For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையை டெல்லி அரசு குறைத்து காட்டுகிறதா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையை டெல்லி அரசு குறைத்து காட்டுகிறது, இதில் பொய்யான கணக்கை அரசு காட்டுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலவி வருகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் பெற தொடங்கி உள்ளது. டெல்லியில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் 7000ஐ தாண்டியுள்ளது. 3000க்கும் கீழ் இருந்த தினசரி கேஸ்கள் தற்போது 7000க்கும் அதிகமாக தினமும் பதிவாகி வருகிறது.

Fact Check: Is the Delhi govt giving the right statistics on Coronvirus cases

உலகில் இருக்கும் பெரு நகரங்களில் டெல்லியில்தான் இந்த நவம்பர் மாதம் முழுக்க அதிக அளவில் தினசரி கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதனால் அங்கு இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றும் புகார் வைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையை டெல்லி அரசு குறைத்து காட்டுகிறது, இதில் பொய்யான கணக்கை அரசு காட்டுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனமான Shaheed Bhagat Singh Sewa Dal நிறுவனம் இந்த புகாரை வைத்துள்ளது.

கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையை டெல்லி அரசு குறைத்து காட்டுகிறது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலவி வருகிறது. இந்த நிலையில், இந்த தகவலின் உண்மைதன்மையை சோதனை செய்ததில்..இந்த செய்தி பாதி உண்மை என்பது புலனாகிறது.

அதன்படி டெல்லியில் கடந்த ஜூலையில் மத்திய அரசு மூலம் எடுக்கப்பட்ட செரோ கணக்கெடுப்பில், டெல்லியில் மொத்தம் 23.48% பேருக்கு கொரோனா வந்துவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஜூலை நிலவரப்படி டெல்லியில் 109140 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த மாநில அரசு சொல்கிறது.

அதாவது 0.36% பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக டெல்லி அரசு கூறுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் தற்போது டெல்லி அரசு வெளியிடும் புள்ளி விவரகளிலும் தவறு இருப்பது தெரிகிறது. தற்போது டெல்லி அரசு, டெல்லியில் 5,10,630 கொரோனா கேஸ்கள் இருப்பதாகவும் அதில் 4,59,368 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் செரோ சர்வே கணக்குப்படி பார்த்தால் டெல்லியில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் இருக்கும் என்று புலனாகிறது. இதனால் டெல்லியின் மொத்த கொரோனா எண்ணிக்கை தவறு என்று வெளியாகும் செய்திகள் ஒருவகையில் உண்மையானதுதான்.

Fact Check

வெளியான செய்தி

கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையை டெல்லி அரசு குறைத்து காட்டுகிறது, இதில் பொய்யா கணக்கை அரசு காட்டுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முடிவு

டெல்லியின் மொத்த கொரோனா எண்ணிக்கை தவறு என்று வெளியாகும் செய்திகள் ஒருவகையில் உண்மையானதுதான்.

ரேட்டிங்

Half True
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Is the Delhi govt giving the right statistics on Coronvirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X