For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fact Check: 2000 ரூபாய் நோட்டு தடை செய்யப்படுவதாக பரவும் தகவல்.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இணைய தளத்தில், இணைய தினம் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை என்றால் 2000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு விட்டதா என்பது பற்றிதான்.

ஏற்கனவே இது போல தகவல்கள் பரவி இருந்தாலும், இன்று மறுபடியும் அது சார்ந்த கூகுள் தேடல்கள் அதிகமாக காணப்பட்டன. இது தொடர்பாக 'ஒன் இந்தியா' சார்பில் பல்வேறு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அனைவருமே 2000 ரூபாய் நோட்டை தடைசெய்யும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Fact Check: Has the Rs. 2,000 note been banned by RBI?

இந்த வதந்திகளுக்கு காரணம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் 2019-20 ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டதுதான். தொடர்ச்சியாக 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இது பெங்களூர் கலவர வீடியோ அல்ல.. மேற்கு வங்கத்தில் நடந்தது.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?இது பெங்களூர் கலவர வீடியோ அல்ல.. மேற்கு வங்கத்தில் நடந்தது.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மறுபக்கம் 500 மற்றும் 200 ரூபாய் நோட்டு தாள்களின் பரிமாற்றம் அதிகரித்துள்ளது.

2020 மார்ச் மாத இறுதியில், மொத்த நோட்டுகளின் அளவில் 2.4 சதவீதமாக இருந்த ரூ .2,000 மதிப்பு நோட்டுக்கள் எண்ணிக்கை 2019 மார்ச் மாத இறுதியில் 3 சதவீதமாகவும், 2018 மார்ச் மாத இறுதியில் 3.3 சதவீதமாகவும் இருந்தது.

2000 ரூபாய் தாளை அச்சடிக்கவில்லையே தவிர, தடை செய்யப்படவில்லை.

Fact Check

வெளியான செய்தி

2000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ளது

முடிவு

ரூ.2000 நோட்டுக்களை ஆர்பிஐ தடை செய்யவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
One of the top searched topics on the internet as of today is has the Rs 2,000 note been banned. Several queries have come in asking if the Rs 2,000 note which was introduced post the decision on demonetisation has been banned or will be banned. A similar query had been raised last year as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X