For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவைக்கு தடையா? உண்மை என்ன

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரளாவில் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவைக்கு தடைவிதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது. மக்களே இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ டவரை பஞ்சாப் விவசாயிகள் எரித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வேகமாக பரவியது. அதுவும் உண்மை இல்லை. டெல்லி போராட்டத்தை மையப்படுத்தி பழைய புகைப்படங்களை வெளியிட்டு இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவது தெரியவந்துள்ளது.

fact check: Kerala government has not banned Reliance Jio Internet

இதற்கிடையில், மாநிலத்தில் ஜியோ இணைய சேவைகளை கேரளா தடை செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில். பிரதமர் மோடி மற்றும் முகேஷ் அம்பானிக்கு கேரள கம்யூனிச அரசு சரியான பதிலடி கொடுத்துள்ளது. ஜியோ இணைய சேவைக்கு தடை விதித்துள்ள கேரள அரசு அதற்கு பதில் ஜியோ தரும் விலையை விட பாதி விலையில் கேரள ஃபைபர் நெட்டை மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு முற்றிலும் பொய்யானது. கேரள அரசு ஜியோவை தடை செய்யவில்லை, மேலும் கேரள அரசு தனது சொந்த இணைய சேவையையும் தொடங்கவில்லை. கேரளா ஜியோவை தடை செய்திருந்தால், அது நிச்சயமாக தலைப்புச் செய்தியாகி இருக்கும். அப்படியான எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.

உண்மையில், கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணைய சேவைகளை வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடன் கூட்டுசேர அரசு திட்டமிட்டுள்ளது. விதிகளின்படி பார்த்தால்,. மாநில அரசாங்கத்தால் எந்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்கையும் தடை செய்ய முடியாது. ஒவ்வொரு சேவை வழங்குநருக்கும் எந்த மாநிலத்திலும் செயல்பட சம உரிமை உண்டு. எனவே மாநிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ இணையத்தை கேரளா தடை செய்துள்ளது என்ற தகவல் பொய்யானது.

Fact Check

வெளியான செய்தி

கேரள அரசு ஜியோ இணைய சேவையை தடை செய்தது

முடிவு

மாநில அரசாங்கத்தால் எந்த தொலைத் தொடர்பு நெட்வொர்க்கையும் தடை செய்ய முடியாது

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
a false claim on social media that Kerala has banned Jio internet services in the state. One user said that a fitting reply has been given to PM Modi and Mukesh Ambani by the communist government in Kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X