National Help Line Number
+91-11-23978046
Toll Free No: 1075

இந்தியாவில் கொரோனாவைரஸ் பயண கட்டுப்பாடுகள்

Oneindia
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    உங்களுக்கு நெகடிவ் என்று வந்தால் தனிமைப்படுத்தப்டுவீர்கள். அறிகுறி உள்ளவர்கள் அரசு முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    அனைத்து அறிகுறி இல்லாத பயணிகளும் தங்களது வீடுகள், இருப்பிடங்கள், உள்ளூர், தனியார் போக்குவரத்தை பயன்படுத்தி செல்ல அனுமதிக்கப்படுவர். அறிகுறி உள்ளோர் பாதுகாக்கப்பட்ட கொரோனா மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஆந்திர பிரதேசம்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    மாநிலத்திற்குள் நுழைய நீங்கள் https://www.spandana.ap.gov.in/online_user. பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதியில் இருந்து வந்தால் 7 நாட்கள் அரசு முகாமிலும், 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்.
  • மற்ற நாடுகளிலிருந்து நான் ஆந்திராவுக்கு விமானத்தில் செல்ல முடியுமா?
    மாநிலத்திற்கு வரும் சர்வதேச பயணிகள் spandana.ap.gov.in இணையதளத்தில் தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். அறிகுறி உள்ளோர் வருகையின்போது பரிசோதிக்கப்படுவர். பின்னர் தனிமைக்கு அனுப்பப்படுவர். அவர்களுக்கு 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் எடுக்கப்படும். அதன் பின்னர் 7 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுவர்.
அருணாச்சல் பிரதேசம்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    மாநிலத்துக்குள் தாராளமாக பயணிக்கலாம். உரிய சோதனைகள் அவசியம்.
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    உள்ளூரைச் சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் பயணிக்கலாம். உள்ளூரைச் சேராதவர்களுக்கு தடை நீடிக்கிறது.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    ஆரோக்கிய சேது செயலியை டவுனலோட் செய்வது கட்டாயம். அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாள் வீட்டுத் தனிமை இருக்கும். அறிகுறிகள் இருந்தால் கோவிட் 19 சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
அசாம்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இல்லை என்றால், கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    7 நாட்கள் அரசு முகாமிலும், 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள், 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடனடி உறவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நபர்கள், 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள், சிறப்பு திறன் கொண்டவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் உடனடி உறவினர், நோயுற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    வெளிநாட்டிலிருந்து வருவம் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே நாள் கட்டண தனிமைக்கு உடன்படுவதைக ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் 7 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். சுயமாக தங்களது உடல் நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வயதானோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இறுதிச் சடங்குக்கு வருகை தருவோருக்கு விதி விலக்கு அளிக்கப்படும்.
பீகார்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    நீங்கள் குஜராத்தில் உள்ள சூரத் அஹமதாபாத்; மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, புனே;டெல்லி உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத், நொய்டா; மேற்கு வங்கம், கொல்கத்தா, பெண்களூர் ஆகிய இடங்களில் இருந்து வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள்
  • மற்ற நாடுகளிலிருந்து நான் பீகார் செல்ல முடியுமா?
    ஆம், ஆனால் உங்களுக்கு அறிகுறி இல்லாவிட்டால் 14 நாள் கட்டாய தனிமைியில் இருக்க வேண்டும். அறிகுறி உள்ளோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்.
சட்டிஸ்கர்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    மாநிலத்திற்குள் சுதந்திரமாக பயணிக்கலாம்
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    ஆம், நீங்கள் பயணிக்கலாம். ஆனால் https://raipur.gov.in/cg-covid-19-epass/ என்ற தளத்தில் பதிவு செய்து இ பாஸ் பெற வேண்டும். மேலும் நீங்கள் 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கோவிட் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    அறிகுறிகள் இல்லாதவர்கள் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
டெல்லி
  • டெல்லிக்குள் நான் பயணம் செய்ய முடியுமா?
    டெல்லிக்குள் செல்ல கட்டுப்பாடு இல்லை. டெல்லிக்குள் அரசு பஸ்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
  • மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    டெல்லிக்குப் போகலாம். ஆனால் கட்டாயம் 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.
  • டெல்லியில் உள்ள சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகள் என்ன?
    அனைத்து சர்வதேச பயணிகளும் கட்டாய கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன்பிறகு ஏழு நாட்கள் அரசு தனிமைப்படுத்தல் அவசியம். அறிகுறியற்ற பயணிகளை 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்ல அனுமதிக்க படுவார்கள். டெல்லிக்கு வந்ததும் அவர்கள் ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆரோக்யா சேது ஆப்பிற்கான இணைப்பு: https://www.mygov.in/aarogya-setu-app/
கோவா
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இல்லையென்றால் சோதனை செய்யப்பட மாட்டீர்கள் ஆனால் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    அனைத்து சர்வதேச பயணிகளும் வருகையின்போது கட்டாயம் சோதனைக்குட்பட வேண்டும். ரிசல்ட் வரும் வரை அவர்கள் பராமரிப்பு மைய தனிமையில் தங்கியிருக்க வேண்டும்.
குஜராத்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    மாநிலத்துக்குள் பயணிக்க தடை இல்லை
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    பிற மாநிலங்களிலிருந்து குஜராத்துக்கு செல்ல விரும்புவோர் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். digitalgujarat.gov.in என்ற இணையதளத்தில் இதற்காக பதிவு செய்யலாம்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    சூரத்தில் தரையிறங்குவதற்கு முன் அனைத்து சர்வதேச பயணிகளும் http://www.suratm Municipal.gov.in இல் பதிவு செய்ய வேண்டும். அறிகுறியற்ற நபர்கள் 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.
ஹரியானா
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கொரோனா இல்லை என்றால் கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இருந்தால் அரசு முகாமில் தங்க வேண்டும், அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும். ஆரோக்ய சேது செயலி கட்டாயம்
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் கட்டாயம் 14 நாள் குவாரன்டைனில் இருக்க வேண்டும். அதில் 7 நாள் கட்டண குவாரன்டைன், 7 நாள் வீட்டுத் தனிமை ஆகும்.
இமாச்சல பிரதேசம்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    சிவப்பு சோன்களில் இருந்து வந்தால் 14 நாட்கள் அரசு முகாமில் தங்க வேண்டும், கொரோனா இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    மாநில மக்கள் மட்டுமே மாநிலத்திற்கு உள்ளே வர முடியும். வருகையின் போதே எல்லோரும் சோதனை செய்யப்பட்டு 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 7 நாட்கள் அரசு முகாமிலும், 21 நாட்கள் வீட்டிலும் தனிமையில் இருக்க வேண்டும். ஆரோக்ய சேது ஆப் அவசியம்.
ஜம்மு காஷ்மீர்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    ஆரோக்ய சேது செயலி கட்டாயம். கொரோனா சோதனை கட்டாயம். சோதனையில் இரண்டு முறை நெகடிவ் வரும் வரை அரசு மையத்தில் இருக்க வேண்டும்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    வருகையின் போது கட்டாய கொரோனா சோதனை செய்யப்படும். 14 நாள் நிறுவன தனிமைப்படுத்தல் அவசியம். பயணிகளுக்கு கொரோனா இல்லை என்றால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்..
ஜார்க்கண்ட்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    சுதந்திரமாக பயணிக்கலாம்
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    நீங்கள் பயணிக்கலாம், ஆனால் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    பாசிட்டிவ் இல்லை என்றால் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்
கர்நாடகா
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    மாநிலத்துக்கு வெளியே செல்ல பாஸ் தேவை இல்லை, உள்ளே செல்ல பாஸ் தேவை. இதற்கு Seva Sindu app செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் . (https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/Kannada?ReturnUrl=%2F)மாநிலத்திற்கு உள்ளே வரும் நபர்கள் 14 தனிமையில் இருக்க வேண்டும், அறிகுறி உள்ளவர்கள் அரசின் முகாமில் இருக்க வேண்டும்/
  • தமிழகம் அல்லது டெல்லியிலிரு்நது கர்நாடகத்திற்குச் சென்றால் நான் நிறுவன தனிமையில் இருக்க வேண்டுமா?
    இல்லை, 14 நாள் வீட்டுத் தனிமை போதுமானது.
  • மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகத்திற்குப் போனால் நான் நிறுவனத் தனிமையில் இருக்க வேண்டுமா?
    ஆம், 7 நாள் நிறுவனத் தனிமை மற்றும் 7 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்
  • நான் வந்தே பாரத் விமான வசதியை பயன்படுத்த வேண்டும். மற்ற நாடுகளிலிருந்து நான் கர்நாடகாவுக்கு பயணிக்க முடியுமா?
    ஆம், ஆனால் நீங்கள் sevasindhu.karnataka.gov.in. சேவா சிந்து இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கோவிட் 19 - பிற நாட்டிலிருந்து கர்நாடகவுக்கு பயணம் என்ற விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். சமீபத்தில் நீங்கள் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தீர்களா என்பதைச் சொல்ல வேண்டும். எத்தனை காலம் தனிமை என்பதையும் சொல்ல வேண்டும்.
கேரளா
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை, பாஸ் தேவை இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இருந்தால் அரசு முகாமில் 14 நாட்கள் தங்க வேண்டும், அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
  • கேரளாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகள் என்ன?
    கேரளாவிற்குள் நுழைய இ பாஸ் அவசியம், 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். கேரளா வரும் நபர்கள் விமானம் டிக்கெட் புக் செய்த பின் covid19jagratha.kerala.nic.in. தளத்தில் பதிவு செய்து இ பாஸ் பெற வேண்டும் .
மத்தியப் பிரதேசம்
  • மாநிலத்திற்குள் பயணம் செய்ய என்ன விதிமுறை?
    மாநிலத்துக்குள் பயணம் செய்ய கட்டுப்பாடு இல்லை.
  • மாநிலத்துக்கு இடையிலான பயணத்துக்கு கட்டுப்பாடு உண்டா?
    மத்தியப் பிரதேசத்துக்கு வரும் பயணிகள் ஆரோக்ய சேது ஆப்பை தரவிரக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இ பாஸ் பெற www.mapit.gov.in/covid-19 இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அறிகுறி உள்ளோர் 14 நாள் தனிமையில் வைக்கப்படுவர். அறிகுறி இல்லாதோர் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கப்படுவர்.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    மாநிலத்திற்கு வரும் அனைவருக்கும் கோவிட் 19 சோதனை நடத்தப்படும். அறிகுறிகள் இல்லாதோர் 7 நாள் கட்டணத் தனிமையில் இருக்க வேண்டும். அதன் பின்னர் 7 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளோர் மருத்துவமனையில் சேர்க்க்படுவர். ஆரோக்கிய சேது கட்டாயம்.
மகாராஷ்டிரா
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    No norms, unless you are visiting a hotspot
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இருந்தால் அரசு முகாமில் 14 நாட்கள் தங்க வேண்டும், அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
  • சர்வதேச பயணிகளுக்கான பயண விதிமுறைகள் என்ன?
    அனைத்து சர்வதேச பயணிகளும் ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும். அனைவருக்கும் கட்டாய 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் அவசியம். ஆரோக்யா சேது பயன்பாட்டிற்கான லிங்க்: https://www.mygov.in/aarogya-setu-app/
மணிப்பூர்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாடு எதுவும் இல்லை
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இருந்தால் அரசு முகாமில் தங்க வேண்டும், அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க வேண்டும். விமானத்தில் வரும் மக்கள் QuarMon செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தும் காலம் முடியும் வரை இந்த செயலியில் உங்கள் புகைப்படத்தை காலை 8 மணி மற்றும் மாலை 6 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.Link to QuarMon aap: https://quarmonmanipur.nic.in/quarmon/
  • மணிப்பூரில் உள்ள சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    ஆரோக்யா சேது பயன்பாட்டை பயன்படுத்துவது கட்டாயமாகும், மேலும் பசுமை மண்டலத்தில் இருந்து வருபவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அறிகுறியற்றவர்கள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு முத்திரை குத்தப்படுவார்கள். அறிகுறி உள்ள பயணிகள் ஒரு மருத்துவ குழுவினரால் தனிமை வார்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
மேகாலயா
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    இல்லை
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    இ பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. https://serviceonline.gov.in/epass/ என்ற தளத்தில் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டி வரும்.
  • நான் வேறு நாட்டிலிருந்து மேகாலயாவுக்கு விமானத்தில் செல்ல என்ன விதிகள் பின்பற்ற வேண்டும்?
    48 மணி நேரம் முகாம் குவாரன்டைன் செய்யப்படுவீர்கள்.. டெஸ்ட் முடிவில் நெகட்டிவ் வந்தால் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.
மிஸோரம்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    இல்லை
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள்.
நாகாலாந்து
  • மாநிலத்திற்குள் பயணம் செய்ய என்ன விதிமுறை?
    மாநிலத்துக்குள் தாராளமாக பயணம் செய்யலாம்
  • மாநிலத்துக்கு இடையிலான பயணத்துக்கு கட்டுப்பாடு உண்டா?
    உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் nCovid- என்ற மாநில அரசின் ஆப்பில் இ பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் ஆரோக்ய சேது செயலியையும் அவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனைவரும் கண்காணிப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்படுவர்.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் இ பாஸ் பெற nCovid-19 நாகாலாந்து செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நாகாலாந்து வருவோர் அனைவரும் 14 நாள் நிறுவன குவாரன்டைனிலும், 14 நாள் வீட்டுத் தனிமையிலும் இருக்க வேண்டும்.
ஒடிஷா
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    கட்டுப்பாடு ஏதும் இல்லை. சுதந்திரமாக பயணிக்கலாம்
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    ஒடிஷாவுக்குப் போகலாம். ஆனால் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்படுவீர்கள்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    சர்வதேச பயணிகளுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாள் வீட்டுத் தனிமை அவசியம். அறிகுறி இருப்போர் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
புதுச்சேரி
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    கட்டுப்பாடு இல்லை
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    பயணம் செய்யலாம். ஆனால் https://epass.py.gov.in என்ற தளத்தில் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். அறிகுறிகள் இருந்தால் உரிய மையத்தில் சேர்க்கப்படுவீர்கள்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    நெகட்டிவ் முடிவு வந்தால் அவர்கள் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். பாசிட்டிவ் வந்தால் அல்லது அறிகுறிகள் இல்லாவிட்டால் கோவிட் 19 பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.
பஞ்சாப்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    No norms
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இருந்தால் அரசு முகாமில் தங்க வேண்டும், அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
  • மற்ற நாடுகளிலிருந்து நான் பஞ்சாபிற்கு விமானத்தில் செல்லலாமா?
    ஆம், ஆனால் நீங்கள் ஏறுவதற்கு முன்பு COVA Punjab செயலியில் பதிவு செய்ய வேண்டும். வருகையில், நீங்கள் 7 நாட்கள் கட்டாய அரசு முகாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அங்கு நீங்கள் கோவிட் -19 க்கு சோதிக்கப்படுவீர்கள், சோதனை னெக்டிவாக இருந்தால் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
ராஜஸ்தான்
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    விதிமுறை ஏதும் இல்லை.
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    மாநிலத்திற்கு உள்ளே வர இ பாஸ் வேண்டும். https://emitraapp.rajasthan.gov.in அல்லது 18001806127மற்றும் 181 எண் மூலம் உதவிபெறலாம்
  • சர்வதேச பயணிகளுக்கான பயண விதிமுறைகள் என்ன?
    மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளின்படி பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நுழைவு கட்டுப்படுத்தப்படும்.
சிக்கிம்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    மாநிலத்துக்குள் பயணிக்கலாம்
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    நீங்கள் உள்ளூரைச் சேராதவராக இருந்தால் தடை உண்டு.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விமான பயணம் செல்ல அனுமதிக்கப்படுவர். அவர்கள் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்.
தமிழ்நாடு
  • மாநிலத்துக்கு உள்ளே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    பயணிகள் பாஸ் பெற வேண்டும். நீங்கள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம் https://tnepass.tnega.org/#/user/pass.
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    கட்டுப்பாட்டுக்கு எதுவும் இல்லை. இந்த தளத்தில் இருந்து பாஸ் மட்டும் பெற வேண்டும். https://tnepass.tnega.org/#/user/pass. உங்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் நீங்கள் வீட்டிற்கு செல்லலாம். டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்து கொரோனா அறிகுறி இருந்தால் அரசு முகாமிற்கு செல்ல வேண்டும்
  • தமிழகத்தில் சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    தமிழ்நாட்டுக்குச் செல்லும் அனைத்து சர்வதேச பயணிகளும் மாநிலஅரசின் இணையதளத்தில் பதிவு செய்து இ பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்கலாம் அல்லது பணம் செலுத்தி மாநில அரசு சொல்லும் இடத்தில் தனிமையில் இருக்கலாம்.
தெலங்கானா
  • மாநிலத்திற்குள் பயணம் செய்ய என்ன விதிமுறை?
    மாநிலத்துக்குள் நீங்கள் பயணம் செய்யலாம்
  • மாநிலத்துக்கு இடையிலான பயணத்துக்கு கட்டுப்பாடு உண்டா?
    மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு பாஸ் தேவையில்லை. அறிகுறி இல்லாதோருக்கும் குவாரன்டைன் செய்யப்பட மாட்டாது. அறிகுறி உள்ளோர் மட்டும் ஒரு சுகாதார மையத்தில் 14 நாள் தங்கியிருக்க வேண்டும்.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    பாஸ் தேவையில்லை. ஆரோக்கிய சேது கட்டாயம். வெளிநாடுகளிலிருந்து மாநிலத்திற்கு வருவோர் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுவர். அறிகுறி இல்லாதோர் 7 நாள் கட்டணத் தனிமையில் இருக்க வேண்டும். 7 நாள் வீட்டுத் தனிமையில் பின்னர் இருக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளோர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுவர்.
திரிபுரா
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    அப்படி எதுவும் இல்லை
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    வெளி மாநிலங்களில் தவிப்போரைத் தவிர மற்றவர்கள் திரிபுராவுக்குள் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    அறிகுறி இல்லாத அனைத்துப் பயணிகளும் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறிகள் காணப்பட்டால் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள்.
உத்தரப் பிரதேசம்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    கட்டுப்பாடுகள் இல்லை.
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    மாநிலங்களுக்கு இடையிலான பயணத்திற்கு பாஸ் தேவையில்லை. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ள டெல்லியின் ஹாட்ஸ்பாட் பகுதிகள், கன்டெய்ன்மென்ட் பகுதிகளுக்கோ, காஸியாபாத், நொய்டா மாவட்டங்களுக்கோ செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் அனுமதி பெற வேண்டும். உபிக்கு செல்லும் அனைவருமே 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்.
  • உத்தரபிரதேசத்தில் சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகள் என்ன?
    அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்கள் கட்டாய அரசு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அங்கு அவர்கள் கோவிட் -19 க்கு சோதிக்கப்படுவார்கள். எதிர்மறையாகக் கண்டறியப்பட்டால், அவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலை அனுமதிப்பார்கள். அனைத்து சர்வதேச பயணிகளும் reg.upcovid.in இல் பதிவு செய்ய வேண்டும் அல்லது 1800-180-5145 ஐ அழைக்க வேண்டும். 7 நாட்களுக்குள் வருபவர்களுக்கு ஆதாரம் காண்பிக்கப்பட்டால் தனிமைப்படுத்துவடகில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
உத்தரகாண்ட்
  • மாநிலத்திற்குள்ளான பயணத்திற்கான விதிமுறைகள் என்ன?
    குறிப்பிட்ட கட்டுப்பாடு ஏதும் இல்லை
  • மாநிலத்திற்கிடையிலான பயணத்திற்கு என்ன விதிமுறைகள்?
    ஆம், பயணிக்கலாம். கோவிட் 19 அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்திலிருந்து வருபவராக இருந்தால் 7 நாள் பராமரிப்பு மைய தனிமையிலும், 14 நாள் வீட்டுத் தனிமையிலும் இருக்க வேண்டும். அறிகுறி இல்லாதவர்கள் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறி உள்ளோர் கோவிட் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரும் 14 நாள் நிறுவன தனிமை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
மேற்கு வங்கம்
  • மாநிலத்துக்கு இடையே பயணம் செய்ய என்ன விதிமுறை?
    அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும். Sandhaneசெயலியில் உங்கள் விவரங்களை பதிய வேண்டும்.
  • சர்வதேச பயண விதிமுறைகள் என்ன?
    மேற்கு வங்காளத்திற்கு செல்ல விரும்புவோர் அனைவரும் Sandhane செயலியில் பதிவு செய்ய வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில் அவர் / அவளுக்கு COVID-19 க்கு ஏற்படவில்லை என்று உறுதி கூறி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X