For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேஷ்டி அணிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...இந்தி தெரியாது போடா...டி சர்ட் அணிந்தாரா?

Google Oneindia Tamil News

டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தமிழ் பிடித்தமான மொழி. ஆனால், அவர் இந்திக்கு எதிரானவரா, ''இந்தி தெரியாது போடா'' என்ற டி சர்ட்டை அணிந்து விளம்பரம் செய்தாரா. உண்மை என்னவென்று பார்ப்போம்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சக பெண் எம்பி ஒருவருடன் கையில் டி சர்ட் ஒன்று பிடித்துக் கொண்டும், டி சர்ட் அணிந்தும் விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த டி சர்ட்டில் ''இந்தி தெரியாது போடா'' என்ற வாசகம் உள்ளது. மேலும் ஒரு படத்தில் அவர் இந்தி தெரியாது போடா டி சர்ட்டை அணிந்து இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Fact Check: Did Canada PM Justin Trudeau really supports Tamil Nadus protest Against Hindi Imposition?

இது உண்மைதானா என்று அறிய முயற்சித்தபோது, அது போலி என்பது தெரிய வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டில் அவரே கையில் ஒரு டி சர்ட் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில் ''Vaccines are safe, and save lives. Love this Shirt, thanks!!''என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், ''இந்தி தெரியாது போடா'' என்ற வாசகம் கொண்ட டி சர்ட்டை விளம்பரம் செய்ததாக சமூக வலைதளங்களில் போலி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Fact Check: Did Canada PM Justin Trudeau really supports Tamil Nadus protest Against Hindi Imposition?

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் ''இந்தி தெரியாது போடா'' , ''தமிழ் பேசும் இந்தியன்'' என்ற வாசகங்கள் அடங்கிய டி சர்ட்களை அணிந்து இருந்தனர். இது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பின்னணியில் திமுக எம்பி கனிமொழி இருக்கிறார் என்று கூறப்பட்டது. இதையடுத்து இதுபோன்ற டி சர்ட்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாக திருப்பூர் டி சர்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

Fact Check: Did Canada PM Justin Trudeau really supports Tamil Nadus protest Against Hindi Imposition?

இந்த நிலையில்தான் கனடா பிரதமரின் போலி புகைப்படமும் வைரலாகி வருகிறது. இவர் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களுடன் இணைந்து வேஷ்டி கட்டி பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடுவார். இது சமூக வலைதளங்களில் வைரலாகும். மேலும், அவரே இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

இந்தி தெரியாது போடா டி ஷர்ட் அணிந்தார் கனடா பிரதமர்

முடிவு

கனடா பிரதமர் ட்ரூடோ இந்தி தெரியாது போடா டி ஷர்ட் அணியவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Did Canada PM Justin Trudeau really supports Tamil Nadu's protest Against Hindi Imposition?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X