For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா? ராணுவம் திட்டவட்ட மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவல்களை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Recommended Video

    கொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்

    கொரோனாவை முன்வைத்து ஏராளமான பொய் செய்திகள் வலம் வருகின்றன. இதில் ஒன்றுதான் தற்போதைய லாக்டவுனை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்படும் என்கிற தகவலும்.

    Coronavirus: Fake messages on social media about likely declaration of emergency- Army

    அதுவும் ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படுமாம்; ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ். பிரிவினரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த சமூக வலைதள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவ தகவல் தொடர்பு கூடுதல் இயக்குநரகம் கூறுகையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது பொய்யான செய்தி என திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற ஹேஷ்டேகுகளை சிலர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Additional Directorate General of Public Information, Indian Army Monday said that malicious messages circulating on social media about likely declaration of emergency in mid April and employment of Indian Army, Veterans, NCC and NSS to assist the civil administration were fake.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X