For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெர்மாமீட்டரை பயன்படுத்துவது மூளையில் உள்ள பினியல் சுரப்பியை சேதப்படுத்துகிறதா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

பாரிஸ்: ஒருவரின் வெப்பநிலையை கண்டறிய பயன்படுத்தப்படும் அகச்சிவப்பு வெப்பமானியை தலைக்கு அருகில் எடுத்துக்கொள்வது மூளையில் அமைந்துள்ள பினியல் சுரப்பியை சேதப்படுத்தும் என்று பேஸ்புக் புதிவு பலரால் பகிரப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இது தவறான பதிவு ஆகும்.

fack check: Does Using Temperature Gun Damage The Pineal Gland In The Brain?

பேஸ்புக்கில் வந்த பதிவு

ஜூலை 25, 2020 முதல் ஒரு பேஸ்புக் பதிவினை பெயரிடப்படாத ஆஸ்திரேலிய செவிலியர் எழுதியதாகக் கூறப்படுகிறது. இதை 2,000 க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.அந்த பதிவில் அவர் அகச்சிவப்பு வெப்பமானி துப்பாக்கிகளின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறார். "பினியல் சுரப்பியில் அகச்சிவப்பு கதிர் மூலம் தலையில் பிரச்சனை ஏற்படும் என்று கூறினார். புற்றுநோய் அல்லது நரம்பியலில் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்

பள்ளி, கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் செய்தி உண்மையா?பள்ளி, கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் செய்தி உண்மையா?

மருத்துவர்கள் சொல்வது என்ன

பிரான்சின் இன்செர்ம் இன்ஸ்டிடியூட்டின் நரம்பியல் விஞ்ஞான ஆராய்ச்சியாளரான கேப்ரியல் ஜிரார்டியோ இதுபற்றி கூறுகையில், முற்றிலும் தவறான பதிவு. "வெப்பமானி மூலம் வெப்பத்தை சோதிப்பதால் மூளைக்கு சேதம் ஏற்படும் என்பதில் துளியும் உண்மை இல்லை. வெப்பமானி அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுவதில்லை, ஆனால் உடலில் இருந்து அலைநீளங்களைப் பிடிக்கிறது. தெர்மோமீட்டர் ஒரு சென்சார் மீது லென்ஸ் மூலம் மனித உடலால் வெளிப்படும் அகச்சிவப்பு நிறமாலை அல்லது கதிர்வீச்சைப் பிடிக்கிறது. பெறப்பட்ட கதிர்வீச்சின் அலைநீளங்களைப் பொறுத்து, இது அதிக அல்லது குறைந்த வெப்பநிலையைக் காட்டுகிறது. இந்த ஒளி மிகவும் "பலவீனமாக உள்ளது. வெப்பமானியின் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. அவர்கள் கூறும் புகார்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை" என்றார்.

உண்மை சோதனை

முற்றிலும் தவறான பதிவு என்பது மருத்துவர்களின் தகவலில் உறுதியாகி உள்ளது. எனவே அதிகம் பேர் ஷேர் செய்துள்ளதால் மட்டுமே ஒரு விஷயம் உண்மை என்று நம்பி விட வேண்டாம்.

Fact Check

வெளியான செய்தி

தெர்மாமீட்டரை பயன்படுத்துவது மூளையில் உள்ள பினியல் சுரப்பியை சேதப்படுத்துகிறது.

முடிவு

பிரான்சின் இன்செர்ம் இன்ஸ்டிடியூட்டின் நரம்பியல் விஞ்ஞான ஆராய்ச்சியாளரான கேப்ரியல் ஜிரார்டியோ பேட்டியின் படி வெப்பமானி மூலம் வெப்பத்தை சோதிப்பதால் மூளைக்கு சேதம் ஏற்படும் என்பதில் துளியும் உண்மை இல்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A Facebook post shared thousands of times claims that taking a person's temperature with an infrared thermometer near their head risks damaging the pineal gland, which is located in the brain. This is false, said neuroscience experts, who explained that this type of thermometer does not emit infrared radiation but captures wavelengths from the body
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X