For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க ஹார்ட்பீட் அதிகமா இருக்கே.. ரிலாக்ஸ்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

பின்னணியில் மிக அழகாய் சுற்றும் நீல பூமி. மிக தூரத்தில் புள்ளியாய் தென்படுகிறது நாஸாவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்கலமான எண்டவர். எண்டவரில் 'பிடித்து' வைக்கப்பட்டுள்ள ஹப்பிள் வானியல் தொலைநோக்கியில் சில பாகங்களை மாற்றுகிறார் விண்வெளி வீரரான டாக்டர் ரயான் ஸ்டோன் (நடிகை சாண்ட்ரா புல்லக்). இந்த ஆபரேசனை விண்கலத்துக்கு வெளியே 'thruster pack' எனப்படும் சிறிய ராக்கெட்டுகள் அடங்கிய உடையுடன், சுற்றியபடி கண்காணித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு விண்வெளி வீரரும் எண்டவரின் கமாண்டருமான மாட் கொவால்ஸ்கி (ஜார்ஜ் க்ளூனி).

முதல் காட்சியிலேயே அசர வைக்கும் இயக்குனர்:

முதல் காட்சியிலேயே அசர வைக்கும் இயக்குனர்:

பூமிக்கு மேலே 350 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பறந்தபடி இந்தப் பணி நடக்கிறது.

3 டியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் இந்த முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை பிரமாண்டத்தில் ஆழ்த்தி, ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்துவிடுகிறார் இந்த 'கிராவிட்டி' படத்தின் இயக்குனர் அல்போன்ஸா க்யூரோன்.

நாமே விண்வெளிக்கு வந்துவிட்டது போன்ற பிரமை:

நாமே விண்வெளிக்கு வந்துவிட்டது போன்ற பிரமை:

விண்வெளியை இதுவரை இல்லாத அளவுக்கு அதன் உண்மையான பிரமாண்டத்துடன், அதன் இயல்பான எடையில்லா தன்மையுடன், ஆழ்ந்த நிசப்தத்துடன் பார்க்கையில் நாமே விண்வெளிக்கு வந்துவிட்டது போன்ற பிரமையிலே ஆழ்த்திவிடுகிறார் அல்போன்ஸா க்யூரோன்.

உங்கள் ஹார்ட்பீட் அதிகமா இருக்கே...

உங்கள் ஹார்ட்பீட் அதிகமா இருக்கே...

தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் கட்டளைகள், ஜார்ஜ் க்ளுனியின் ஜோக்குகள், ''டாக்டர் ரயான் உங்கள் ஹார்ட்பீட் அதிகமாக இருக்கே.. ரிலாக்ஸ்'' என்ற தரைக்கப்பாட்டு மைய டாக்டர்களின் உத்தரவுகள் இடையே, ஹப்பிள் தொலைநோக்கியில் ரிப்பேர்களை சாண்ட்ரா புல்லக் மேற்கொள்கிறார். (இந்தக் காட்சிகளில் 3டியில் லயிக்கும்போது நமது பல்சும் எகிறுவது நிச்சயம்)

ரஷ்யா ஏவும் ஏவுகணை- சிதறும் செயற்கைக் கோள்:

ரஷ்யா ஏவும் ஏவுகணை- சிதறும் செயற்கைக் கோள்:

ரிப்பேர் வேலைகள் அரைகுறையாக இருக்கும் நிலையில், தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அவசர உத்தரவு வருகிறது. விண்ணில் பறந்து கொண்டிருந்த தனது பழைய செயற்கைக் கோள் ஒன்றை ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தகர்த்துள்ளது. (இது போன்ற ஒரு 'வேலையை' 2007ம் ஆண்டு சீனா உண்மையிலேயே செய்தது) அதன் சிதறிய பாகங்கள் பூமியை புல்லட் வேகத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன. இதனால் உடனடியாக ஸ்பேஸ் ஷட்டிலுக்குத் திரும்புங்கள் என்று எச்சரிக்கிறது தரைக்கட்டுப்பாட்டு மையம்.

சிதைந்து போன ஷட்டில் விண்கலம்:

சிதைந்து போன ஷட்டில் விண்கலம்:

க்ளூனியும் புல்லக்கும் ஷட்டிலுக்குள் திரும்பும் முன்பே, அனாயசமாக வேகத்தில் பாயும் ரஷ்ய செயற்கைக் கோள் பாகங்கள் ஷட்டிலை சிதறடித்து விடுகின்றன. உள்ளே இருந்த விண்வெளி வீரர்களும் பலியாகிவிடுகின்றனர்.

இதெல்லாமே ஆழ்ந்த நிசப்தத்தில் நடக்கிறது. வெற்றிடமான விண்வெளியில் ஒலியை ஏந்திச் செல்ல ஏதும் இல்லை. இதனால் எப்போதுமே நிசப்தம் தான்.

வானில் தூக்கி வீசப்படும் புல்லக்:

வானில் தூக்கி வீசப்படும் புல்லக்:

செயற்கைக் கோள் பாகங்கள் தாக்கியதில் வான்வெளியில் வெகு தூரத்தில் தூக்கி வீசப்படும் புல்லக் தான் எங்கிருக்கிறோம் என்பதையே உணர முடியாத அளவுக்கு ஸ்பின் ஆகிறார். அவரைத் தனது thruster pack உதவியோடு வெகு தூரம் தேடிச் சென்று கண்டுபிடித்து, இழுத்து ஷட்டில் விண்கலத்துக்குக் கொண்டு வருகிறார் க்ளூனி.

ஆனால், செயற்கைக் கோள் பாகங்கள் தாக்கியதில் ஷட்டில் விண்கலம் பூமிக்குத் திரும்ப முடியாத அளவுக்கு சிதறிப் போய்விடுகிறது. அதிலிருந்த விண்வெளி வீரர்களும் பலியாகிவிடுகின்றனர்.

சர்வதேச விண்வெளி மையம்:

சர்வதேச விண்வெளி மையம்:

இதையடுத்து இருவருமே அங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (International Space Station -ISS) சென்று அங்கிருக்கும் இரு ரஷ்ய Soyuz விண்கலம் மூலமாக பூமிக்குச் சென்றுவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

சோயுஸ் விண்கலம்:

சோயுஸ் விண்கலம்:

உடைகளில் உள்ள thruster pack ராக்கெடுகள் உதவியோடு இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தை மிகவும் படாதபாடுபட்டு நெருங்க, அங்கேயும் செயற்கைக் கோள் பாகங்கள் தாக்கி, அதுவும் சேதமாகிக் கிடக்கிறது. அதிலிருந்த ஒரு Soyuz விண்கலத்தை பயன்படுத்தி, விண்வெளி மையத்தில் இருந்த வீரர்கள் பூமிக்கு தப்பிவிடுகின்றனர். ஒன்னு போனால் என்ன, இன்னொரு Soyuz விண்கலம் இருக்கே என்று இருவரும் அதை நெருங்க.. அதன் பாராசூட் விரிந்துபோய் செயல்பட முடியாத அளவுக்கு கந்தலாகிக் கிடக்கிறது Soyuz.

சீன விண்வெளி மையம்:

சீன விண்வெளி மையம்:

அடுத்து ஒரே வழி இன்னொரு 100 கி.மீ. தூரத்தில் இருக்கும் சீன விண்வெளி மையமான டியான்காங் தான். அங்கே போய்விடலாம் என இருவரும் முடிவெடுக்கும் நிலையில், பாராசூட்டின் கயிறுகளில் சிக்கிக் கொள்கிறார் புல்லக். அவரைக் காப்பாற்ற க்ளூனி முயல, கடைசியில் புல்லக்கைக் காப்பாற்றுவதற்காக தன்னை விடுவித்துக் கொண்டு விண்வெளியிலேயே தன்னை பலியிட்டுக் கொள்கிறார் க்ளூனி.

தற்கொலைக்கு முயலும் விண்வெளி வீராங்கனை:

தற்கொலைக்கு முயலும் விண்வெளி வீராங்கனை:

சோயுஸ் விண்கலத்துக்குள் புகும் புல்லக் 100 கி.மீ. தூரத்தில் இருக்கும் டியான்காங் விண்வெளி மையத்துக்கு செல்ல அதை பயன்படுத்த முயல.. அதில் எரிபொருளே இல்லை என்று தெரியவரே, தற்கொலைக்கு முயல்கிறார்.

ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து மயக்கத்திலேயே பலியாகிவிட புல்லக் முயற்சிக்கிறார். அடுத்து அவர் என்ன ஆனார்.. தப்பித்தாரா அல்லது விண்வெளியிலேயே சமாதி ஆனாரா என்பதையாவது படத்தில் போய் பாருங்கள்.

இவ்வளவு கதையை சொல்லனுமா?:

இவ்வளவு கதையை சொல்லனுமா?:

எனக்கு இவ்வளவு தூரம் கூட கதையை சொல்ல விருப்பம் இல்லை தான். ஆனால், மிக டெக்னிகலான விண்வெளித் தொழில்நுட்பங்கள் நிறைந்த கதைக்களம் என்பதால் இதையெல்லாம் சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது.

உண்மையான ஹீரோக்கள்:

உண்மையான ஹீரோக்கள்:

அழகாய் சுற்றும் பூமி, 45 நிமிடங்களுக்கு ஒரு முறை தோன்றி மறையும் சூரியன், ஹப்பிள் டெலஸ்கோப் (ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி குறித்த மேலும் விவரங்களுக்கு) எண்டவர் விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி மையம், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம், சீனாவின் டியான்காங் விண்வெளி மையம் ஆகியவை தான் படத்தின் உண்மையான ஹீரோக்கள்.

45 நிமிடத்துக்கு ஒரு முறை இரவு- 45 நிமிடத்துக்கு ஒரு முறை பகல்:

45 நிமிடத்துக்கு ஒரு முறை இரவு- 45 நிமிடத்துக்கு ஒரு முறை பகல்:

உண்மையில், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது சர்வதேச விண்வெளி மையம். இதனால் அங்கே 45 நிமிடங்களுக்கு பகல், 45 நிமிடங்களுக்கு இரவு. இதனால் 90 நிமிடங்களில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்க்கின்றனர் விண்வெளி வீரர்கள். கீழே 45 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியின் இரவுப் பகுதியும், 45 நிமிடங்கள் பூமியின் பகல் பகுதியும் தெரிகிறது.

இதில் விண்வெளியையும் பூமியையும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தத்ரூமாகக் காட்டி அசரடிக்கிறார் அல்போன்ஸா க்யூரோன்.

எல்லாமே விண்வெளி தான்....

எல்லாமே விண்வெளி தான்....

காட்சிகள் முழுக்கவே எடையில்லா நிலையில் மிதக்கின்றனர் க்ளூனியும், சாண்ட்ரா புல்லக்கும். விண்வெளி ஹெல்மட்டுக்குள் அவர்களது முகங்கள், அந்த ஹெல்மட்டில் எதிரொலிக்கும் நீல பூமி, சூரியன், விண்வெளி கலன்கள், கருவிகள்... என படத்தில் எல்லாமே விண்வெளி தான்.

ஹப்பிள் டெலஸ்கோப், எண்டவர் விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி மையம், ரஷ்ய விண்வெளி மையம், சோயுஸ் விண்கலம், சீனாவின் டியான்காங் விண்வெளி மையம், Shenzhou விண்கலம் ஆகியவற்றையும், அதன் உள் கட்டமைப்பு மற்றும் ஆயிரக்கணக்கான கருவிகளை அளவிலும் நேர்த்தியிலும் மிகத் துல்லியமான காட்டியிருக்கிறார் அல்போன்ஸா க்யூரோன்.

சொல்வது நானில்லை...

சொல்வது நானில்லை...

இதை நான் சொல்லவில்லை. உண்மையிலேயே விண்வெளிக்குச் சென்று வந்த நாஸாவின் விண்வெளி வீரரான Garrett Reisman தான் கூறியிருக்கிறார்.

இப்போதெல்லாம் அவருக்கு வரும் மெயில்கள், போன்கள் எல்லாமே கிராவிட்டி படம் பற்றியதாகவே இருக்கிறதாம்.. படத்தில் ஹீரோயிசம், ஹீரோயினிசத்துக்காக சில ஓவர் ஆக்ஷன் காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தாலும் படம் கிட்டத்தட்ட உண்மையான விண்வெளி சூழலுடன் தான் ஒத்துப் போகிறது என்கிறார். (படம் குறித்த இவரது கட்டுரை)

இந்த லிங்குகளுக்கு போய் பாருங்களேன்...

இந்த லிங்குகளுக்கு போய் பாருங்களேன்...

பூமிக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வரும் லைவ் ரிலேவை பார்க்க ஆசையா.. இங்கே க்ளிக் செய்க..

இப்போது சர்வதேச விண்வெளி மையம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்க..

உங்கள் செல்போனில் கூட சர்வதேச விண்வெளி மையத்தை ட்ராக் செய்ய அப்ளிகேசன்கள் வந்துவிட்டன. அவை இதோ

இந்த லிங்க்குகள் தான் வழக்கமாக என் உபரி நேரத்து பொழுது போக்குகள்.

இது கொசுரு.....

இது கொசுரு.....

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் நேற்று வரை சுமார் ரூ. 15,000 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது!

இந்தப் படத்தின் டிரைலரைக் காண

English summary
Impressive 3D, breathtaking action, and strong performances by Bullock and Clooney make "Gravity" a space survival thriller well worth checking out on the big screen. It is a great film well worth checking out, especially in 3D in theaters. I think some of the hype is a tad overblown, but there is no doubt that this is a satisfying film and yet another great space drama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X