For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Debate: ரஜினி கமல் இணைவது காலத்தின் கட்டாயமா அல்லது சந்தர்ப்பவாதமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் முன்பு இன்னொரு விவாதத்தை முன்வைத்துள்ளது அரசியல்.. ரஜினி கமல் இணையப் போகிறார்கள் என்பதுதான் அந்த விவாதம்.

ஒவ்வொரு பிரச்சினையிலிருந்தும் மீள்வதற்குள்ளாக அடுத்த பிரச்சினையை எடுத்து வைப்பதில் நமக்கு இணை நாமாக மட்டுமே இருக்க முடியும். அந்த வகையில் அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்போது ரஜினி கமல் வந்துள்ளனர்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டார். கட்சி ஆரம்பித்து விட்டார். ஒரு லோக்சபா தேர்தலையும் சந்தித்து விட்டார். மக்கள் மத்தியில் ஒரு அடையாளத்தையும் பெற்று விட்டார்.

 is rajini kamal alliance necessary for tamil nadu

ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். வருகிற சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் கட்சி ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ரஜினியை வைத்து கடந்த 20 வருடமாக இங்கு அரசியல் நடந்து கொண்டுள்ளது. அதை ரஜினியும் ஆணித்தரமாக தடுத்ததில்லை. இந்த நிலையில்தான் இருவரும் தமிழக மக்களின் நலனுக்கு தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் இணைவது குறித்து பெரும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இவர்கள் சேருவது காலத்தின் கட்டாயமா அல்லது சந்தர்ப்பவாதமா.. நாமும் விவாதிப்போம்.. ஆரோக்கியமான விவாதமாக, ஆக்கப்பூர்வமான விவாதமாக இது அமையட்டும்.. தவறான வார்த்தைப் பிரயோகம், தனி மனித விமர்சனம் உள்ளிட்டவற்றை தவிர்த்து விட்டு உங்களது கருத்துக்களை எடுத்து வையுங்கள்.

உங்களின் உள்ளக் கிடக்கையை உலகத் தமிழர்கள் அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.. விவாதம் தொடங்கட்டும்.

English summary
Union of Kamal Haasan and Rajinikanth is necessary for the people of Tamil Nadu?. Let us debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X