For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 கட்ட எக்சிட் பிளான்.. கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு புதிய திட்டமா.. உண்மை பின்னணி என்ன?

இந்தியாவில் கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு ஐந்து கட்ட எக்சிட் பிளானை வகுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு ஐந்து கட்ட எக்சிட் பிளானை வகுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக தற்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

கொரோனா தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுக்க ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் 3.0 வரும் மே 17ம் தேதி முடிவிற்கு வருகிறது. இந்த மே 17ம் தேதிக்கு பின் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்தார். இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி இதுகுறித்து அறிவிப்பு வெளியிடுவார்.

டெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா? உண்மை என்ன? டெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா? உண்மை என்ன?

எக்சிட் பிளான் என்றால் என்ன

எக்சிட் பிளான் என்றால் என்ன

பொதுவாக ஊரடங்கு பெரிய அளவில் பிறப்பிக்கப்படும் போது அதற்கான எக்சிட் பிளான் இறுதி கட்டத்தில் வகுக்கப்படும். அதாவது ஊரடங்கை எப்படி நீக்குவது என்பதுதான் எக்சிட் பிளான். ஊரடங்கை மொத்தமாக ஒரே நாளில் நீக்க முடியாது. அப்படி செய்தால் மக்கள் மொத்தமாக வெளியே வருவார்கள். அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கை நீக்க வேண்டும்.

ஐந்து கட்டம் எப்படி

ஐந்து கட்டம் எப்படி

இப்படி படிப்படியாக ஊரடங்கை நீக்குவதுதான் எக்சிட் பிளான். இந்தியாவில் கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு ஐந்து கட்ட எக்சிட் பிளானை வகுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி கொரோனா லாக்டவுனை நீக்க முதல் கட்டமாக மே 18ம் தேதி கொஞ்சம் தளர்வுகள் அமலாகும். அடுத்தகட்டமாக ஜூன் 8ம் தேதி கொஞ்சம் தளர்வுகள் அமலாகும். பின் ஜூன் 29 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகள் தளர்வுகள் அமலாகும். பின் ஆகஸ்ட் 10ல் முழு தளர்வு அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் ஆனால்

கொரோனா அதிகம் ஆனால்

இடையில் கொரோனா அதிகரித்தால் மீண்டும் முந்தய கட்டத்திற்கு இந்தியா சென்றுவிடும் என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் மத்திய அரசு சார்பாக இது தொடர்பாக தற்போது விளக்கம் அளிக்கப்ட்டது. அதன்படி மத்திய அரசிடம் அப்படி ஐந்து கட்ட பிளான் எதுவும் இல்லை. இணையத்தில் இப்படி வெளியாகும் செய்திகள் பொய்யானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பொய்யான செய்தி

பொய்யான செய்தி

இந்த செய்தி பொய்யானது. வேறு நாட்டில் இப்படி அறிவிக்கப்பட்டு இருக்கலாம். இந்தியாவில் இப்படி எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் ஊரடங்கை நீக்குவது தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பார். இப்போது எங்களிடம் அது தொடர்பாக எதுவும் திட்டம் இல்லை. அதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். இது தொடர்பாக விரிவான விளக்கம் உள்துறை அமைச்சகம் மூலம் அளிக்கப்படும்.

English summary
Coronavirus: Indian doesn't have any phase exit plan for Lockdown , Do fall for fake news .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X