• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாவம், கடலை விற்றவரையே ஒல்லியாக வைத்த ஞானதேசிகன்!

By A K Khan
|

-ஏ.கே.கான்

ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவரான பின் சத்தியமூர்த்தி பவனுக்கு நிருபர்கள் ரெகுலராக செல்வது அதிகரித்திருக்கிறது. இது நிருபர்களுக்கு ஒதுக்கப்படும் ரெகுலர் பீட் தான். ஆனால், ஞானதேசிகன் 'ஞானப்பழம்' விற்றுக் கொண்டிருந்தபோது அங்கு தினமும் போவதே பெட்ரோல் வேஸ்ட் என்று நிருபர்கள் அவாய்ட் செய்துவிட்டனர். பிரஸ்மீட் என்று கூப்பிட்டால் மட்டுமே சென்றனர். அதுவும் கூட பெரும் போர் அடிக்கும். 'தேஷிய' மொழியில் ஏதேதோ சொல்வார். பல நேரம் தன்னைத் தானே விமர்சித்து சேம் சைட் கோல் வேறு போடுவார்.

இதனால் நிருபர்கள் மட்டுமல்ல, தொண்டர்களும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் வருவது குறைந்து போய், அங்கே சைக்கிளில் வறுத்த கடலை விற்று வந்தவரின் பிஸினஸ் மாடலையே காலி செய்தவர் ஞானதேசிகன்.

Kushbhoo

இப்போது இளங்கோவன் வாயிலேயே பொங்கல் சமைத்து பரிமாறுபவர் என்பவர் தினமும் ஏதாவது ஒரு சிங்கிள் காலம் ஸ்டோியாவாது சத்தியமூர்த்தி பவன் பக்கம் கிடைத்து வருகிறது. இதனால் அங்கு ரெகுலராக செல்ல ஆரம்பித்துள்ளனர் நிருபர்கள். அந்த கடலை விற்பவரை மீண்டும் அந்தப் பக்கம் பார்க்க முடிகிறது. ஆனால், கடந்த 2 வருடத்தில் ரொம்பவே மெலிந்து போய்விட்டார் அந்த மனிதர். பிஸினஸ் அந்த அளவுக்கு அடி. இதற்கு ஞானதேசிகன் பதில் சொல்லியே ஆக வேண்டும்!!.

இப்போது வாசன் தரப்பும் தினமும் ஏதாவது வெடியைப் போட்டு நியூஸ் ஆக்கிக் கொண்டிருக்கும் நிலையில் குஷ்புவின் வரவு காங்கிரசுக்கு ரொம்பவே உதவும்.

வெறுமனே ட்விட்டரில் மட்டுமே ட்வீட்டிக் கொண்டிருக்காமல் குஷ்பு சத்தியமூர்த்தி பவன் பக்கமும் வந்து மற்ற கட்சிகளை பந்தாடினால் காங்கிரசுக்கு புது உத்வேகம் நிச்சயம் கிடைக்கும்.

குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் தமிழக காங்கிரஸ் சார்பில் பேசவாவது குஷ்புவின் வரவு உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் அமெரிக்க நாராயணன் மாதிரியான ஆட்கள் அர்னாப் கோஸ்வாமி மாதிரியானவர்களிடம் வாலன்டியராக வந்து மாட்டி தமிழக காங்கிரசின் மானத்தை வார்ம்ஹோல் வழியாக இன்னொரு கிரகத்துக்கு விண் கப்பலில் ஏற்றி தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாமல் போயிருக்கும்.

இதைப் பார்த்து காங்கிரஸ் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததையும் தடுக்க முடியாமல் போயிருக்கும்.

ஆக, உங்களை கட்சியில் சேர்க்க பல்வேறு காரணங்களில் முக்கிய காரணமான அமெரிக்க நாராயணனுக்கு நன்றி சொல்லி ஒரு ட்வீட் போட்டு விடுங்க குஷ்பு மேடம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Now the TNCC head quarters Satyamoorthi Bhavan is back in the list of one of the regular beats of Journalists, thanks to the new chief EVKS Elangovan. The former chief Gnanadesigan made it sure no story generates from the party and journalists abandon the beat. As actress Kushboo has joined, the party can rescue itself from people like American Narayanan who always scored same side goal in media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more