For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fact Check: கர்நாடகாவின் ஹூப்ளியில் பயங்கரவாதி பிடிபட்டதாக வெளியான செய்தி உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகாவின் ஹூப்ளியில் பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ஹூப்ளி பேருந்து நிலையத்தில் பயங்கரவாதி ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்; அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதை பலரும் செல்போனில் படம்பிடித்தனர் என ஒரு படமும் தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Fact Check: A terrorist caught at Hubbali?

ஹூப்ளி பேருந்து நிலையத்தில் பயங்கரவாதி கைது செய்யப்படுகிற வீடியோ காட்சியும் ஷேர் செய்யப்படுகிறது. இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தளம் ஆய்வு செய்தது.

அப்போது, ஹூப்ளி பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். அப்போதுதான் இந்த படமும் வீடியோவும் எடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதியன்று ஹூப்ளி- தார்வாட் போலீசார் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். இது ஹூப்ளி டைம்ஸ் என உள்ளூர் நாளேட்டில் செய்தியாகவும் வந்துள்ளது.

சூப்பர்.. சூப்பர்.. "கோவிஷீல்டு" தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 பேருமே நல்லா இருக்காங்களாம்.. புனே ஆஸ்பத்திரி தகவல்

இதேபோன்ற ஒத்திகை நிகழ்ச்சி, விமான நிலையத்திலும் நடத்தப்பட்டது. இதனைத்தான் ஹூப்ளியில் பயங்கரவாதி சிக்கியதாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

ஹூப்ளியில் பயங்கரவாதி கைது

முடிவு

போலீசார் நடத்திய தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A video with the title terrorist at Hubli bus stand Karnataka, has gone viral on the social media. But this video is not correct.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X