For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது உலக வங்கியின் பழைய வரலாறு..:

By A K Khan
Google Oneindia Tamil News

இதையடுத்து தங்களது ஐரோப்பிய கஸ்டமர்கள் அனைவரும் காலியான நிலையில் தான் உலக வங்கி, ஐரோப்பா அல்லாத பிற நாடுகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. இது தான் உலக வங்கியின் 'பழைய வரலாறு'.

BRICS establish $100bn bank and currency reserves to cut out Western dominance

மேலும் உலக வங்கியிடம் முதன்முதலில் கடன் கேட்டவை பிரான்ஸ், போலந்து, சிலி ஆகிய நாடுகள் தான். இதில் பிரான்சுக்கே முதலில் கடன் தருவோம் என்றார் அப்போதைய உலக வங்கித் தலைவரான அமெரிக்கர் ஜான் மெக்லாய். அத்தோடு அமெரிக்க மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தது. கடன் வேண்டுமென்றால் பிரான்ஸ் அரசில் உள்ள கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என்றது. இதற்கு பிரான்ஸ் ஒப்புக் கொண்டதோடு கம்யூனிஸ்ட்டுகளை கழற்றிவிட்டுவிட்டு கடனை வாங்கிக் கொண்டு போனது. இது தான் உலக வங்கியின் 'அரசியல் வரலாறு'.

அதே போல இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச அளவில் நாடுகளின் நிதி செலுத்தும் முறைகளை (International payment system) சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் சர்வதேச நாணய நிதியம். பெரும்பாலும் ஏற்றுமதி- இறக்குமதியில் அமெரிக்க டாலர்களே புழக்கத்தில் உள்ளதால், டாலர் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகவே இதை இன்னும் பல சோஷலிஸ நாடுகள் பார்க்கின்றன.

இதன் தலைமையகமும் வாஷிங்டனில் தான். உலக வங்கியின் தலைவர்களாக அமெரிக்கர்களே இருந்து வருவது போல இந்த அமைப்பின் தலைவர்களாக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர்.

English summary
Leaders of the BRICS emerging market nations launched a $100 billion development bank and a currency reserve pool on Tuesday in their first concrete step toward reshaping the Western-dominated international financial system. 
 The bank aimed at funding infrastructure projects in developing nations will be base
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X