டங்கிகள் உள்ளன. மொத்தம் 310 வாக்-இன் குளிரூட்டிகள் மற்றும் ஃப்ரீசர் உள்ளன, மேலும் 44,226 ஐஸ் குளிர்சாதன பெட்டிகள், 40,792 டீப் ப்ரீசர்ஸ் மற்றும் 294 சோலார் யூனிட்டுகள் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளன.
    • எல்லா மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி டிப்போக்கள் உள்ளதா?
      இந்தியாவில் கோவிட் தடுப்பூசி வழங்க 41 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வட இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதற்காக டெல்லி மற்றும் கர்னல் மினி மையங்களாக மாற்றப்படும். கிழக்கு பிராந்தியத்தைப் பொறுத்தவரை, கொல்கத்தா மையமாகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கான நோடல் புள்ளியாகவும் இருக்கும். அதேசமயம், புனே மத்திய மையமாகவும், சென்னை மற்றும் ஹைதராபாத் தென்னிந்தியாவின் மையங்களாகவும் இருக்கும்.
    • தடுப்பூசி வீடு வீடாக எடுத்துச் செல்லப்படுமா?
      தடுப்பூசிகள் கிடைப்பதன் அடிப்படையில் இந்திய அரசு முன்னுரிமை குழுக்களை தேர்வு செய்துள்ளது, யாருக்கெல்லாம் அவசரமாக தேவையோ அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முதல் குழுவில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள். கொரோனா தடுப்பூசி பெறும் இரண்டாவது குழு 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள நபர்களாக இருப்பார்கள்.
    • தலைநகர் டெல்லியின் எந்த பகுதியில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் அமைந்துள்ளது?
      கிழக்கு டெல்லியில் தில்ஷாத் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் உள்ளது. இந்த மருத்துவமனை 650 படுக்கைகள் திறன் கொண்ட நகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
    • கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் உத்தரபிரதேசத்தில் எந்த நகரங்களில் உள்ளது ?
      கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்காக லக்னோவில் 2 தடுப்பூசி மையம் அமைக்கப்பட உள்ளது. பிரயாகராஜில் உள்ள தேஜ் பகதூர் சப்ரு (பெலி) மருத்துவமனையின் கூட்ட அரங்கம் மாவட்டத்தின் முக்கிய தடுப்பூசி சேமிப்பு மையமாக உள்ளது. மீரட், காஜியாபாத், நொய்டா, ஹப்பூர், புலந்த்ஷாஹர் மற்றும் பாக்பத் ஆகிய 6 மாவட்டங்களில் பயன்படுத்தும் கொரோனா தடுப்பூசியை லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரியின் சேமிப்பு மையத்தில் சேமிக்க சுகாதார அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் அமைந்துள்ளது?
      உத்தரகாண்ட் மாநில அரசு தடுப்பூசி சேமிப்பு மையம் தொடர்பாக இதுவரை அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான விவரங்களுக்கு தடுப்பூசி வினியோகத்தை கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள 'கோ-- வின்' செயலியை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பீகாரில் எங்கு தடுப்பூசி சேமிப்பு மையம் உள்ளது?
      கொரோனா தடுப்பூசிகள் விமானம் மூலம் பீகார் தலைநகர் பாட்னா கொண்டு வரப்படும். அங்கு இருந்து குளிர்பதன சேமிப்பு வசதி கொண்ட வேன்களில் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும். பின்னர் அது அங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். மாநிலத்தில் 9 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 5 தனியார் கல்லூரிகள், 21 சிவில் மருத்துவமனைகள், 17 துணைப்பிரிவு மருத்துவமனைகள், 208 ஆரம்ப மற்றும் சமூக சுகாதார நிலையங்கள், 1 நர்சிங் பள்ளி, 3 பரிந்துரை மருத்துவமனைகள் மற்றும் மீதமுள்ள 36 தனியார் நிறுவனங்களில் தடுப்பூசிகள் சேமிக்கப்படும்.
    • ஜார்க்கண்டின் எந்த நகரங்களில் தடுப்பூசி சேமிப்பு மையம் உள்ளது?
      ஜார்க்கண்ட் ஏற்கனவே 275 குளிர்பதன சேமிப்பு தளங்களை கொண்டுள்ளது. சேமிப்பு திறனை மேம்படுத்த கூடுதலாக 30 குளிர்பதன சேமிப்பு தளம் அமைக்கப்பட உள்ளது. சச்சி தல்பம் சாலையில் உள்ள பழைய சிவில் சர்ஜன் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த மையத்தில் அதிநவீன குளிர்பதன சேமிப்பு வசதிகள் உள்ளன.
    • மேற்கு வங்க மாநிலத்தில் எந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது?
      மேற்கு வங்கம் முழுவதும் 958 குளிர்பதன சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பூசிகள் கொல்கத்தா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அவை தொடக்கத்தில் பாக்பஜார் மருத்துவமனையில் சேமிக்கப்படும். பின்னர் அங்கு இருந்து அனுப்பப்படும்.
    • திரிபுராவில் எங்கு கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் அமைந்துள்ளது?
      மாநில தலைநகர் அகர்தலாவில் தடுப்பூசி சேமிப்பு மையம் உள்ளது. அதே வேளையில் மாவட்ட தலைமையகத்தில் 8 தடுப்பூசி மையங்கள், சுகாதார வசதி மட்டத்தில் 145 குளிர்பதன சேமிப்பு தளங்கள் அதிநவீன குளிர்பதன சேமிப்பு வசதிகளுடன் உள்ளன.
    • அஸ்ஸாம் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      முதன்மையாக கவுகாத்தியில் கொரோனா தடுப்பூசி சேமிக்கப்படும். அங்கிருந்து ஐந்து பிராந்திய தடுப்பூசி சேமிப்பு மையங்களுக்கு அனுப்பப்படும். அதைத்தொடர்ந்தே, மாவட்ட வாரியாக தடுப்பூசிகள் அனுப்பப்படும்
    • மேகாலயா மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • மேகாலயா மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • மணிப்பூர் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • மிசோரம் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • அருணாசலப் பிரதேச மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • நாகாலாந்து மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • ஒடிசா மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகள் விமானம் மூலம் மாநில தலைநகர் புபனேஷ்வருக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து சிறப்பு வேன்கள் மூலம் புபனேஸ்வர், கட்டாக், கஞ்சம், பாலசோர், பாலங்கீர், காந்தமால், கோராபுட், சம்பல்பூர் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய தடுப்பூசி மையங்களுக்கு அவை கொண்டு செல்லப்படும்.
    • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      ஆந்திர மாநிலத்தில் கண்ணவரம் மாநில தடுப்பூசி சேமிப்பு மையமாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாநிலத்தில் இருக்கும் நான்கு பிராந்திய சேமிப்பு மையங்களுக்குத் தடுப்பூசி அனுப்பப்படும். அந்தப் பிராந்திய சேமிப்பு மையங்களிலிருந்து மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும். கர்னூல், கடப்பா, குண்டூர், விசாகப்பட்டிணம் ஆகியவை பிராந்திய தடுப்பூசி சேமிப்பு மையங்களாகச் செயல்படும்.
    • தெலங்கானா மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி விநியோகப் பணிகளை மேற்கொள்ள மாநிலத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் குளிர்சாதன உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      புனேவில் இருந்து விமானம் மூலம் தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு எடுத்து வரப்படும். சென்னை பெரியமேடு பகுதியில் தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும். அங்கிருந்து மாநிலம் முழுவதும் உள்ள சேமிப்பு இடங்களுக்கு அனுப்பப்படும். கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல குளிர்சாதன வசதி கொண்ட 51 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    • கேரள மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • கர்நாடக மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      பெங்களூரு மற்றும் பெல்காம் நகரங்களில் கொரோனா தடுப்பூசிகள் சேமிக்கப்படும். அங்கிருந்து சாலைகள் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிராந்திய தடுப்பூசி சேமிப்பு மையங்களுக்குக் குளிரூட்டப்பட்ட லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும்.
    • கோவாவில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க அம்மாநில அரசு ஐந்து அரசு மருத்துவமனைகளையும் மூன்று தனியார் மருத்துவமனைகளையும் அடையாளம் கண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகள் - கோவா மருத்துவக் கல்லூரி (பனாஜி), ஹோஸ்பிசியோ மருத்துவமனை (மார்காவ்), அசிலோ மருத்துவமனை (மாபூசா), சிக்கலிம் சுகாதார மையம் (வாஸ்கோ), துணை மாவட்ட மருத்துவமனை (போண்டா). தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் - மணிப்பால் மருத்துவமனை (பனாஜி), ஹெல்த்வே மருத்துவமனை (பழைய கோவா) மற்றும் விக்டர் மருத்துவமனை (மார்காவ்).
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      மும்பையில் தற்போது வரை நிர்வாக சுகாதார அலுவலகத்தின் தலைமையிடம் அமைந்துள்ள பரேலில் தான் போலியோ தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் காஞ்சூர்மார்க் பகுதியிலுள்ள அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசிகள் சேமிக்கப்படும். அதேபோல புனே பிராந்தியத்தைச் சேர்ந்த சோலாப்பூர், சதாரா, கோலாப்பூர் மற்றும் அகமது நகர் மாவட்டங்களுக்கு புனேவிலிருந்து தடுப்பூசி விநியோகிக்கப்படும்.
    • குஜராத் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • ராஜஸ்தான் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • மத்தியப் பிரதேச மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      சத்தீஸ்கர் தலைநகரில் மாநில தடுப்பூசி சேமிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து அவை பிராந்திய தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அனுப்பப்படும். தடுப்பூசிகளும் சிரிஞ்ச்களும் அங்கிருந்து மாவட்ட தடுப்பூசி சேமிப்பு மையங்களுக்கு மாதம்தோறும் விநியோகம் செய்யப்படும்,.
    • ஹரியானா மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்
    • பஞ்சாப் மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      பஞ்சாப் மாநிலத்தில் மாநில அளவிலான முக்கிய தடுப்பூசி சேமிப்பு மையம் தவிர, 22 மாவட்ட தடுப்பூசி மையங்களும், தொகுதி வாரியாக 127 தடுப்பூசி மையங்களும் தயாராகி வருகின்றன. மாநிலம் முழுவதும் 570 இடங்களில் தடுப்பூசிகளைச் சேமிக்கக் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஃபெரோஸ்பூரைப் போல, சண்டிகரிலும் தடுப்பூசிகளைச் சேமிக்க, குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்பு இடத்தை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • இமாசல பிரதேச மாநிலத்தில் எந்தெந்த நகரங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளன?
      கொரோனா தடுப்பூசி எங்குச் சேமிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அம்மாநில அரசு முறையாக அறிவிக்கவில்லை. தடுப்பூசி தொடர்பான செய்திகளை உடனடியாக கோ-வின் செயலியில் பெறுங்கள்.
    • கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தவிர பிற பொருட்கள் அனுமதிக்கப்படுமா?
      இல்லை அனுமதிக்கப்படாது
    • கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியே செல்ல முடியுமா?
      அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே செல்ல முடியும்
    • மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா?
      ஆமாம், மாநில அரசுகளுக்கு ஏற்றபடி அபராதம் மாறும்
    • சர்வதேச விமான போக்குவரத்து அனுமதிக்கப்படுமா?
      ஆம் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
    • தியேட்டர்கள் இயங்குமா?
      50% பேருக்கு மட்டுமே அனுமதி
    • கண்காட்சி அரங்குகள் திறக்கப்படுமா?
      வணிக நோக்கத்திற்காக மட்டுமே
    • சமூக / மத / விளையாட்டு / பொழுதுபோக்கு / கல்வி / கலாச்சார / மத கூட்டங்கள் அனுமதிக்கப்படுமா?
      ஆம், அதிகபட்சம் 50 சதவீதம் பேர் வரை இருக்கலாம். மூடிய மைதானங்களில் 200 நபர்களின் கூட்டம் இருக்கலாம்.இருப்பினும், நிலைமையை பொறுத்து மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் தங்களை விதிகளை மாற்றிக்கொள்ளலாம்.
    • இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுமா?
      மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அழைக்கும்
    • புதிய லாக் டவுன் விதிக்கப்படுமா?
      கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இல்லை. லாக்டவுன் விதிக்க விதிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும்
    • உள் மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்குமா?
      அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழ் மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்காது.
    • ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பயன்படுத்துவது கட்டாயமா?
      ஆரோக்யா சேது மொபைல் பயன்பாட்டின் பயன்பாடு மத்திய அரசால் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.
    • இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளனவா
      ஆம், டிசம்பர் 22ம் தேதி இரவு 11.59 முதல் டிசம்பர் இரவு 11.59 வரை
    • டிசம்பர் 22ம் தேதிக்கு இந்தியா வர டிக்கெட் எடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
      இந்த விமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன
    • இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
      தனி குவாரன்டைன் இருக்கும். அவர்களுக்கு வந்தவுடன் கட்டாயம் பிசிஆர் சோதனை எடுக்கப்பட வேண்டும்.
    • ஜீனோம் சீக்வன்ஸ் செய்யப்புமா?
      டிசம்பர் 22ம் தேதி முதல் இங்கிலாந்து வரும் பயணிகளுக்கு மட்டும் செய்யப்படும்.
    • இங்கிலாந்திலிருந்து வரும் பயணிக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்துமா?
      கடந்த நாந்கு வாரங்களில்இங்கிலாந்திலிருந்து அல்லது அந்த நாட்டின் வழியாக வரும் பயணிகளுக்கு மட்டுமே எஸ்ஓபி பொருந்தும்.
    • இன்ஸ்டிடியூஷனல் குவாரன்டைன் உண்டா?
      ஆம், டிசம்பர் 21 முதல் 23ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வந்தவர்களில், நோய்வாய்ப்பட்டவர்கள் அமர்ந்து பயணித்த அதே வரிசையில் அமர்ந்து வந்தவர்களுக்கும், முன்னால் 3 வரிசை மற்றும் பின்னால் 3 வரிசையில் இருந்தவர்களுக்கு உண்டு.
    • இங்கிலாந்திலிருந்து டெல்லிவரும் அனைவருமே கோவிட் 19 டெஸ்ட் எடுக்க வேண்டுமா?
      ஆம், இங்கிலாந்திலிருந்து டெல்லி வரும் அனைவரும் கட்டாயம் வருகையின்போது ஆர்டி-பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
    • இங்கிலாந்து பயணிக்கு கோவிட் 19 பாசிட்டிவ் வந்தால் என்ன நடக்கும்?
      பாசிட்டிவ் வந்தால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
    • கொரோனா நெகட்டிவ் வருவோருக்கு என்ன நடக்கும்?
      நெகட்டிவ் வருவோருக்கு 7 நாள் மருத்துவமனை தனிமைப்படுத்தலும், 7 நாள் வீட்டுத் தனிமைப்டுத்தலும் மேற்கொள்ளப்படவேண்டும்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X