For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் போர் விமானத்தை தைவான் தாக்கவில்லை.. பொய்யான செய்தி.. மறுப்பு தெரிவித்த சீனா.. பின்னணி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் சுகோய் 35 போர் விமானத்தை தைவான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக வெளியான செய்தியை சீனா மறுத்துள்ளது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் லடாக்கில் மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது, தைவான் உடனும் சீனா மோதி வருகிறது. சீனாவிற்கு கிழக்கு பக்கத்தில் தென் சீன கடல் எல்லையில் இருக்கும் குட்டி தீவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

ஆனால் 1940களில் நடந்த சிவில் வார், அதன்பின் நடந்த சுதந்திர போராட்டங்களை தொடர்ந்து, தைவான் தங்களை சுதந்திர நாடு என்று அறிவித்து உள்ளது. தைவான் தனி நாடாக இருந்தாலும், சீனா அங்கு மறைமுகமாக ஏதாவது ஒரு வகையில் அழுத்தம் செலுத்தியே வருகிறது.

ஒரு பக்கம் சீனா.. மறுபக்கம் பாகிஸ்தான்.. எதற்கும் இந்தியா தயார்.. முப்படைகளும் ரெடி.. பிபின் ராவத்ஒரு பக்கம் சீனா.. மறுபக்கம் பாகிஸ்தான்.. எதற்கும் இந்தியா தயார்.. முப்படைகளும் ரெடி.. பிபின் ராவத்

ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள்

முக்கியமாக தைவானில் இருக்கும் முக்கியமான பல அரசியல் தலைவர்கள் சீனாவிற்கு ஆதரவானவர்கள். தைவானில் இருக்கும் 20% சீனர்கள் அங்கு முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இதனால் தைவான் நாட்டில் தொடர்ந்து உள்நாட்டு அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. எப்படியாவது தைவானை சீனாவுடன் முழுமையாக இணைக்க அதிபர் ஜிங்பிங் முயன்று வருகிறார்.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

இந்த நிலையில்தான் தைவான் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது. தைவான் நாட்டின் ராணுவத்திற்கு ஆயுதங்கள், விமானங்கள், ஏவுகணைகளை வழங்கி அமெரிக்கா உதவி வருகிறது. அதேபோல் தைவானுக்கு ஆதரவாக தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா போர் கப்பல்களையும் இறக்கி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் மோதல் நடக்கவும் தைவான் முக்கிய காரணம் ஆகும்.

போர் விமானம்

போர் விமானம்

இந்த நிலையில், சீனாவின் போர் விமானத்தை தைவான் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி வந்தது. தைவான் எல்லைக்குள் நுழைத்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று இணையத்தில்தகவல்கள் வெளியாகி வந்தது. இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் வைரலானது. சீனாவின் சுகோய் 35 விமானத்தை தைவானில் இருக்கும் அமெரிக்காவின் ஏர் டிபன்ஸ் சிஸ்டம் சுட்டு வீழ்த்தியதாக இதில் கூறப்பட்டது.

அமெரிக்கா வந்தது எப்படி

அமெரிக்கா வந்தது எப்படி

இதை தற்போது சீனா மறுத்துள்ளது.சீனாவின் சுகோய் 35 போர் விமானத்தை தைவான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக வெளியான செய்தியை சீனா மறுத்துள்ளது.எங்கள் விமானம் எதையும் தைவான் சுட்டு வீழ்த்தவில்லை. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று சீனா கூறியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

சீனாவின் சுகோய் 35 போர் விமானத்தை தைவான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக வெளியான செய்தி.

முடிவு

சீனா இந்த செய்தியை மறுத்துள்ளது. தங்கள் விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று சீனா கூறியுள்ளது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Unconfirmed Reports says that Taiwan shoots down China's warplane using an air defense system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X