For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான் கான் மனைவிக்கு கொரோனாவெல்லாம் இல்லை.. தீயாய் பரவிய வதந்தி.. ஆதாரத்துடன் வெளியான உண்மை!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பிரபல இந்திய செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாக ஒரு தகவல் பரவியது.

Recommended Video

    இம்ரான் கான் மனைவிக்கு கொரோனாவெல்லாம் இல்லை | என்னாது.. அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடா?..

    ஆனால், அதன் உண்மைத் தன்மை குறித்து இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    தொலைக்காட்சி செய்தியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இம்ரான் கான் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பொய் செய்தியை பரப்பியது தற்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவுகிறது

    கொரோனா வைரஸ் பரவுகிறது

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளும் விதி விலக்கல்ல. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,000-ஐ கடந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் 7,200-ஐ கடந்துள்ளது. இரு நாடுகளும் அந்த வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன.

    வதந்தி

    வதந்தி

    ஆனால், இந்த நேரத்திலும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த சில நெட்டின்சன்கள் ஒருவரை ஒருவர் தாக்கியும், கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே யாரோ ஒருவர் பாகிஸ்தான் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வதந்தி பரப்பி உள்ளார்.

    இம்ரான் கான் மனைவிக்கு கொரோனா

    பிரபல இந்தி செய்தி தொலைக்காட்சியான ஆஜ் தக்கின் "பிரேக்கிங் நியூஸ்" பகுதியை புகைப்படம் எடுத்து அதில் மார்பிங் செய்து இந்த பொய் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் இம்ரான் கான் மனைவி புஷ்ரா பிபிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    டிரைவருக்கும் கொரோனா வைரஸ்

    டிரைவருக்கும் கொரோனா வைரஸ்

    மேலும், இம்ரான் கான் டிரைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், இம்ரான் கானுக்கு பரிசோதனை முடிவில் எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளதாக அந்த புகைப்படத்தில் தலைப்பு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

    உண்மை என்ன?

    உண்மை என்ன?

    இந்த பொய் செய்தி வெளியான போது பாகிஸ்தான் மக்கள் சிலர் இதை உண்மை என நம்பி பரப்பத் துவங்கினர். பின் இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி ஆஜ் தக் இணையதளத்திலேயே செய்தி வெளியாகி உள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் என கூறப்பட்டுள்ளது.

    புகைப்பட சொதப்பல்கள்

    புகைப்பட சொதப்பல்கள்

    அந்த புகைப்படத்தில் "பிரேக்கிங் நியூஸ்" என்ற வார்த்தை மேலே பாதி மட்டுமே உள்ளது. அதே போல, ஆஜ் தக் என்ற தொலைக்காட்சி லோகோ மறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஜ் தக் செயலி குறித்து கீழே உள்ள விளம்பரமும் மறைக்கப்பட்டுள்ளது.

    சொதப்பலான மார்பிங்

    சொதப்பலான மார்பிங்

    இந்த சொதப்பலான மார்பிங் வேலைகளை வைத்தே இந்த புகைப்படம் உண்மை இல்லை என்பதும், அதில் உள்ள தகவல் பொய்யான செய்தி என்றும் எளிதாக தெரிய வந்துள்ளது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை என்பதே உண்மை ஆகும்.

    பரவும் வேகம்

    பரவும் வேகம்

    கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகமாக பரவுகிறதோ அதை விட வேகமாக பொய் செய்திகள் பரவி வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். மக்கள் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை அதிகம் பகிர்ந்து வருவதால், பொய் செய்தி பரப்புவோர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

    English summary
    Fact Check : Did Imran Khan wife tested positive for Coronavirus? Here is the truth. It is a false report claimed by a photoshopped breaking news image.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X