For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பணம் வாங்கினார்களா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: ஷாஹீன் பாக் போராட்டங்களில் பங்கேற்ற பெண்கள் பணம் வாங்கியதாக வெளியான வீடியோ போலியானது என்பது தெரியவந்துள்ளது. ஷாஹீன் பாக் போராட்டங்களில் பங்கேற்ற சிலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், திட்டமிட்டு வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் உள்ள பெண்கள் டெல்லி கலவரத்தின் போது நிவாரணத்தை வாங்கியவர்கள் என்பது தெரியவந்துள்ளது

ஷாஹீன் பாக் போராட்டங்களின் போது வைரலாகிவிட்ட வீடியோ மீண்டும் ட்விட்டரில் வெளிவந்துள்ளது. ட்விட்டரில் xExSecular என்ற பெயரில் உள்ள ஒருவர், பல முஸ்லீம் பெண்கள் வரிசையில் நின்று பணம் பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ள பெண்கள் ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.. இந்த வீடியோ "#ஷாஹீன் பாக்ஸின் டாடிஸ் மற்றும் நன்னிஸ்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஷாஹீன் பாக் ஆர்வலர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டங்களை பாஜக திட்டமிட்டு நடத்தியதாக டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்த போது போலியான வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

 கேரளா பாஜக எம்பியின் தாய் கொரோனாவால் இறக்கவும் இல்லை- விதிகள் மீறலும் இல்லை- பரவியது பொய் செய்தி! கேரளா பாஜக எம்பியின் தாய் கொரோனாவால் இறக்கவும் இல்லை- விதிகள் மீறலும் இல்லை- பரவியது பொய் செய்தி!

பொய்யானது

பொய்யானது

இந்த பழைய வீடியோ ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடையது அல்ல. ஷாஹீன் பாக் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள பழைய முஸ்தபாபாத்தில் டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வீடியோ என்பது தெரியவந்துள்ளது. வீடியோவின் கீஃப்ரேம்களில் ஒன்றின் படத்தை வைத்து தேடிய போது பல ஊடகங்களில் நிவாரணம் வழங்கும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 23 முதல் ஆறு நாட்கள் நடந்த டெல்லி கலவரத்தில் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த பழைய முஸ்தபாபாத்தைச் சேர்ந்த பாபு நகர் மற்றும் சிவாநகரில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வீடியோவாகும்.

நிவாரண வீடியோ

நிவாரண வீடியோ

உண்மையில் இந்த வீடியோவை சமூக ஆர்வலர் சந்திர மோகனால் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டிருக்கிறார். நிவாரணம் வழங்கப்படுவதை குறிப்பிட்டு விரிவான அறிக்கையுடன் பேஸ்புக் வீடியோவை வெளியிட்டார். அவர் அந்த இடத்திலேயே ஒரு பேஸ்புக் வீடியோவைப் பதிவுசெய்து, அந்த வீடியோவில் பணத்தை விநியோகிப்பதைக் கண்ட ஷாஜாத் மாலிக் உடன் பேசியிருக்கிறார்- பாபு நகரில் டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நிவாரண விநியோகம் தொடர்பாக இந்த வைரல் வீடியோ தொடர்புடையது என்பதையும் சந்திர மோகன் உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம்

நிவாரணப் பொருட்கள் தீர்ந்ததும், மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலிக் ரூ .70,000 பணத்தை விநியோகித்தார். "இந்த மனிதர் [மாலிக்] ஒரு பெரிய இதயம் கொண்டவர். அவர் தனது சொந்த பணத்தில் ரூ .70,000 கொடுத்தார். அவர் ஒவ்வொரு நபருக்கும் ரூ .500 கொடுத்தார், "என்றும் சந்திர மோகன்.கூறினார். க்வின்ட் தளம் மார்ச் 4, 2020 அன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோவில் பணத்தை விநியோகித்த ஷாஜாத் மாலிக் தி க்விண்ட் தளத்துடன் பேசியுள்ளார்.

வாங்கிய பெண்கள்

வாங்கிய பெண்கள்

"சில நிவாரணப் பொருட்கள் ஜாமியாவிலிருந்து வந்தன, நாங்கள் அதைப் பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். அதை எடுக்க பல பெண்கள் வந்தார்கள். ஆனால் பொருட்கள் முடிந்ததும், சில பெண்கள் வெளியேறினர். எனவே அவர்களுக்கு தலா ரூ .500 கொடுத்தேன் "என்று அவர் குயின்ட்டிடம் கூறியிருக்கிறார்.

நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஷாஹீன் பாக் உள்ளிருப்பு ஆகியவற்றின் தீவிரத்தன்மையின் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வீடியோ வைரலாகியது. ஆனால். சமூக ஊடகங்களில் பல முக்கிய நபர்கள் இந்த வீடியோவின் மீது தவறான தகவல்களை பதிவிட்டு பகிர்ந்துள்ளனர். எனவே ஷாகின் பாக்கில் போராடியவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் தகவலில் துளியும் உண்மை இல்லை. இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். உண்மையை சரிபார்க்காமல் எதையும் நம்பாதீர்கள்.

English summary
Fact Check: old video is NOT related to Shaheen Bagh protestors. It is a video of relief distribution to victims of Delhi riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X