For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூகுள்ல சூரியனை ஏன் 6 கோள்கள் மட்டும் சுத்துது?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

இன்றும் நீங்கள் கூகுள் சர்ச் பக்கத்துக்குப் போயிருப்பீர்கள். இன்னும் அந்தப் பக்கத்துக்குப் போயிருக்காவிட்டால் கொஞ்சம் எட்டிப் பார்க்கவும்.

அங்கே சூரியனை பூமி உள்ளிட்ட 6 கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் அனிமேஷனைக் காணலாம். அதில் பூமியை அதன் துணைக் கோளான நிலாவும் சுற்றிக் கொண்டிருக்கும். சூரியனை கோள்கள் எப்பவும் தானே சுத்திக்கிட்டு இருக்கு, இன்னிக்கு என்ன புதுசா அனிமேஷன்? என்று ஒரு 'நச்' கேள்வியை நீங்கள் கேட்கலாம். அதே போல என்னய்யா சூரியனை 9 கோள்கள் அல்லவா சுற்ற வேண்டும் என்ற அடுத்த கேள்வியையும் கேட்கலாம்.

இதற்கு பதில் அந்த அனிமேஷனை க்ளிக் செய்தாலே கிடைக்கும். இருந்தாலும் நாமும் அதை உங்களுக்குச் சொல்வதில் தப்பில்லையே...

கோபர்நிக்கஸ்:

கோபர்நிக்கஸ்:

பள்ளிக் கூடத்தில் நாம் படித்த நிக்கோலஸ் கோபநிக்கசின் 540வது பிறந்த நாள் இன்றாகும். போலந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்மனிய கணிதவியலாரான இவர் பின்னாளில் வானியலிலும் கலக்கியவர். இவர் தான் முதன் முதலில் சூரியனைத்தான் கோள்கள் சுற்றி வருகின்றன என்று அறிவித்தவர். அதுவரையில், பூமியைத் தான் சூரியனும் பிற கோள்களும் சுற்றி வருவதாகக் கருதப்பட்டு வந்தது.

உலக அறிவியலின் மிக முக்கிய மைல்:

உலக அறிவியலின் மிக முக்கிய மைல்:

இவர் வெளியிட்ட De revolutionibus orbium coelestium (On the Revolutions of the Celestial Spheres) என்ற ஆய்வுக் கட்டுரை உலக அறிவியலின் மிக முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

ஏன் 6 கோள்கள் மட்டும்?:

ஏன் 6 கோள்கள் மட்டும்?:

இன்றைய கூகுள் அனிமேசனில் சூரியன் தவிர, மெர்க்குரி (புதன் கிரகம்), வீணஸ் (சுக்கிரன்), பூமி அண்ட் நிலா, மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர் (வியாழன்), சாட்டர்ன் (சனி கிரகம்) ஆகிய 6 கிரகங்கள் மட்டுமே இருக்கும். காரணம், 15ம் நூற்றாண்டில் யுரானஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகியவை கண்டுபிடிக்கப்படவில்லை. (அதிலும் புளூட்டோ கிரகமா அல்லது சிறு கோளா என்ற சந்தேகம் வேறு இப்போது கிளப்பப்பட்டுவிட்டது)

இறக்கும்போது வெளியான ஆய்வறிக்கை:

இறக்கும்போது வெளியான ஆய்வறிக்கை:

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுழல்வதைக் கண்டுபிடித்தாலும் அதை அவர் 1543ம் ஆண்டு வரை வெளியில் சொல்லவில்லை. காரணம், தனது கருத்து அன்றைய மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருந்ததால், அவர் அதை வெளியில் சொல்ல யோசித்தார். ஆனாலும் தான் இறப்பதற்கு சில காலம் முன்னதாக தனது அறிக்கையை வெளியிட்டு உலகையே திக்குமுக்காட வைத்தார்.

கோபர்நிக்கசின் இந்த அறிக்கையைத் தான் பின்னால் வந்த மாபெரும் வானியல் அறிஞர்களான
கலிலியோவும் கெப்ளரும் அடிப்படையாக வைத்து ஆய்வுகளைத் தொடர்ந்து வானியல் ரகசியங்களை ஒவ்வொன்றால் அவிழ்த்தனர்.

English summary
Google’s doodle today celebrates the 540th birth anniversary of Nicolaus Copernicus, the 15th century Renaissance mathematician and astronomer. Today’s Google doodle has an animated heliocentric model which was formulated by the Polish astronomer. The doodle shows the sun at the centre of the universe with the planets revolving around it. It also depicts the then known five other planets — Mercury, Venus, Mars, Jupiter and Saturn — revolving around the sun. The Earth also has the moon revolving around it. The Google logo can be seen in the backdrop and the second O in the word has been replaced by the sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X