For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதானி கம்பெனிக்கு இந்திய ரயில்வே விற்பனை செய்யப்படவில்லை! உண்மை இதுதான்!

Google Oneindia Tamil News

டெல்லி: அதானியின் நிறுவனத்துக்கு இந்திய ரயில்வே விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக ப்ளாட்பார்ம் டிக்கெட் ஒன்றை முன்வைத்து சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்திகளை ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Recommended Video

    Adani-க்கு Indian Railways விற்கப்பட்டதா? | fake News Buster |Oneindia Tamil

    புனே ரயில் நிலையத்தில் ப்ளாட்பார்ம் டிக்கெட் ரூ50 என அச்சிடப்பட்ட ஒரு படம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதானி குழுமத்துக்கு ரயில்வே துறை விற்பனை செய்யப்பட்டதால்தான் ரூ 5க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் இப்போது ரூ50க்கு விற்கப்படுகிறது என்பது ஷேரிங் செய்திகளின் சாராம்சம்.

    Fact Check: Govt of India has not sold Railways to Adani group

    ஆனால் ரயில்வே நிர்வாகம் இதனை மறுத்ததுடன் புனே ரயில் நிலைய டிக்கெட் குறித்தும் விளக்கம் தந்துள்ளது. கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் புனே ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் அது.

    அதைத்தான் தவறான பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்கிறது ரயில்வே நிர்வாகம். ரயில்வே துறையை அதானிக்கு விற்பனை செய்துவிட்டதாக இடைவிடாமல் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதானி குழும நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்றதை வைத்து கூட அண்மையில் ரயில்வே துறை விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக செய்தி பரவியது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அப்போதும் ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமான மறுப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க்கது.

    Fact Check

    வெளியான செய்தி

    அதானிக்கு இந்திய ரயில்வே துறை விற்பனை

    முடிவு

    கொரோனா காலத்தி விநியோகிக்கப்பட்ட ப்ளாட்பார்ம் டிக்கெட்டை முன்வைத்து பொய் பிரசாரம்

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
    English summary
    Govt of India has clarified that not sold Railways to Adani group.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X