For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு ஐடியா.. இப்படி செய்யலாமே!

Google Oneindia Tamil News

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி என்ற புகார் இப்போது சர்வ சாதாரணமாக வந்து விட்டது. இதுதொடர்பான சந்தேகங்களும் அதிகரித்தபடியே உள்ளன. இந்த நிலையில் நமது வாசகர் ஆகர்ஷிணி நமக்கு அனுப்பியுள்ள ஒரு ஐடியா..

வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் முன்பாகவே சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு நடைபெறும் பூத் களிலும் எல்லா கட்சிகளின் சார்பாகவும் ஏஜென்ட் இருப்பார்களல்லவா. மக்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு முன்பாகவே இயந்திரத்தினை வெளியில் எடுத்தவுடன் ரீசெட் செய்து ஸீரோ ரிசல்ட் வருகிறதா ரிப்போர்ட் ஐ செக் செய்து விட வேண்டும்.

Will it help to avoid EVM frauds

பிறகு ஒவ்வொரு கட்சியின் ஏஜெண்டும் தனது கட்சியின் சின்னத்தில் சோதனை வாக்காக ஐந்து அல்லது பத்து வாக்குகளை ஒவ்வொரு பூத் ஏஜெண்டும் மாற்றி மாற்றி வரிசையாக எல்லோரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவு செய்து விட வேண்டும். அதாவது எல்லா சின்னத்திலும் சரிசமாக ஐந்து அல்லது பத்து வாக்குகளை என்று.

பிறகு இயந்திரத்தின் ரிப்போர்ட்டை பார்த்து வாக்களித்த சின்னத்திற்கே வாக்குகள் விழுந்துள்ளனவா அல்லது குறிப்பிட்ட சின்னத்திற்கு மட்டும் போயுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குகள் சரியாக விழுந்திருந்தால், வாக்குப்பதிவு ஆரம்பிக்கலாம். பிறகு திரும்ப ரீசெட் செய்து வாக்குப் பதிவை ஆரம்பிக்கலாம் அல்லது அப்படியே விட்டு விட்டாலும் எண்ணிக்கையில் இருந்து கழித்து விடலாம். இயந்திரம் சரியாக இருக்கிறதா என்பதை அறிய இது ஓரளவு உதவலாம்.

வாசகர்களே நீங்க என்ன சொல்றீங்க.. கருத்துக்களைப் பதிவிடுங்க, பார்க்கலாம்.

English summary
Our reader has given one idea to sort out EVM frauds. Share your comments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X