• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகோ ஏன் போனை கட் பண்ணினாரு!

By A K Khan
|

-ஏ.கே.கான்

மோடி அலை என்பது உண்மையோ பொய்யோ, தமிழக அரசியலில் 'விஜய்காந்த் எபெக்ட்' என்ற ஒரு புதிய தேர்தல் விதி திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளை ரொம்பவே கஷ்டப்படுத்தி வருகிறது. அந்த விதி கிட்டத்தட்ட இது தான்.

"Not only is the politics stranger than we imagine - it is stranger than we can imagine."

இதை மனதில் வைத்துக் கொண்டு அப்படியே பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்குள் ஒரு கற்பனை உலா போவோம்.

'அவள் வருவாளா, அவள் வருவாளா''..:

'அவள் வருவாளா, அவள் வருவாளா''..:

அங்கே ரிஷப்சனில் உள்ள டிவியில், ''அவள் வருவாளா, அவள் வருவாளா.. என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம்...''- என்று சன் மியூசிக்கில் இந்தப் பாடலுக்கு சூர்யா உருகிக் கொண்டிருக்க.. அருகே உள்ள கான்பரன்ஸ் ரூமில் தமிழக பாஜக தலைவர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பிஸி.

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!:

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!:

அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்.. இதோ (இது முழுக்க முழுக்க கற்பனை தாங்க!)

இல.கணேசன்: இந்த விஜய்காந்த் என்ன தான் சொல்றார்?

எச்.ராஜா: அவர் உளுந்தூர்பேட்டையில தானே சொல்றேன்னு சொல்லியிருக்காரு.. நாம பொறுமையா தான் இருக்கனும்

பொன்.ராதாகிருஷ்ணன்: ஹலோ, அந்த மாநாடு முடிஞ்சு 2 வாரம் ஆச்சுங்க...

அப்படியா?..:

அப்படியா?..:

எச்.ராஜா: அப்படியா?.. நான் பெரியார திட்றதுல பிஸியா இருந்துட்டேன் அதான் இந்த மேட்டர் மிஸ் ஆகி போச்சு...

நிர்மலா சீதாராமன்: The whole nation is rallying behind Modiji, so it is high time Vijaykanth must understand the ground realty, and...

யெஸ், யெஸ்.. மறந்துட்டேன்:

யெஸ், யெஸ்.. மறந்துட்டேன்:

இல.கணேசன்: மேடம்.. இது கட்சி ஆலோசனை கூட்டம். டைம்ஸ் நவ் டிவி debate இல்ல.. அது சாயந்தரம் தான்

நிர்மலா சீதாராமன்: யெஸ், யெஸ்.. மறந்துட்டேன்

சுப்பிரமணிய சாமி வரார்.. சுப்பிரமணிய சாமி வரார்..:

சுப்பிரமணிய சாமி வரார்.. சுப்பிரமணிய சாமி வரார்..:

ஆபிஸ் பையன்: சுப்பிரமணிய சாமி வந்துட்டு இருக்கார் சார்..

அனைவரும் ஒருமித்த குரலில்: நம்ம கட்சி ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லித்தானே அவரை கட்சியில சேர்த்தோம். இப்போ எதுக்கு இங்க வர்றாறு

சு.சாமி: எனக்கு எந்த தொகுதின்னு டிசைட் பண்ணிட்டேளா?

லண்டன்ல 2, நியூயார்க்ல ஒன்னு:

லண்டன்ல 2, நியூயார்க்ல ஒன்னு:

இல.கணேசன்: உங்களுக்கு லண்டன்ல 2 தொகுதி, நியூயார்க்ல ஒரு தொகுதி ஒதுக்கியிருக்கோம். அதுல உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம்

சு.சாமி: அங்கயும் எனக்கு செல்வாக்கு இருக்குறது உண்மை தான். ஆனா, இந்த முறை நான் மதுரையில போட்டி போடலாம்னு இருக்கேன்

கூட்டணில வைகோ இருக்கார்:

கூட்டணில வைகோ இருக்கார்:

எச்.ராஜா: இந்த பெரியார்... இருக்காரே...

பொன்.ராதாகிருஷ்ணன்: கொஞ்சம் சும்மா இருக்கீங்களா. நம்ம கூட்டணில வைகோ இருக்கார். அவர் பெரியாரோட பழைய தொண்டர். அவரையும் கூட்டணிய விட்டு விரட்டிடலாம்னு முடிவு பண்ணீட்டிங்களா?

சு.சாமி: புலிகள ஆதரிக்கிற வைகோ கூட கூட்டணி சேந்தேள் இல்லையோ.. நமக்கு தோல்வி தான்.

உங்களுக்கு எல்லாமே மறந்து போச்சு:

உங்களுக்கு எல்லாமே மறந்து போச்சு:

இல.கணேசன்: இது தேர்தலுங்க. அவரும் இல்லாம நாம என்ன பண்ண முடியும்?. உங்கள மட்டும் வச்சுக்கிட்டு சிஎன்என்-ஐபின் டிவில வேணும்னா உதார் விடலாம். தேர்தல்னா மக்கள் ஓட்டு போடுறது... நீங்கள் தேர்தல்ல நின்னு பல வருஷமாயிருச்சு.. அதனால எல்லாமே மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்.

புலிகளே இல்லையே, அப்புறம் பூனை எதுக்கு?

புலிகளே இல்லையே, அப்புறம் பூனை எதுக்கு?

ஆபிஸ் பையன் (மைன்ட் வாய்சில்): ஆமா, இப்போ தான் புலிகளே இல்லையே. இந்த சுப்பிரமணிய சாமிக்கு எதுக்கு பூனை படை?

சு.சாமி: சரி நான் கிளம்புறேன். டெல்லியிலே பேசிட்டு என் தொகுதிய புக் பண்ணிக்கிறேன். நல்லா தேர்தல் வேலை பாருங்கோ..

எவ்வளவு டார்ச்சர்!:

எவ்வளவு டார்ச்சர்!:

பொன்.ராதாகிருஷ்ணன்: சரி, ராமதாஸ்கிட்ட பேசுனதுல ஏதாவது லேட்டஸ்ட் தகவல் இருக்கா?

இல.கணேசன்: அவரு தேர்தல் முடிஞ்ச பிறகு தொகுதி உடன்பாடு பத்தி பேசிக்கலாம்னு சொல்லி அனுப்பி இருக்கார்.. எவ்வளவு டார்ச்சர் பண்றாங்க..

போன் லைனில் வைகோ:

போன் லைனில் வைகோ:

மறுபடியும் ஆபீஸ் பையன்: சார் வைகோ போன் லைன்ல இருக்கார்

பொன்.ராதாகிருஷ்ணன்: என்னவாம்?

ஆபீஸ் பையன்: அவருக்கு 10 தொகுதிகள் வேணுமாம்.

முடியாது, முடியாது, முடியாது:

முடியாது, முடியாது, முடியாது:

இல.கணேசன்: அது முடியாதுன்னு சொல்லிருங்க. விஜய்காந்தும் வரல, ராமதாசும் வரல. அதனால 10 தொகுதிகள் எல்லாம் சரியா வராது. பாண்டிச்சேரியையும் சேர்த்து 30 தொகுதிகளையும் மதிமுக எடுத்துக்கிட்டா கூட்டணில இருக்கலாம். இல்லாட்டி போகச் சொல்லுங்க.

பொன்.ராதாகிருஷ்ணன்: நீங்க சொல்றது தான் ரொம்ப கரெக்ட். நாமளும் எவ்வளவு தான் விட்டுக் குடுத்தே போறது

வைகோ என்ன சொன்னாரு..:

வைகோ என்ன சொன்னாரு..:

ஆபீஸ் பையன்: சார். வைகோகிட்ட சொல்லிட்டேன்

எச்.ராஜா: அவரு என்ன சொன்னாரு..

ஆபீஸ் பையன்: ரொம்ப கோவமாகி போனை கட் பண்ணிட்டாரு...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
A imagenary discussion of present status of Tamil Nadu politics with Vijaykanth and BJP in focus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more