For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாடுவாழ் இந்தியர்களே உஷார்.. வலையில் வீழ்த்த வைரலாக சுற்றும் 'லிங்க்'

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில், சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக 'RESCUE FLIGHTS FROM INDIA' என்ற தலைப்பில் கூகுள் படிவங்களுக்கான இணைப்புகளுடன் பரவி வரும் வாட்ஸ்அப் செய்தி போலியானது, நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Recommended Video

    Fake rescue forms for Indians stranded abroad

    கொரோனா வைரஸ் பிரச்சினையால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான மிகப்பெரிய வெளியேற்றத் திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே போலி விண்ணப்ப படிவம் வைரலாகத் தொடங்கியது.

    Beware of these fake rescue forms for Indians stranded abroad

    இதுபோன்ற எந்தவொரு படிவத்தையும் இந்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். அதிகாரப்பூர்வ தூதரக வலைத்தளத்தின் மூலம் மட்டுமே, பதிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800 இந்தியர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு மே 7 முதல் 13ம் தேதி வரை 64 விமானங்களை இயக்க வாய்ப்புள்ளது.

    மதுபான கடை உட்பட.. அத்தியாவசியமற்ற கடைகளை உடனே மூடுங்க.. மும்பை மாநகராட்சி போட்ட பெரிய யூ டர்ன்மதுபான கடை உட்பட.. அத்தியாவசியமற்ற கடைகளை உடனே மூடுங்க.. மும்பை மாநகராட்சி போட்ட பெரிய யூ டர்ன்

    ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமான் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த இந்தியர்களை திருப்பி அனுப்ப இந்த சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    The Indian government on Tuesday warned against a whatsapp message that is circulating with links to Google Forms titled 'RESCUE FLIGHTS FROM INDIA', for stranded Indians.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X