For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னாது!.. சுஷாந்த் சிங் கிரிக்கெட் வீரரா?.. அதுவும் ராகுல்காந்தி குறிப்பிட்டாரா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்ததை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில் அவரை திறமையான கிரிக்கெட் வீரர் என குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அது பொய்யான செய்தி. அவர் அது போல் குறிப்பிடவில்லை. திறமையான நடிகர் என்றே குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தனது தோனி பயோபிக் திரைப்படம் மூலம் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த படத்தில் அவரது அபார நடிப்பால் தோனியே இவரை பாராட்டினார்.

இந்த படம் பார்த்த சிலருக்கு அது சுஷாந்தா இல்லை தோனியா என்ற அளவுக்கு சந்தேகம் இருந்தது. இத்தனை திறமையான நடிகர் நேற்று முன் தினம் தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சரசரவென உயர்வு.. 80 ரூபாயை தாண்டியது பெட்ரோல்! சென்னையில் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சரசரவென உயர்வு.. 80 ரூபாயை தாண்டியது பெட்ரோல்!

சோகம்

சோகம்

இதனால் பாலிவுட் நட்சத்திரங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சுஷாந்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, சுஷாந்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

அதில் அவர் சுஷாந்தை கிரிக்கெட் வீரர் என குறிப்பிட்டதாக அவரது ட்வீட்டுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் கிரிக்கெட் வீரராக ஒரு படத்தில் நடித்திருந்தாரே தவிர அவர் கிரிக்கெட் வீரர் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவரது ட்வீட் ஃபேக்ட் செக்கை சேர்ந்த குழுவினர் மீண்டும் சரி பார்த்தனர்.

ட்வீட்

ட்வீட்

அப்போது ராகுல் காந்தி, சுஷாந்தை திறமையான நடிகர் என்றே குறிப்பிட்டதாகவும் அவர் கிரிக்கெட் வீரர் என குறிப்பிடவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் அவரது ட்வீட்டை விஷமிகள் சிலர் மாற்றியுள்ளது தெரியவந்தது. அவர் ட்வீட் போட்ட அதே நேரத்தையும் மாற்றியுள்ளனர்.

Recommended Video

    Sushant Singh இறுதி சடங்கில் கண்கலங்கிய பாலிவுட் பிரபலங்கள்
    முதல்முறையல்ல

    முதல்முறையல்ல

    பொய்யான ட்வீட்டை போடுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜூன் 1-ஆம் தேதி இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். ஒற்றை படை தேதியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் இரட்டை படை தேதிகளில் மாணவர்கள் வர வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்ததாக ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் அந்த ட்வீட் போலி என்பது பின்னர் தெரியவந்தது.

    English summary
    Did Rahul Gandhi call Sushant Singh Rajput as Cricketer in his condolence tweet? No he never.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X