For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவுக்கு தலைவர் பதவி இல்லை

By A K Khan
Google Oneindia Tamil News

அதே போல 100 பில்லியன் டாலர் அவசர கால நிதியில் இருந்து சீனா தனக்குத் தேவைப்படும்போது தான் போட்ட பணத்தில் பாதியை எடுத்துக் கொள்வோம் என்று சொன்னதை இந்தியாவும் பிரேசிலும் ஏற்கவில்லை. ஆனால், சீனா பிடிவாதம் பிடித்ததால் இந்தியாவும் பிரேசிலும் விட்டுக் கொடுத்தன. அதே நேரத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சீனாவைச் சேர்ந்த யாருக்கும் வங்கியின் தலைவர் பதவி தரப்படாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை சீனா ஏற்றுக் கொண்டது.

அதே போல வங்கியின் தலைமையகம் சீனாவில் அமைக்க இந்தியாவும், முதல் தலைவர் பதவி இந்தியாவுக்குத் தர சீனாவும் ஒப்புக் கொண்டுவிட்டன.

BRICS establish $100bn bank and currency reserves to cut out Western dominance

இந்தப் பேச்சுவார்த்தைகளில் கடைசி நேரம் வரை கூட சிக்கல் தொடர்ந்தது. இதனால் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் வங்கி உருவாக்கப்படுவதே கூட சந்தேகத்துக்கு இடமானது. ஆனால், கடைசி 10 நிமிடங்களில் இரு தரப்பும் சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்ய வங்கி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுவிட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் டில்மியா ரெளசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஆகியோர் பிரேசிலின் போர்டலேஸா நகரில் கையெழுத்துப் போட்டனர்.

இந்த வங்கியிலிருந்து உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியைப் பெற முடியும்.

English summary
Leaders of the BRICS emerging market nations launched a $100 billion development bank and a currency reserve pool on Tuesday in their first concrete step toward reshaping the Western-dominated international financial system. 
 The bank aimed at funding infrastructure projects in developing nations will be based in Shanghai and India will preside over its operations for the first five years, followed by Brazil and then Russia, leaders of the five-country group announced at a summit.
 They also set up a $100 billion currency reserves pool to help countries forestall short-term liquidity pressures. The long-awaited bank is the first major achievement of the BRICS countries - Brazil, Russia, India, China and South Africa - since they got together in 2009 to press for a bigger say in the global financial order created by Western powers after World War Two and centered on the International Monetary Fund and the World Bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X