For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்!: 52 வீரர்கள்.. 45 நாட்கள், தொடர்ந்து 9,700 கி.மீ!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும்.

டீசல் என்ஜினால் இயங்கும், 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது.

கிளப் எஸ் ஏவுகணைகள்:

கிளப் எஸ் ஏவுகணைகள்:

மணிக்கு 31 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் 300 மீட்டர் வரை மூழ்கும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கியில் 200 கி.மீ. வரை சென்று போர்க் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கிளப் எஸ் (Klub-S) வகையிலான ஏவுகணைகளும், சாம் வகை ஏவுகணைகளும், நீரில் மூழ்கிச் செல்லும் டார்பிடோ ரக ஏவுகணைகளும் உண்டு.

தொடர்ந்து 9,700 கி.மீ.:

தொடர்ந்து 9,700 கி.மீ.:

இந்தியா உருவாக்கிய USHUS hydro-acoustic ரக சோனார் உதவியால் இயங்கும் இந்த நீர்மூழ்கியால் நீரில் மூழ்கியபடியே தொடர்ந்து 640 கி.மீ. வரை பயணிக்க முடியும். நீருக்கு அடியிலும் வெளியிலுமாக மாறி மாறி இந்த நீர்மூழ்கியால் தொடர்ந்து 9,700 கி.மீ. பயணிக்க முடியும்.

52 வீரர்கள்.. 45 நாட்கள்:

52 வீரர்கள்.. 45 நாட்கள்:

இந்த நீர்மூழ்கியில் 52 வீரர்கள் பயணிக்க முடியும். தொடர்ந்து 45 நாட்கள் இந்த நீர்மூழ்கிக் கப்பலால் கடலிலேயே இருந்து பணியாற்ற முடியும். எரிபொருள் நிரப்பவும், உணவுப் பொருட்களை ஏற்றவும் 45 நாட்களுக்கு ஒருமுறையே இந்த நீர்மூழ்கி கரைக்கு கொண்டு வரப்படும்.

S63 என்ற 'கோட் வேர்ட்':

S63 என்ற 'கோட் வேர்ட்':

2 டீசல் என்ஜின்களால் இயங்கும் இந்த நீர்மூழ்கிகள் நீரில் மூழ்கியபடி மணிக்கு 31 கி.மீ. வேகத்திலும் நீருக்கு மேல் மணிக்கு 19 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது. இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக்கு S63 என்ற 'கோட் வேர்ட்' உண்டு.

இந்தியாவிடம் 10:

இந்தியாவிடம் 10:

அமெரிக்கப் படையினரால் Kilo-class submarine என்று அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கிகள் தான் ரஷ்யாவில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிடமும் இந்த வகையைச் சேர்ந்த 10 நீர்மூழ்கிகள் உள்ளன.

டீசல் பிளஸ் பேட்டரிகள்:

டீசல் பிளஸ் பேட்டரிகள்:

இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் டீசல் என்ஜின்கள் மற்றும் மாபெரும் பேட்டரிகளின் திறனால் இயங்கக் கூடியவை. இந்த 2300 டன் எடை கொண்ட சிந்துரக்சக் நீர்மூழ்கியில் 500 மாபெரும் பேட்டரிகள் உண்டு. கடந்த 2010ம் ஆண்டு சிந்துரக்சக் நீர்மூழ்கியின் ஒரு பேட்டரியில் இருந்து ஹைட்ரஜன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டு ஒரு வீரர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு...

மீண்டும் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு...

கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த வகை நீர்மூழ்கிகளான ஐஎன்எஸ் சிந்துகோஷ் (S55), ஐஎன்எஸ் சிந்து துவஜ் (S56), ஐஎன்எஸ் சிந்து வீர் (S58), ஐஎன்எஸ் சிந்து ரத்னா (S59) ஆகியவை ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு மேம்படுத்தப்பட்டன. அதே போல ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கியும் கடந்த ஆண்டு தான் ரஷ்யாவின் ஸ்வெஸ்டாக்ச்கா கப்பல் தளத்தில் மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'Project 08773':

'Project 08773':

இதற்காக 80 மில்லியன் டாலர்களை இந்தியா செலவழித்தது. இந்த நீர்மூழ்கிகளின் குளிரூட்டும் கட்டமைப்பில் பிரச்சனை இருந்ததாலும் பேட்டரிகளில் பிரச்சனை இருந்ததாலும் அது ரஷ்யாவில் வைத்து சரி செய்யப்பட்டது. 'Project 08773' என்ற பெயரில் இந்தப் பணி நடந்தது.

ஆனால், இன்றைய விபத்தை பார்க்கையில் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை என்றே தெரிகிறது.

English summary
INS Sindhurakshak, the Indian Navy submarine that was gutted by fire early Wednesday, is a Russian-made vessel commissioned in 1997. The 238 ft long boat was built by Russian shipbuilding giant Sevmask; in 2010 INS Sindhurakshak (S63) had undergone a major refit at Russia's Zvezdochka shipyard. With a top speed of knots (35 km per hour) and diving depth of 300 metres, the NATO Kilo-class submarine is armed with Russian missile system Klub-S with 200-km range, SAM launcher, active-passive homing torpedo, Indian USHUS hydro-acoustic (sonar) system and hi-tech radio communication systems. It has a snorting range of 9,700 km and can travel upto 640 km when submerged. The submarine can carry 52 crew members for 45 days without break. As part of the refit, the submarine’s cooling system was modified; a new radio-locater was fitted as well. Besides Sindhurakshak, Zvezdochka has also refitted four other Indian submarines -- Sindhugosh (S55), Sindhudvhaj (S56), Sindhuvir (S58) and Sinduratna (S59).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X