National Help Line Number
+91-11-23978046
Toll Free No: 1075

Coronavirus FAQs After Lockdown

Oneindia
பொதுவான கேள்விகள்
  • அத்தியாவசியப் பொருட்களை எந்த நேரமும் போய் வாங்க முடியுமா?
   இல்லை, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அனுமதி கிடையாது.
  • சமூக இடைவெளியை எப்படி பராமரிப்பது? 
   ஒருவரிடமிருந்து 3 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும். மாஸ்க் அணியவும்
  • கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிட்டதா?
   இல்லை.. இன்னும் முடியவில்லை
  • நான் பொது மருத்துவமனைக்கு செல்லலாமா?
   ஆம், உங்களுக்கு தேவை இருந்தால் கண்டிப்பாக செல்லலாம்
  • மே 3ம் தேதிக்கு பின் கொரியர் அனுப்ப முடியுமா?
   ஆம், ஆனால் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இல்லை
  • அனைத்துக் கடைகளும் திறக்கப்படுமா
   ஆம், ஆனால் கண்டெய்ன்மென்ட்ன் ஸோன்களில் திறக்கப்படாது.
  • வங்கிகள் எல்லா விதமான சேவைகளையும் வழங்குமா?
   ஆம் இயங்கும்
  • பிளம்பர், கார்பெண்டர் போன்ற பணியாளர்களை அழைக்கலாமா?
   ஆம், ஆனால் கண்டெய்ன்மென்ட் ஸோன்களில் கிடையாது.
  • நான் பூச்சு கொள்ளி சேவைகளை அழைக்கலாமா?
   கண்டிப்பாக .. ஆனால் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இல்லை
  • ஆட்டோ மொபைல் சேவை மையங்கள் செயல்படுமா?
   கிரீன் சோன் பகுதிகளில் மட்டும்.
  • மொபைல் ரீசார்ஜ் / பழுதுபார்க்கும் கடைகள் திறக்கப்படுமா?
   ஆம் திறக்கும், ஆனால் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இல்லை
  • சலவை சேவைகள் திறந்து இருக்குமா ?
   இருக்கும், ஆனால் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இல்லை
  • முதியோர் இல்லத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்குமா?
   இல்லை, எந்த கட்டுப்பாடும் இருக்காது .
  • ஹாட்ஸ்பாட் அல்லாத மண்டலங்களில் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
   சில நாட்களுக்கு பொது கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • 1 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலைத் திறப்பதற்கு முன்பு நான் அதை சுத்தப்படுத்த வேண்டுமா?
   ஆம், நீங்கள் அதை சுத்தம் செய்ய வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா?
   மாநிலங்களை பொறுத்து
  • மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நடைபெறுமா?
   மாநிலங்களின் விருப்பம் இருந்தால் நடக்கும்
  • எனது ஊரில் ஊபர் டாக்சிக்கு அனுமதி உண்டா?
   கட்டாக், குவஹாத்தி, ஜாம்ஷெட்பூர், கொச்சி, சில்வாசா, டாமன்,அமிர்தசரஸ், குர்கான், பன்ச்குலா, திருச்சிராப்பள்ளி, அசன்சோல், ஹூப்ளி, பிரக்யாராஜ், உதய்ப்பூர், புவனேஸ்வர், கோழிக்கோடு, புதுச்சேரி, வாபி, கோவை, மங்களூர், ராஜ்கோட், விசாகப்பட்டனம், டேராடூன், மேசானா, ரோத்தக், துர்காபூர், மொஹாலி, திருவனந்தபுரம், காஸியாபாத், நாடியாத், திருச்சூர் ஆகிய நகரங்களில் அனுமதி உள்ளது.
  • எனது நகரில் ஊபர் அத்தியாவசிய சேவை உள்ளதா?
   பெங்களூர், போபால், ஹைதராபாத், இந்தூர், மும்பை, நாசிக், லூதியானாவில் உள்ளது. ஊபர்மெடிக் சேவை, டெல்லியில் கிடைக்கிறது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, பாட்னா, லக்னோ, நொய்டா, கான்பூர், பிரக்யாராஜ், ஆக்ரா, காஸியாபாத், ஜாம்ஷெட்பூர், சூரத், குவஹாத்தியிலும் கிடைக்கிறது.
  • கர்நாடகாவில் தவிக்கும் அனைவரும் ஷிராமிக் எக்ஸ்பிரஸ்மூலமாக அழைத்துச் செல்லப்படுவார்களா?
   இல்லை, அறிகுறிகள் இல்லாதோர் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவர்.
  • இடம் பெயர்ந்து வந்தோர் ஷிராமிக் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் பயணிக்க விண்ணப்பம் தர வேண்டுமா?
   ஆம், மாநில அரசுகள் வெளியிட்டுள்ள இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். https://sevasindhu.karnataka.gov.in.
  • விண்ணப்பித்த அனைவரும் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா
   இல்லை,அரசு அனுமதி கிடைக்கப் பெற்றோர் மட்டுமே பயணிக்க முடியும்.
  • கர்நாடகத்தில் ரயில் நிலையங்களிலிருந்தும், ரயில் நிலையத்துக்கும் வருவோருக்கு யார் போக்குவரத்து வசதியைச் செய்து தருவார்கள்.
   கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்.
  • நான் இருக்கும் சோன் குறித்து எனக்கு யார் அறிவிப்பார்
   உங்கள் மாநில அரசு
  • நான் அலுவலகம் செல்லமுடியுமா?
   ஆம்
  • அலுவலகத்தில் உடல் ரீதியாக என்ன மாதிரியான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்?
   குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி தேவை
  • அலுவலகங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமா?
   ஆம்
  • நான் அலுவலகம் வருவதற்கு அலுவலக நிர்வாகம் தடை விதிக்கமுடியுமா?
   காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தடை விதிக்கப்படுவீர்கள்.
  • அலுவலகத்தில் யாருக்கேனும் பாதிப்பு வந்தால் அலுவலகம் மூடப்படுமா?
   இல்லை, கிருமிநாசினி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்ட பிறகு பணிகளைத் தொடர முடியும்.
  மண்டலங்கள்
  • சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் மண்டலங்களில் எலக்ட்ரீசியன், கார்பெண்டர், பிளம்பர் ஆகியோர் அனுமதிக்கப்படுவரா?
   ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலப் பகுதிகளில் மட்டும் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர்கள் அனுமதிக்கப்படுவர்.
  • இனிப்புகள் / பேக்கரி கடைகளைத் திறக்க ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாள் / நேரம் இருக்குமா?
   இது எல்லா நாட்களிலும் திறந்திருக்கும். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
  • டே கேர்/பெட் கேர்/கிரட்சுகள் செயல்பட அனுமதிக்கப்படுமா?
   வீட்டு விலங்கு பாதுகாப்பு மையங்கள் மட்டும் இயங்கும்
  • உணவகங்கள் பார்சல் மற்றும் வீட்டு விநியோக ஆர்டர்களை எடுக்குமா?
   ஆம், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர
  • எல்லா கடைகளும் திறக்குமா?
   ஆம், மால்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர
  • எப்போது வரை கடைகள் திறந்து இருக்கும்?
   எல்லா நாளும் , காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
  விவசாயம் - விவசாயத் தொழில்
   • பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாய விலை அதிகரிக்கப்படுமா? 
    அரசு இனிதான் அறிவிக்க வேண்டும் .
   • மின்சாரம் மற்றும் டீசலுக்கு மானியம் வழங்கப்படுமா? 
    அரசு இனிமேல்தான் அறிக்கை.
   • பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களை பண்ணையில் வேலை பார்க்க அனுமதிக்கலாமா?
    பரிந்துரைக்கப்படவில்லை.
   • கொரோனா நெருக்கடியின்போது மாயமான ஏஜென்டுகளிடம் பொருட்களை விற்க முடியுமா?
    ஆம், முடியும்.
   நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்
   • வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை பார்க்கலாமா?
    ஆம், முடிந்தவரை செய்வது நல்லது
   • குழந்தைகளுக்குப் பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானதா?
    இல்லை
   • லாக்டவுனுக்கு பிறகு எனது பிஎப் பணத்தை எடுக்க முடியுமா?
    உங்களது இபிஎப் கணக்கிலிருந்து 75 சதவீதம் அல்லது மாத அடிப்படைச் சம்பளம் இதில் எது குறைவோ அந்தத் தொகையை எடுக்கலாம்.
   • நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள்செயல்படுமா ?
    ஆம் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர
   • ஷாப்பிங் செய்வது பாதுகாப்பனதா? 
    மால்களுக்குப் போகக் கூடாது. மாறாக ஒற்றைக் கடைகளில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம்.
   • மாநிலங்களுக்கு இடையே அல்லது வெளிநாட்டுக்குப் போவது பாதுகாப்பானதா?
    இல்லை, பாதுகாப்பானது கிடையாது. அதற்கு அனுமதியும் கிடையாது.
   • ஹோம் டெலிவரி உணவு அனுமதிக்கப்படுகிறதா?
    கண்டெய்ன்மென்ட் தவிர்த்த பகுதிகளில் அனுமதி உண்டு.
   சேவை துறை
   • அரசு, தனியார் அலுவலகங்களும் முழுமையாக திறக்கப்படுமா?
    ஆம், ஆனால் சிவப்பு மண்டலத்தில் 33% பணியாளர்கள் மட்டுமே, கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர
   • என்னுடைய டிடிஎஸ் நீக்கப்படுமா ?
    ஆம் உங்களுக்கு சம்பளம் இல்லை என்றால் 25% நீக்கப்படும்
   மாணவர்கள்
   • பள்ளிகள் / கல்லூரி திறக்கப்படுமா?
    இல்லை, அனுமதி இல்லை
   • பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்குமா?
    ஆன்லைன் வகுப்பிற்கு மட்டுமே அனுமதி
   • கல்லூரி கேண்டீன் செயல்படுமா?
    இல்லை, அனுமதி இல்லை
   • பி.ஜி / விடுதிகள் திறந்திருக்குமா?
    ஆம், மாணவர்கள் இருக்கும் பி.ஜி.க்கள் மற்றும் விடுதிகள் திறந்திருக்கும்.
   • என்னை அடுத்த வகுப்பிற்கு பாஸ் செய்ய முடியுமா?
    ஆம், நீங்கள் போர்டு தேர்வு எடுக்கவில்லை என்றால் பாஸ் செய்யப்படுவீர்கள்
   • 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்குமா?
    ஆம், தேர்வுகள் அனுமதிக்கப்பட்டள்ளது
   • மகாஷ்டிராவில் தேர்வுகள் நடக்குமா?
    இல்லை
   • தேர்வு எழுத செல்லும் நபர்களுக்கு சிறப்பு செய்யப்படுமா?
    ஆம், மாநில அரசுகள் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது
   • மாஸ்க் அணிவது கட்டாயமா?
    ஆம், மாணவர்கள், ஆசியர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்
   • வெவ்வேறு வாரியங்களால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு வெவ்வேறு அட்டவணை இருக்குமா?
    குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தேர்வுகளை நடத்தலாம்
   • ஆன்லைன் தேர்வுகள் இருக்குமா?
    அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை
   • டி.எல்.பிக்கான ஆய்வுப் பொருள் கூரியர் செய்யப்படுமா?
    ஆம், நீங்கள் ஹாட்ஸ்பாட் அல்லது கட்டுப்பாட்டு மண்டலத்தில் இல்லை என்றால் செய்யப்படும்.
   • எனக்கு ஏதாவது கட்டண நிவாரணம் கிடைக்குமா?
    இல்லை, ஆனால் கல்வி நிறுவனங்களுக்கு கட்டணம் உயர்த்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுநீங்கள் படிக்கும் நிறுவனத்தைசார்ந்தது.
   சுகாதாரம் மற்றும் மருத்துவம்
    • நான் டயாலிசிஸுக்கு செல்லலாமா?
     ஆம், முடியும்
    • வழக்கமான தடுப்பூசிக்கு என் குழந்தையை அழைத்துச் செல்லலாமா?
     ஆம், அழைத்துச் செல்லலாம்
    • எனக்கு அருகிலுள்ள மெட்டர்னிட்டி மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுமா?
     ஆம் இயங்கும்
    பயணம்
    • நான் வேறு மாவட்டம் / மாநிலத்திற்குச் செல்லலாமா?
     உங்கள் மாநிலம் அனுமதித்தால் மட்டும்
    • ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா?
     இல்லை இயங்காது
    • எனது சொந்த காருக்குள் கூட முகமூடி அணிய வேண்டுமா?
     ஆம்
    • நான்கு சக்கர பயணம் செய்ய எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
     டிரைவர் + இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி
    • இரண்டு சக்கர வாகனம் அனுமதிக்கப்படுமா ?
     ஆம்,இரண்டு பேர் மட்டும்
    • மாவட்டங்களுக்கு இடையேயான / மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் சுதந்திரமாக இயக்கப்படுமா?
     தற்போதைய நிலவரப்படி, சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மட்டுமே
    • உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுமா?
     தற்போதைய நிலவரப்படி, சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மட்டுமே
    • எனது விமானத்தில் நான் எவ்வாறுசெல்ல முடியும்?
     நீங்கள் ஒரு இ-போர்டிங் பாஸ் வைத்திருக்க வேண்டும்
    • எனது இ-போர்டிங் பாஸை எவ்வாறு முத்திரை குத்துவது?
     இ-போர்டிங் பாஸின் முத்திரை இருக்காது.
    • சரக்கு வாகனம் அனுமதிக்கப்படலாமா?
     ஆம்
    • எப்போது உள்ளூர் விமான சேவை தொடங்கும்?
     மே 25ம் தேதி முதல், படிப்படியாக தொடங்கும்
    • சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும்?
     இன்னும் முடிவெடுக்கவில்லை
    • எப்போது நான் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும்?
     2 மணி நேரம் முன்னதாக இருக்க வேண்டும்
    • மதியம் அல்லது மாலை நேர விமானத்தைப் பிடிக்க காலையிலேயே நான் விமான நிலையம் செல்லலாமா?
     பயண நேரத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்புதான் நீங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள்.
    • விமான நிலையம் செல்ல போக்குவரத்து வசதி எப்படி ?
     பொதுப் போக்குவரத்து அல்லது கேப் வசதியை செய்ய வேண்டியது மாநிலஅரசின் கடமையாகும்.
    • விமான நிலையத்திலும், விமானத்திலும் மாஸ்க் கட்டாயமா?
     ஆம்
    • விமானம் மூலம் சென்றால் நான் தனிமைப்படுத்தப்படுவேனா?
     போய்ச் சேரும் ஊர்களைச் சேர்ந்த மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டது அது.
    • நான் வெப் செக் இன் செய்ய வேண்டுமா
     ஆம் அது கட்டாயம்
    • நான் எத்தனை செக் இன் பேக்குகளை கொண்டு செல்ல முடியும்?
     ஒன்று
    • உடல் நிலை சரியில்லாதவர்கள் விமான பயணம் மேற்கொள்ளலாமா?
     தவிர்ப்பது நல்லது
    • கர்ப்பிணிப் பெண்கள் விமான பயணம் மேற்கொள்ளலாமா?
     தவிர்ப்பது நல்லது
    • ஆரோக்கிய சேது செயலி விமான பயணங்களுக்கு கட்டாயமா?
     ஆம்
    • ஆரோக்கிய செயலி யில் சிவப்பு நிற ஸ்டேட்டஸ் காட்டினால் என்ன செய்வது?
     நீங்கள் விமான பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டீர்கள்
    • விமான ஊழியர்கள் என்ன மாதிரியான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
     முழுமையான பாதுகாப்புஆடைகளுடன் அவர்கள் பயணப்படுவார்கள்
    • விமானத்தில் உணவு வழங்கப்படுமா?
     இல்லை
    • விமானத்தில் பத்திரிகை வழங்கப்படுமா
     இல்லை
    • சுய விளக்க படிவத்தில் நான் கையெழுத்திட வேண்டுமா?
     ஆரோக்கிய சேது செயலி இல்லாவிட்டால் செய்ய வேண்டும்
    • விமானத்தில் எத்தனை டிராலி பேக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும்?
     முடிந்தவரை குறைவாக கொண்டு செல்வது நல்லது
    • பேக்கேஜ் டேகுக்கு என்ன செய்வது?
     டவுன்லோட் செய்து அதை பேகில் ஒட்ட வேண்டும்
    • என்னால் பேக்கேஜ் டேகை டவுன்லோட் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது?
     பிஎன்ஆர் நம்பரை ஒரு தாளில் எழுதி அதை பேகில் ஒட்ட வேண்டும்
    • கன்டெய்ன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன செய்வது?
     பயணத்தைத் தவிர்க்கவும். இதை பாதுகாவலர்களிடமும் சொல்ல வேண்டும்
    • கோவிட் 19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டாலும் நான் பயணம் செய்ய முடியுமா?
     இல்லை
    • எனக்கு அனுமதி கிடைக்காமல் நான் பயணப்பட்டால் தண்டிக்கப்படுவேனா?
     ஆம்
    • எனது பேக்கேஜை எப்படி நான் எடுக்க முடியும்?
     பேட்ச் பேட்ச்சாக பேக்குகள் வரும் வரை காத்திருக்கவும்
    • ரயில்கள் எப்போது ஓடத் தொடங்கும்?
     From June 1. Only 100 pairs of trains have been allowed to run.
    • ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டதா
     ஆம்
    • கவுண்டருக்குச் சென்று ரயில் டிக்கெட் புக் பண்ண முடியுமா
     இல்லை, ஐஆர்சிடி அல்லது மொபைல் ஆப் மூலமாக இ டிக்கெட் மட்டுமே பெற முடியும்
    • ரயில்களில் யாரெல்லாம் பயணம் செய்ய முடியும்
     அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்கலாம்
    • முன்பதிவுக்கான கால அளவு என்ன
     30 நாட்கள்
    • ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இருக்குமா?
     இல்லை
    • ரயில்களில்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதா
     இல்லை சாதாரண கட்டணமே இருக்கும்
    • ரயில்களில் போர்வை வழங்கப்படுமா
     இல்லை, போர்வை, துணி என எதுவும் வழங்கப்பட மாட்டாது
    • ஜூன் 1 முதல் எத்தனை ரயில்கள் இயக்கப்படும்
     200 அல்லது 100 ஜோடிகள்
    • ஆர்ஏசி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டி்ல இருந்தால் நான் பயணப்பட அனுமதிக்கப்படுவேனா?
     இல்லை, உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
    • யாரையாவது ஏற்றி விடச் செல்வதாக இருந்தால் நான் எப்படி பிளாட்பார்ம் டிக்கெட் பெற முடியும்
     பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
    • மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை உண்டா?
     இந்த ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகை கிடைக்காது. அதேசமயம், 4 வகை திவ்யங் ஜன் சலுகை மற்றும் 11 வகையான நோயாளிகளுக்கான சலுகை வழங்கப்படும்.
    • இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள் இருக்குமா?
     இந்த ரயில்களில் ஏசி, நான் ஏசி இரண்டுமே இருக்கும்.
    • இந்த ரயில்களில் பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்குமா
     பொதுப் பெட்டிகள் இருக்கும். ஆனால் முன்பதிவு வசதி இல்லாத பொதுப் பெட்டிகள் இருக்காது.
    • பொதுப் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் என்னவாக இருக்கும்?
     2வது வகுப்பு இருக்கை வசதிக்கான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். அனைவருக்கும் சீட் தரப்படும்.
    • இந்த ரயில்களில் தத்கல், பிரீமியம் தத்கல் முறையில் டிக்கெட் எடுக்க முடியுமா?
     தத்கல், பிரீமியம் தத்கல் ஆகிய இரு வசதிகளும் கிடையாது.
    • ரயில்களில் சார்ட்டுகள் எப்போது ஒட்டப்படும்?
     4 மணி நேரத்திற்கு முன்பு முதல் சார்ட்டும், ரயில் புறப்பட 2 மணி நேரத்திற்கு முன்பு 2வது சார்ட்டும் தயாரிக்கப்படும்.
    • எனது பயணம் முழுவதும் நான் மாஸ்க் போட வேண்டியிருக்குமா?
     ஆம் கட்டாயம் போட வேண்டும்
    • எனது ரயிலில் ஏற நான் எப்போது ரயில் நிலையத்துக்கு வர வேண்டும்?
     தெர்மல்ஸ்கிரீன் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு வர வேண்டும்.
    • விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடியுமா?
     இல்லை, அடுத்த 3 மாதங்களுக்கு அரசே கட்டணத்தை நிர்ணயம் செய்யும்.
    • விமானங்களில் நடு சீட்டுகள் காலியாக விடப்படுமா?
     இல்லை
    • 40 நிமிடம் அல்லது குறைவான விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 2000, அதிகபட்சம் ரூபாய் 6000
    • 40-60 நிமிட விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 2500, அதிகபட்சம் ரூபாய் 7500
    • 60-90 நிமிட விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 3000, அதிகபட்சம் ரூபாய் 9000
    • 90-120 நிமிட விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 3500, அதிகபட்சம் ரூபாய் 10000
    • 120-150 நிமிட விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 4500, அதிகபட்சம் ரூபாய் 13000
    • 150-180 நிமிட விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 5500, அதிகபட்சம் ரூபாய் 15700
    • 180-210 நிமிட விமான பயணங்களுக்கு நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
     குறைந்த பட்சம் ரூபாய் 6500, அதிகபட்சம் ரூபாய் 18600
    • நான் வெளிநாடு செல்ல முடியுமா?
     இல்லை வெளிநாடு செல்ல முடியாது
    • இந்தியாவுக்குள் விமான சேவைகள் மீண்டும் தொடங்குமா?
     மருத்துவ தேவை தவிர மற்ற விஷயங்களுக்கு தொடங்காது
    • உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்குமா?
     மருத்துவ தேவை தவிர மற்ற விஷயங்களுக்கு தொடங்காது
    • விமானங்களுக்கும் ரயில்களுக்கும் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யலாமா?
     இல்லை, அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரை செய்ய வேண்டாம்
    • சிறப்பு ரயில்கள் இயங்குமா?
     சிறப்பு ரயில்களும் பிற மாநில தொழிலகர்களுக்கான ரயில்களும் இயங்கும்
    • நான் ஏற்கனவே புக் செய்த டிக்கெட்டுக்கு பணம் திருப்பு தரப்படுமா?
     ஆம், தரப்படும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது
    • நாடு முழுவதும் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் திறக்கப்படுமா?
     இல்லை
    • சுற்றுலா இடங்களை பார்வையிட மக்கள் அனுமதிக்கப்படுவார்களா?
     இல்லை
    • சிறப்பு ரயில்கள் இயங்குமா ?
     ஆம் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர
    வியாபார கேள்விகள்
     • எதுவும் வரி விலக்கு இருக்கிறதா?
      இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை
     • ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏதாவது சலுகை உள்ளதா?
      இதற்கான திட்டங்களை விரைவில் அரசு அறிவிக்கும்
     • என்னுடைய டிடிஎஸ் நீக்கப்படுமா ?
      ஆம் சம்பளம் இல்லை என்றால் 50% வரை
     உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
     Enable
     x
     Notification Settings X
     Time Settings
     Done
     Clear Notification X
     Do you want to clear all the notifications from your inbox?
     Settings X