For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''கண்மணி உன் வீட்டில் சவுக்கியமா''.. செவ்வாய் கிரகத்துக்கு உங்கள் கவிதையை அனுப்ப ஆசையா?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

செவ்வாய் கிரகம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அந்த கிரகத்துக்கு விரைவில் மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டத்துக்கு வேகம் தரவும் சில முயற்சிகளில் இறங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா.

செவ்வாய் கிரகத்துக்கு சில விண்கலன்களை அனுப்பி, தரையிறக்கி, மண் பரிசோதனை, பாறைகளைக் குடைந்து பரிசோதனைகளை நடத்திவிட்டது அமெரிக்கா. அந்த நாடு அனுப்பிய ஒரு ரோவர் இன்னும் செவ்வாய் கிரகத்தில் தனது ஆயுளையும் தாண்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு, அந்த கிரதத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டுள்ளது.

'மேவென்' என்றொரு விண்கலம்...

'மேவென்' என்றொரு விண்கலம்...

இந் நிலையில் வரும் நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு 'மேவென்' (Mars Atmosphere and Volatile Evolution-MAVEN) என்ற ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது நாஸா.

இந்த விண்கலத்தில் நாம் எழுதி அனுப்பும் கவிதைகள், தகவல்களையும் எடுத்துச் சென்று செவ்வாய் கிரகத்தில் ஒலிபரப்பப் போகிறார்கள். ''ஓ.. செவ்வாயே உன் வாய் தான் செவ் வாயோ'' என்று டுபாக்கூர் கவிதைகளாக இல்லாமல் 'நச்' என்று மூன்றே வரிகளில் ஒரு ஹைகூ மாதிரி விஷயத்தைச் சொல்லுங்கள் என்கிறது நாஸா.

ஜூலை 1ம் தேதி வரை...

ஜூலை 1ம் தேதி வரை...

வரும் ஜூலை 1ம் தேதி வரை நாஸாவுக்கு வாசகங்கள், தகவல்கள், கவிதைகளை அனுப்பலாம். ஜூலை 15ம் தேதி முதல் இதில் எது மிகச் சிறந்த வாசகம், தகவல், கவிதை என்பது குறித்து ஆன்லைனில் போட்டி நடத்தப்படும். அதில் 3 சிறந்த தகவல்/கவிதை/வாசகம் தேர்வு செய்யப்பட்டு 'மேவென்' மூலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆன்லைனிலேயே ஒரு சான்றிதழும் தரப்படும்.

போட்டியில் பங்கேற்க...

போட்டியில் பங்கேற்க...

இந்த 'மேவென்' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேல் பரப்பு வளி மண்டலத்தை ஆய்வு செய்யப் போகிறது. இந்தக் கோளில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அதன் காற்று மண்டலத்தில் கிடைக்கலாம் என்று திடமாக நம்புகிறது நாஸா.

http://lasp.colorado.edu/maven/goingtomars என்ற லிங்க் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

English summary
In an initiative to raise awareness about its 'Going to Mars Campaign', NASA will compile a list of names and personal messages from the public in a DVD and send it to MARS upper atmosphere. On Wednesday, NASA invited the public to participate in the online campaign by submitting messages, three-line poems or haikus to be carried on board the Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) spacecraft that will be launched in November.
 "The Going to Mars campaign offers people worldwide a way to make a personal connection to space, space exploration, and science in general, and share in our excitement about the MAVEN mission," said Stephanie Renfrow, lead for the MAVEN Education and Public Outreach program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X