For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை மேலும் சரியலாம்!: ஆனால், சிரியாவில் ஏதாவது நடந்தால்...!!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

உலக பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் தங்கத்தின் பங்கு மிகக் மிகக் குறைவாகவே இருப்பதையடுத்து அதன் விலை அடுத்த ஆண்டு மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதுமே 2013ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது.

தொடர்ந்து விலை சரிவு:

தொடர்ந்து விலை சரிவு:

இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை, தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்தது தங்கத்தின் விலை. 2012ம் ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில், தங்கம் விலை கிராம் ரூ. 3,010க்கு விற்கப்பட்டது.

2013 ஆரம்பம் முதலே...

2013 ஆரம்பம் முதலே...

ஆனால், 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. ஜனவரி கடைசி வாரத்தில் சவரனுக்கு ரூ. 448 வரை தங்கம் விலை குறைந்தது.

3 மாதத்தில் ரூ. 1,512 சரிவு...

3 மாதத்தில் ரூ. 1,512 சரிவு...

பிப்ரவரி மாதத்தில் சவரனுக்கு ரூ. 584 வரை சரிவை சந்தித்தது. மார்ச் மாதத்தில் சவரனுக்கு ரூ. 480 வரையில் சரிவு ஏற்பட்டது. அதாவது 3 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,512 வரை சரிந்தது.

விலை 5ல் ஒரு பங்கு குறைந்தது..

விலை 5ல் ஒரு பங்கு குறைந்தது..

அவ்வப்போது சிறிய அளவில் விலை உயர்ந்தாலும் சரிவே அதிகமாக உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 5ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது. அதிலும் கடந்த ஜூன் மாதத்தில் தான் மிக அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டது.

அமெரிக்காவில் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம்...

அமெரிக்காவில் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம்...

இந் நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பதால் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்று தெரிகிறது. (அப்ப கச்சா எண்ணெய் மாதிரியே, தங்கத்தின் விலையையும் நிர்ணயிப்பது யார் என்பது தெரிகிறதா?)

விலை 7 சதவீதம் வரை குறையும்...

விலை 7 சதவீதம் வரை குறையும்...

2013ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (ஒரு அவுன்ஸ்= 28.34 கிராம்) அதிகபட்சமாக 1,446 டாலராக இருந்தது. இது அடுத்த ஆண்டு 1,350 டாலராகக் குறையும் என்று சர்வதேச தங்கம், வெள்ளி, பிளாட்டின மதிப்பீட்டு நிறுவனமான GFMS தெரிவித்துள்ளது. அதாவது விலை 7 சதவீதம் வரை குறையும் என்கிறது இந்த நிறுவனம்.

சிரியா மீது அமெரிக்கா ஏதாவது தாக்குதல்...

சிரியா மீது அமெரிக்கா ஏதாவது தாக்குதல்...

ஆனால், அதே நேரத்தில் சிரியா மீது அமெரிக்கா ஏதாவது தாக்குதல் தொடுத்தால் நிலைமை மாறலாம். தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1,500 டாலர் வரை போகலாம்.

மிக அதிக தங்க விலை எப்போ?...

மிக அதிக தங்க விலை எப்போ?...

கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் தங்கத்தின் விலை மிக மிக அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் 1,920.3 டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை தாண்டும் சீனா...

இந்தியாவை தாண்டும் சீனா...

தங்கம் இறக்குமதியில் இந்தியா தான் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், இந்த ஆண்டு அந்த இடத்தை சீனா பிடித்துவிடும் என்கிறது GFMS. இந்த ஆண்டு நம்மை விட சீனா 100 டன் அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்யவுள்ளதாம்.

ரூபாய் மதிப்பு...

ரூபாய் மதிப்பு...

இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் தான். இதற்குத் தான் நமது அன்னிய செலாவணியில் பெரும்பாலான பணம் செலவாகிவிடுகிறது. இதனால் தான் ரூபாய் மதிப்பு சரிகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாடுகள்...

மத்திய அரசின் கட்டுப்பாடுகள்...

இதை சரி கட்ட தங்கம் இறக்குமதிக்கு மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி வரியை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்ததோடு, இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவீதத்தை நகைகளாக மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை குறைஞ்சா என்ன? கூடுனா என்ன?.. வாங்குவது குறையவா போகிறது!

English summary
Gold prices are likely to contract further in 2014, after tumbling for the first time in more than a decade this year with the case for bullion undone by confidence in a stabilising global economy, a metals consultancy said on Thursday. In an update to its Gold Survey 2013, GFMS said the market could beat a retreat below $1,300 towards the end of 2014 as US monetary stimulus is withdrawn, fuelling talk of rising interest rates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X