For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா சோதனை.. தெர்மல் சோதனை கருவிகள் மூலம் தோல் பாதிப்புகள் ஏற்படுமா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அறிகுறி சோதனைக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தெர்மல் சோதனை கருவிகள் காரணமாக தோல் பாதிப்புகள் ஏற்படலாம் என்று பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

கொரோனா காரணமாக நாடு முழுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிக உடல் வெப்பநிலை, மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறியை கண்டுபிடிக்க நிறைய கருவிகள் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது. டெம்பரேச்சர் கன் போன்ற தெர்மல் சோதனை கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற உடல் ஆக்சிஜன் அளவிடும் கருவிகளும் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

Coronavirus: No temperature guns wont give skin diseases to people

இந்த நிலையில், கொரோனா அறிகுறி சோதனைக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் டெம்பரேச்சர் கன் எனப்படும் தெர்மல் சோதனை கருவிகள் காரணமாக தோல் பாதிப்புகள் ஏற்படலாம் என்று பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும்.

இந்த கருவி அகச்சிவப்பு கதிர்கள் மூலம் உடல் வெப்பநிலையை கணக்கிடுகிறது. இதில் இருக்கும் லென்ஸ் ஒன்று நெற்றியில் ஒளியை செலுத்தி, அதன் மூலம் குறிப்பிட்ட இடத்தை குறி வைக்கும். பொதுவாக நெற்றியில் இப்படி குறி வைக்கப்படும். பின் நெற்றியில் இருந்து வெளியாகும் அகச்சிவப்பு கதிர்களை கணக்கிட்டு, அதன் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்று இந்த தெர்மல் கன் கண்டுபிடிக்கும்.

எங்கள் போர் விமானத்தை தைவான் தாக்கவில்லை.. பொய்யான செய்தி.. மறுப்பு தெரிவித்த சீனா.. பின்னணி!எங்கள் போர் விமானத்தை தைவான் தாக்கவில்லை.. பொய்யான செய்தி.. மறுப்பு தெரிவித்த சீனா.. பின்னணி!

ஆனால் இதனை மூலமாக தோல் பிரச்சனைகள், உடலில் கெமிக்கல் பிரச்சனைகள் வரும் என்று பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இந்த கருவி எந்த விதமான கதிரையும் உடலின் உள்ளே செலுத்துவது கிடையாது. குறி வைக்க மட்டுமே லேசர் ஒளி பயன்படுத்தப்படும். இது உடல் வெளியிடும் அகச்சிவப்பு கதிர்களை மட்டுமே இது கணக்கிடும். இதனால் இந்த கருவிகள் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இது உடலுக்கு சிறிய தீங்கை கூட விளைவிக்காது. ஆகவே இது தொடர்பாக வெளியாகும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

Fact Check

வெளியான செய்தி

கொரோனா அறிகுறி சோதனைக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தெர்மல் சோதனை கருவிகள் காரணமாக தோல் பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்.

முடிவு

தெர்மல் சோதனை கருவிகள் காரணமாக தோல் பாதிப்புகள் உள்ளிட்ட எந்த உடல் பாதிப்பும் ஏற்படாது. இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Coronavirus: No temperature guns won't give skin diseases to people, don't fall for fake news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X