» 
தேர்தல்கள்
தேர்தல் 2024

கர்நாடகாவில் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வரும் மே 24 ஆம் தேதியுடன் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் மே 24 ஆம் தேதிக்கு முன்பாக சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் தேதியை இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையிலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஜூரம் தொற்றிக்கொண்டுள்ளது. தங்கள் கட்சியை களத்தில் வலுப்படுத்தவும் வெற்றிக்கான வியூகத்தை வகுக்கவும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.

கர்நாடகாவில் கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை கிட்டவில்லை. இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஜேடிஎஸ் - காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை 2013 ஆம் ஆண்டு தேர்தலை விட நல்ல பெர்பார்மன்சை செய்து இருந்தது. அதாவது 2018 ஆம் ஆண்டு தேர்தலில் 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

எச்.டி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவின் ஆட்சியை பாஜக ஆட்சி அமைத்தது. எடியூராப்பா தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து பசவராஜ் பொம்மையை பாஜக முதல்வர் பதவியில் அமரவைத்தது.

விரைவில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போது மும்முனை போட்டி நிலவ உள்ளது. பாஜக, ஜேடிஎஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. லிங்காயத் சமூக வாக்குகள், வளர்ச்சி, ஊழல், திருப்தி படுத்தும் அரசியல் உள்ளிட்ட காரணிகளுக்கு மத்தியில் மும்முனை போட்டி நிலவுகிறது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் படி, பாஜகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துவாக இருந்தது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு கிடைத்து இருப்பதும் ஜேடிஎஸ் கட்சியும் தனது கரத்தை வலுப்படுத்தும் என்றும் கணிப்புகள் கூறியிருந்தன. கர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருமா? அல்லது காங்கிரஸ் கட்சியின் கைகளில் மாநிலம் செல்லுமா? ..ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவெடுக்குமா? என்பன உள்ளிட்ட கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்...

மேலும் படிக்க
வரவிருக்கும் தேர்தல்கள்
ஓட்டுப்பதிவு: Yet to be announced
ஓட்டு எண்ணிக்கை: Yet to be announced
நாடாளுமன்றத் தொகுதிகள்: 543
ஆளுங்கட்சி: பாரதிய ஜனதா கட்சி(BJP)
2019 நாடாளுமன்ற தேர்தல்

272 to win

543
353
92
13
83
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆளுங்கட்சி பாரதிய ஜனதா கட்சி (பாஜக)
  • என்டிஏ கூட்டணி - 353
  • யூபிஏ கூட்டணி - 92
  • SP + BSP - 13
  • மற்றவர்கள் - 83
மாநில வாரியாக தேர்தல் முடிவுகள்
முந்தைய தேர்தல் முடிவுகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X